PT 8.4.2

சவுரிராஜனின் திருத்துழாளைய ஊது

1679 வேதமுதல்வன் விளங்குபுரிநூலன் *
பாதம்பரவிப் பலரும்பணிந்தேத்தி *
காதன்மைசெய்யும் கண்ணபுரத்தெம்பெருமான் *
தாதுநறுந்துழாய் தாழ்ந்தூதாய்கோல்தும்பீ!
1679 veta mutalvaṉ * vil̤aṅku puri nūlaṉ *
pātam paravip * palarum paṇintu etti **
kātaṉmai cĕyyum * kaṇṇapurattu ĕm pĕrumāṉ *
tātu naṟun tuzhāy * tāzhntu ūtāy-kol tumpī-2

Ragam

Kamās / கமாஸ்

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

1679. She says, “O kol bee, come and blow on the fragrant thulasi garland of the ancient god who created the Vedās, and is adorned with a shining thread on his chest. He stays in Thirukkannapuram as his devotees praise his feet, worship and love him. has not come to see me. What can I do? The hot sun that burned me has gone to sleep and I am pitiful. My long eyes do not close and this dark night is longer than an eon. When will it pass? I do not know. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேத முதல்வன் வேத முதல்வனாய்; விளங்கு புரி நூலன் பூணூல் தரித்தவனாய்; பலரும் பாதம் பரவி எல்லாரும் உன் திருவடிகளை; பணிந்து ஏத்தி வணங்கித் துதித்து; காதன்மை பக்தி; செய்யும் பண்ணுவதற்கு உரியனான; கண்ணபுரத்து கண்ணபுரத்து; எம் பெருமான் எம் பெருமானின்; தாது நறும் தாதுக்களையுடைய மணம் மிக்க; துழாய் துளசியில்; தாழ்ந்து படிந்துள்ள நறுமணத்தை கொண்டு வந்து; கோல் தும்பீ! கொம்புகளில் திரிகின்றவண்டே!; ஊதாய் நீ ஊதுவாய்