Chapter 4

Thirukkannapuram 4 - (விண்ணவர்-தங்கள் பெருமான்)

திருக்கண்ணபுரம் 4
Thirukkannapuram 4 - (விண்ணவர்-தங்கள் பெருமான்)
The āzhvār implores the bee, "O bee! Go and circle around the sacred Tulasi garland on the divine head of Sowriraja Perumal, who resides in Thirukannapuram, and return to hum near me." This section is referred to as "Kol Thumbi," where "Thumbi" denotes a type of bee.
வண்டே! திருக்கண்ணபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் சவுரிராஜப் பெருமாளின் திருமுடியின்மீதுள்ள திருத்துழாய் மாலையைச் சுற்றிச் சுற்றி வந்து ஊது என்று ஆழ்வார் வண்டினை வேண்டுகிறார். கோல்தும்பி என்று இப்பகுதி குறிப்பிடப்படும். தும்பி என்பது வண்டினங்களுள் ஒரு வகை.
Verses: 1678 to 1687
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
  • PT 8.4.1
    1678 ## விண்ணவர் தங்கள் பெருமான் * திருமார்வன் *
    மண்ணவர் எல்லாம் வணங்கும் * மலி புகழ் சேர் **
    கண்ணபுரத்து எம் பெருமான் * கதிர் முடிமேல் *
    வண்ண நறுந் துழாய் * வந்து ஊதாய் கோல் தும்பீ 1
  • PT 8.4.2
    1679 வேத முதல்வன் * விளங்கு புரி நூலன் *
    பாதம் பரவிப் * பலரும் பணிந்து ஏத்தி **
    காதன்மை செய்யும் * கண்ணபுரத்து எம் பெருமான் *
    தாது நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 2
  • PT 8.4.3
    1680 விண்ட மலர் எல்லாம் * ஊதி நீ என் பெறுதி? *
    அண்ட முதல்வன் * அமரர்கள் எல்லாரும் **
    கண்டு வணங்கும் * கண்ணபுரத்து எம் பெருமான் *
    வண்டு நறுந் துழாய் * வந்து ஊதாய் கோல் தும்பீ 3
  • PT 8.4.4
    1681 நீர் மலிகின்றது ஓர் * மீன் ஆய் ஓர் ஆமையும் ஆய் *
    சீர் மலிகின்றது ஓர் * சிங்க உரு ஆகி **
    கார் மலி வண்ணன் * கண்ணபுரத்து எம் பெருமான் *
    தார் மலி தண் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 4
  • PT 8.4.5
    1682 ஏர் ஆர் மலர் எல்லாம் * ஊதி நீ என் பெறுதி? *
    பார் ஆர் உலகம் * பரவ பெருங் கடலுள் **
    கார் ஆமை ஆன * கண்ணபுரத்து எம் பெருமான் *
    தார் ஆர் நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 5
  • PT 8.4.6
    1683 மார்வில் திருவன் * வலன் ஏந்து சக்கரத்தன் *
    பாரைப் பிளந்த * பரமன் பரஞ்சோதி **
    காரில் திகழ் * காயா வண்ணன் கதிர் முடிமேல் *
    தாரில் நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 6
  • PT 8.4.7
    1684 வாமனன் கற்கி * மதுசூதன் மாதவன் *
    தார் மன்னு * தாசரதி ஆய தடமார்வன் **
    காமன் தன் தாதை * கண்ணபுரத்து எம் பெருமான் *
    தாம நறுந் துழாய் * தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ 7
  • PT 8.4.8
    1685 நீல மலர்கள் * நெடு நீர் வயல் மருங்கில் *
    சால மலர் எல்லாம் * ஊதாதே ** வாள் அரக்கர்
    காலன் * கண்ணபுரத்து எம் பெருமான் கதிர் முடிமேல் *
    கோல நறுந் துழாய் * கொண்டு ஊதாய் கோல் தும்பீ 8
  • PT 8.4.9
    1686 நந்தன் மதலை * நில மங்கை நல் துணைவன் *
    அந்தம் முதல்வன் * அமரர்கள் தம் பெருமான் **
    கந்தம் கமழ் * காயா வண்ணன் கதிர் முடிமேல் *
    கொந்து நறுந் துழாய் * கொண்டு ஊதாய் கோல் தும்பீ 9
  • PT 8.4.10
    1687 ## வண்டு அமரும் சோலை * வயல் ஆலி நல் நாடன் *
    கண்ட சீர் வென்றிக் * கலியன் ஒலி மாலை **
    கொண்டல் நிற வண்ணன் * கண்ணபுரத்தானை *
    தொண்டரோம் பாட * நினைந்து ஊதாய் கோல் தும்பீ 10