Chapter 7

Thiruvarangam 4 - (பண்டை நான்மறையும்)

திருவரங்கம் 4
Thiruvarangam 4 - (பண்டை நான்மறையும்)
These verses also speak of the glories of Lord Ranganatha.
ஈண்டுள்ள பாசுரங்களும் திருவரங்கனின் பெருமைகளைக் கூறுகின்றன.
Verses: 1408 to 1417
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will not get affected by the results of bad karma
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 5.7.1

1408 பண்டைநான்மறையும்வேள்வியும்கேள்விப்
பதங்களும்பதங்களின்பொருளும் *
பிண்டமாய்விரித்தபிறங்கொளியனலும்
பெருகியபுனலொடுநிலனும் *
கொண்டல்மாருதமும்குரைகடலேழும்
ஏழுமாமலைகளும்விசும்பும் *
அண்டமும்தானாய்நின்றஎம்பெருமான்
அரங்கமாநகரமர்ந்தானே. (2)
1408 ## பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் *
பதங்களும் பதங்களின் பொருளும் *
பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும் *
பெருகிய புனலொடு நிலனும் **
கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும் *
ஏழு மா மலைகளும் விசும்பும் *
அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 1
1408 ## paṇṭai nāṉmaṟaiyum vel̤viyum kel̤vip *
pataṅkal̤um pataṅkal̤iṉ pŏrul̤um *
piṇṭam āy virinta piṟaṅku ŏl̤i aṉalum *
pĕrukiya puṉalŏṭu nilaṉum **
kŏṇṭal mārutamum kurai kaṭal ezhum *
ezhu mā malaikal̤um vicumpum *
aṇṭamum tāṉ āy niṉṟa ĕm pĕrumāṉ * -
araṅka mā nakar amarntāṉe-1

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1408. Our dear lord who is the ancient four Vedās, the sacrifice, question, answer and the meaning of all, shining fire, abundant water, earth, cloud, wind, the seven roaring oceans, the seven mountains, the sky and the earth stays in Thiruvarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பண்டை தொன்மையான; நான் மறையும் நான்கு வேதங்களும்; வேள்வியும் யாகங்களும்; கேள்வி கேட்டு அறிய வேண்டிய; பதங்களும் வியாகரணமும்; பதங்களின் பதங்களின்; பொருளும் பொருளும்; பிண்டமாய் காரணமாயிருந்து; விரிந்த பின் கார்யமாய் விரிந்த; பிறங்கு ஒளி மிகுந்த ஒளியையுடைய; அனலும் அக்னியும்; பெருகிய புனலொடு பெருகும் நீரோடு; நிலனும் கூடின நிலமும்; கொண்டல் மாருதமும் மேகமும் காற்றும்; குரை கடல் ஏழும் சப்திக்கும் ஏழு கடல்களும்; ஏழு மா மலைகளும் ஏழு பெரிய மலைகளும்; விசும்பும் ஆகாசமும்; அண்டமும் அண்டமும் தானே; தான் ஆய் அனைத்துக்குள்ளும்; நின்ற இருக்கும்; எம் பெருமான் எம்பெருமான்; அரங்கம் திருவரங்கம்; மா நகர் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தான்

PT 5.7.2

1409 இந்திரன்பிரமன்ஈசனென்றிவர்கள்
எண்ணில்பல்குணங்களே இயற்ற *
தந்தையும்தாயும்மக்களும் மிக்க
சுற்றமும்சுற்றிநின்றகலாப்
பந்தமும் * பந்தமறுப்பதோர்மருந்தும்
பான்மையும் பல்லுயிர்க்கெல்லாம் *
அந்தமும்வாழ்வுமாய எம்பெருமான்
அரங்கமாநகரமர்ந்தானே.
1409 இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் *
எண் இல் பல் குணங்களே இயற்ற *
தந்தையும் தாயும் மக்களும் மிக்க
சுற்றமும் * சுற்றி நின்று அகலாப்
பந்தமும் ** பந்தம் அறுப்பது ஓர் மருந்தும்
பான்மையும் * பல் உயிர்க்கு எல்லாம் *
அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 2
1409 intiraṉ piramaṉ īcaṉ ĕṉṟu ivarkal̤ *
ĕṇ il pal kuṇaṅkal̤e iyaṟṟa *
tantaiyum tāyum makkal̤um mikka
cuṟṟamum * cuṟṟi niṉṟu akalāp
pantamum ** pantam aṟuppatu or maruntum
pāṉmaiyum * pal uyirkku ĕllām *
antamum vāzhvum āya ĕm pĕrumāṉ * -
araṅka mā nakar amarntāṉe-2

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1409. The dear lord with the countless good qualities of Indra, Nānmuhan and Shivā, our father, mother, children, relatives who will not abandon us, the remedy that removes our desires, the nature of all and the end and life for all creatures stays in Thiruvarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
இந்திரன் பிரமன் இந்திரன் பிரமன்; ஈசன் என்று ஈசன் என்று; இவர்கள் இவர்கள் எம்பெருமானின்; எண்ணில் பல் கணக்கில்லாத பல; குணங்களே குணங்களை; இயற்ற பாடி துதிப்பவர்களுக்கும்; பல் உயிர்க்கு உயிரினங்களுக்கு; எல்லாம் எல்லாம்; தந்தையும் தாயும் தந்தையும் தாயும்; மக்களும் மக்களும்; மிக்க சுற்றமும் மிக்க சுற்றமும்; சுற்றி நின்று அகலா மற்றும் அகலாத; பந்தமும் சுற்றதாருக்கும்; பந்தம் வாழ்க்கை என்னும் பந்தத்தை; அறுப்பது அறுக்கவல்ல; ஓர் மருந்தும் ஓர் மருந்தும்; பான்மையும் ஸ்ருஷ்டியும்; அந்தமும் வாழ்வும் வாழ்வும் விநாசமும்; ஆய ஆகிய அனைத்துக்கும்; எம் பெருமான் காரணமான பெருமான்; அரங்கம் திருவரங்கம்; மா நகர் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தான்

PT 5.7.3

1410 மன்னுமாநிலனும்மலைகளும்கடலும்
வானமும்தானவருலகும் *
துன்னுமாயிருளாய்த்துலங்கொளிசுருங்கித்
தொல்லைநான்மறைகளும்மறைய *
பின்னும்வானவர்க்கும்முனிவர்க்கும்நல்கிப்
பிறங்கிருள்நிறங்கெட * ஒருநாள்
அன்னமாய்ன்றங்கருமறைபயந்தான்
அரங்கமாநகரமர்ந்தானே.
1410 மன்னு மா நிலனும் மலைகளும் கடலும் *
வானமும் தானவர் உலகும் *
துன்னு மா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கித் *
தொல்லை நான்மறைகளும் மறைய **
பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கிப் *
பிறங்கு இருள் நிறம் கெட * ஒருநாள்
அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 3
1410 maṉṉu mā nilaṉum malaikal̤um kaṭalum *
vāṉamum tāṉavar ulakum *
tuṉṉu mā irul̤ āy tulaṅku ŏl̤i curuṅkit *
tŏllai nāṉmaṟaikal̤um maṟaiya **
piṉṉum vāṉavarkkum muṉivarkkum nalkip *
piṟaṅku irul̤ niṟam kĕṭa * ŏrunāl̤
aṉṉam āy aṉṟu aṅku aru maṟai payantāṉ *
-araṅka mā nakar amarntāṉe-3

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1410. When the everlasting earth, the mountains, the oceans, the sky and the world of Danavas became dark without any light and the ancient four Vedās were stolen he took the form of a swan, brought them from the underworld and taught them to the gods and the sages. He gave them his grace and the darkness that covered their knowledge was removed. He our dear lord stays in divine Thiruvarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மன்னு திடமான; மா நிலனும் பெரிய பூமியும்; மலைகளும் மலைகளும்; கடலும் கடலும்; வானமும் வானமும்; தானவர் உலகும் அசுரர்கள் உலகமும்; துன்னு அடர்ந்த; மா இருளாய் பேரிருளாய்; துலங்கு ஒளி பிரகாசிக்கும் ஒளி; சுருங்கி சுருங்கி; தொல்லை அநாதியான; நான் மறைகளும் மறைய வேதங்களும் மறைய; பின்னும் வானவர்க்கும் மீண்டும் தேவர்களுக்கும்; முனிவர்க்கும் நல்கி முனிவர்க்கும் நன்மை புரிய; பிறங்கு இருள் நிறம் கெட அடர்ந்த இருள் நீங்க; அன்று ஒருநாள் அன்று ஒருநாள்; அன்னமாய் அன்னமாய் அவதரித்து; அங்கு அருமறை அரிய வேதங்களை; பயந்தான் அவர்களுக்குக் கொடுத்தவன்; அரங்க திருவரங்கம்; மா நகர் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தான்

PT 5.7.4

1411 மாயிருங்குன்றமொன்றுமத்தாக
மாசுணமதனொடும்அளவி *
பாயிரும்பௌவம்பகடுவிண்டலறப்
படுதிரைவிசும்பிடைப்படர *
சேயிருவிசும்பும்திங்களும்சுடரும்
தேவரும்தாமுடன்திசைப்ப *
ஆயிரந்தோளால்அலைகடல்கடைந்தான்
அரங்கமாநகரமர்ந்தானே.
1411 மா இருங் குன்றம் ஒன்று மத்து ஆக *
மாசுணம் அதனொடும் அளவி *
பா இரும் பௌவம் பகடு விண்டு அலறப் *
படு திரை விசும்பிடைப் படர **
சேய் இரு விசும்பும் திங்களும் சுடரும் *
தேவரும் தாம் உடன் திசைப்ப *
ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 4
1411 mā iruṅ kuṉṟam ŏṉṟu mattu āka *
mācuṇam ataṉŏṭum al̤avi *
pā irum pauvam pakaṭu viṇṭu alaṟap *
paṭu tirai vicumpiṭaip paṭara **
cey iru vicumpum tiṅkal̤um cuṭarum *
tevarum tām uṭaṉ ticaippa *
āyiram tol̤āl alai kaṭal kaṭaintāṉ * -
araṅka mā nakar amarntāṉe-4

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1411. Using Mandara mountain as a churning stick and Vāsuki the snake as a rope, when he churned the wave-filled milky ocean with his thousand arms, the sound of the churning rose to the sky roaring, the waves rose high and touched the sky and everything there, the moon, the sun and all the gods, saw it and were amazed. He stays in divine Thiruvarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
மா இருங் அகன்றும் உயர்ந்தும்; குன்றம் ஒன்று இருக்கும் மந்திர மலையை; மத்து ஆக மத்தாகக் கொண்டு; மாசுணம் வாசுகி என்னும் பாம்பை; அதனொடும் அம்மலையிலே; அளவி கயிறாகச் சுற்றி; பா இரும் பரந்தும் நீண்டும்; பெளவம் இருக்கிற கடல்; பகடு விண்டு யானை பிளிறுமா போலே; அலற பிளிறவும் அதனால்; படு திரை உண்டான அலைகள்; விசும்பிடை ஆகாசத்தின் நடுவே; படர வியாபிக்கவும்; சேய் உயரத்திலுள்ள; இரு விசும்பும் தேவலோகமும்; திங்களும் சுடரும் சந்திரனும் சூரியனும்; தேவரும் தாம் தேவர்களும்; உடன் ஒரே சமயத்தில்; திசைப்ப ஆச்சர்யமடைய; அலைகடல் அலைகடலை நான்கு தோள்களால்; ஆயிரம் தோளால் ஆயிரம் தோள் போல் தோன்றக்; கடைந்தான் கடைந்தவன்; அரங்க திருவரங்கம்; மா நகர் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தான்

PT 5.7.5

1412 எங்ஙானேயுய்வர்? தானவர்நினைந்தால்
இரணியனிலங்குபூணகலம் *
பொங்குவெங்குருதிபொன்மலைபிளந்து
பொழிதரும்அருவியொத்திழிய *
வெங்கண்வாளெயிற்றோர்வெள்ளிமாவிலங்கல்
விண்ணுறக்கனல்விழித்தெழுந்தது *
அங்ஙனேயொக்கஅரியுருவானான்
அரங்கமாநகரமர்ந்தானே.
1412 எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்? *
இரணியன் இலங்கு பூண் அகலம் *
பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து *
பொழிதரும் அருவி ஒத்து இழிய **
வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல் *
விண் உறக் கனல் விழித்து எழுந்தது *
அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 5
1412 ĕṅṅaṉe uyvar tāṉavar niṉaintāl? *
-iraṇiyaṉ ilaṅku pūṇ akalam *
pŏṅku vĕm kuruti pŏṉmalai pil̤antu *
pŏzhitarum aruvi ŏttu izhiya **
vĕm kaṇ vāl̤ ĕyiṟṟu or vĕl̤l̤i mā vilaṅkal *
viṇ uṟak kaṉal vizhittu ĕzhuntatu *
aṅṅaṉe ŏkka ari uru āṉāṉ * -
araṅka mā nakar amarntāṉe-5

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1412. How could the Asurans survive even if they wanted to? He took the form of a man-lion, went to Hiranyan and split open his shining chest ornamented with jewels making his hot blood splash everywhere like a waterfalls that drops from a golden hill and breaks the earth, and the lord was like a large silver mountain in the sky with shining teeth and cruel eyes that had woken up from its sleep. He our dear lord stays in divine Thiruvarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
தானவர் அசுரர்கள் இரணிய; நினைந்தால் வதத்தை நினைந்தால்; எங்ஙனே எப்படி; உய்வர் உயிர் வாழ்வார்கள்; இரணியன் இரணியனின்; பூண் ஆபரணங்களணிந்த; இலங்கு அகலம் மார்பிலிருந்து; பொங்கு வெம் பொங்கும் உஷ்ணமான; குருதி ரத்தமானது; பொன் மலை பொன் மலையை; பிளந்து பிளந்து கொண்டு; பொழிதரும் அருவி வெள்ளமிடும் அருவி; ஒத்து இழிய போன்று பெருக; வெம் கண் சிவந்த கண்களையும்; வாள் வாள் போன்ற; எயிற்று ஓர் பற்களையும் உடைய ஒரு; வெள்ளி மா விலங்கல் பெரிய வெள்ளி மலை; விண் உறக் ஆகாசத்திலிருந்து; கனல்விழித்து தீவிழிவிழித்து; எழுந்தது அங்ஙனே ஒக்க எழுந்தது போல்; அரி உரு ஆனான் நரசிம்மமாய் அவதரித்தவன்; அரங்க மா நகர் திருவரங்கம் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தான்

PT 5.7.6

1413 ஆயிரம்குன்றம்சென்றுதொக்கனைய
அடல்புரைஎழில்திகழ்திரள்தோள் *
ஆயிரந்துணியஅடல்மழுப்பற்றி
மற்றவனகல்விசும்பணைய *
ஆயிரம்பெயரால்அமரர்சென்றிறைஞ்ச
அறிதுயிலலைகடல்நடுவே *
ஆயிரம்சுடர்வாய்அரவணைத்துயின்றான்
அரங்கமாநகரமர்ந்தானே.
1413 ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய *
அடல் புரை எழில் திகழ் திரள் தோள் *
ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி *
மற்று அவன் அகல் விசும்பு அணைய **
ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச *
அறிதுயில் அலை கடல் நடுவே *
ஆயிரம் சுடர் வாய் அரவு அணைத் துயின்றான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 6
1413 āyiram kuṉṟam cĕṉṟu tŏkkaṉaiya *
aṭal purai ĕzhil tikazh tiral̤ tol̤ *
āyiram tuṇiya aṭal mazhup paṟṟi *
maṟṟu avaṉ akal vicumpu aṇaiya **
āyiram pĕyarāl amarar cĕṉṟu iṟaiñca *
aṟituyil alai kaṭal naṭuve *
āyiram cuṭar vāy aravu-aṇait tuyiṉṟāṉ * -
araṅka mā nakar amarntāṉe-6

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1413. The lord who rests in the middle of the ocean rolling with waves on the thousand-headed Adisesha as the gods praise him with his thousand names fought with his strong axe and cut off the thousand arms of Vānāsuran who was as large as a thousand hills joined together. He our dear lord stays in divine Thiruvarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஆயிரம் குன்றம் ஆயிரம் மலைகள்; தொக்கனைய சேர்ந்து அடர்ந்து; சென்று வந்தது போல்; அடல் புரை போர் புரிய தகுந்த; எழில் திகழ் அழகிய கார்த்தவீரியனது; திரள் தோள் தோள்கள்; ஆயிரம் துணிய ஆயிரம் அறும்படியாக; அடல் மழு போரில் மழுவை; பற்றி கையில் பற்றி; மற்று அந்த; அவன் அகல் கார்த்தவீரியார்ஜுநனை; விசும்பு ஸ்வர்க்கம் அடைய; அணைய செய்த பெருமானை; அமரர் தேவர்கள்; ஆயிரம் பெயரால் ஆயிரம் நாமங்களால்; சென்று இறைஞ்ச சென்று துதிக்க; அலை கடல் அலைகடல்; நடுவே சுடர் நடுவில் ஒளிமயமான; அறிதுயில் யோக நித்திரை பண்ணும் பெருமான்; ஆயிரம் வாய் ஆயிரம் முகமுடைய; அரவு அணைத் ஆதி சேஷன் மீது; துயின்றான் துயின்றவன்; அரங்க திருவரங்கம்; மா நகர் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தான்

PT 5.7.7

1414 சுரிகுழல்கனிவாய்த்திருவினைப்பிரித்த
கொடுமையிற்கடுவிசையரக்கன் *
எரிவிழித்திலங்குமணிமுடிபொடிசெய்து
இலங்கைபாழ்படுப்பதற்கெண்ணி *
வரிசிலைவளைய அடிசரம்துரந்து
மறிகடல்நெறிபட * மலையால்
அரிகுலம்பணிகொண்டுஅலைகடலடைத்தான்
அரங்கமாநகரமர்ந்தானே.
1414 சுரி குழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த *
கொடுமையின் கடு விசை அரக்கன் *
எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து *
இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி *
வரி சிலை வளைய அடு சரம் துரந்து *
மறி கடல் நெறிபட * மலையால்
அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 7
1414 curi kuzhal kaṉi vāyt tiruviṉaip piritta *
kŏṭumaiyiṉ kaṭu vicai arakkaṉ *
ĕrivizhittu ilaṅkum maṇi muṭi pŏṭicĕytu *
ilaṅkai pāzhpaṭuppataṟku ĕṇṇi *
vari cilai val̤aiya aṭu caram turantu *
maṟi kaṭal nĕṟipaṭa * malaiyāl
arikulam paṇikŏṇṭu alai kaṭal aṭaittāṉ * -
araṅka mā nakar amarntāṉe-7

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1414. When the Rākshasa Rāvana took his wife Seetha with curling hair and a mouth sweet as a fruit, Rāma suffered and angrily decided to destroy Lankā and crush the diamond-studded crowns of Rāvana. He dammed the water by shooting arrows at the wavy ocean and with the help of the monkeys he made a bridge with large stones. He our dear lord stays in divine Thiruvarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
சுரி குழல் சுருண்ட கூந்தலையும்; கனி வாய் சிவந்த அதரத்தையும்; திருவினை உடைய ஸீதையை; எரிவிழித்து க்ரூரமாகப் பார்த்து; பிரித்த பிரித்த ராவணனின்; கொடுமையின் கொடுமை; கடுவிசை அரக்கன் மிக்க அரக்கனின்; இலங்கு ஒளி மிக்க; மணி முடி ரத்தினமயமான கிரீடங்களை; பொடிசெய்து பொடிசெய்து; இலங்கை இலங்கையை; பாழ் படுப்பதற்கு பாழாக்க; எண்ணி ஸங்கல்பித்து; வரி சிலை அழகிய வில்லை; வளைய வளைத்து; அடு சரம் கொல்லவல்ல அம்புகளை; துரந்து பிரயோகித்து; மறி கடல் அலை கடல்; நெறி பட வழிவிட்டு அமைந்திட; அரி குலம் வாநர கூட்டங்கள்; பணி கொண்டு கைங்கரியம் செய்ய; அலைகடல் அலைகடலை; மலையால் மலைகளால்; அடைத்தான் அடைத்தவன்; அரங்க திருவரங்கம்; மா நகர் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தான்

PT 5.7.8

1415 ஊழியாய்ஓமத்துச்சியாய் ஒருகா
லுடையதேரொருவனாய் * உலகில்
சூழிமால்யானைத்துயர்கெடுத்து
இலங்கைமலங்கஅன்றுஅடுசரந்துரந்து *
பாழியால்மிக்கபார்த்தனுக்கருளிப்
பகலவனொளிகெட * பகலே
ஆழியால்அன்றங்குஆழியைமறைத்தான்
அரங்கமாநகரமர்ந்தானே.
1415 ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் * ஒருகால்
உடைய தேர் ஒருவன் ஆய் * உலகில்
சூழி மால் யானைத் துயர் கெடுத்து * இலங்கை
மலங்க அன்று அடு சரம் துரந்து **
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளிப் *
பகலவன் ஒளி கெட * பகலே
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 8
1415 ūzhi āy omattu ucci āy * ŏrukāl
uṭaiya ter ŏruvaṉ āy * ulakil
cūzhi māl yāṉait tuyar kĕṭuttu * ilaṅkai
malaṅka aṉṟu aṭu caram turantu **
pāzhiyāl mikka pārttaṉukku arul̤ip *
pakalavaṉ ŏl̤i kĕṭa * pakale
āzhiyāl aṉṟu aṅku āzhiyai maṟaittāṉ * -
araṅka mā nakar amarntāṉe-8

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-24

Divya Desam

Simple Translation

1415. The god who is the eon, the lord of all the sacrifices and the lord of the sun that moves on a one-wheeled chariot, saved Gajendra when he was caught by a crocodile. He shot his mighty arrows and destroyed Lankā and he threw his discus and hid the sun during the day in the Bhārathā war and gave his grace to strong Arjunā. He, our dear lord, stays in divine Thiruvarangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
ஊழி ஆய் காலத்தை இயக்குபவனும்; ஓமத்து ஹோமத்துக்கு; உச்சியாய் ஆராத்யனான தலைவனும்; ஒருகால் ஒற்றை; உடைய தேர் சக்கரத்தேரையுடைய; ஒருவனாய் சூரியனுக்கு உள்ளே உறைபவனும்; உலகில் சூழி உலகில் பலமுள்ள; மால் யானை பெரிய யானையின்; துயர் கெடுத்து துயர் கெடுத்தவனும்; அன்று இலங்கை அன்று இலங்கை; மலங்க பாழாகும்படி; அடு சரம் கொல்லவல்ல அம்புகளை; துரந்து பிரயோகித்தவனும்; பாழியால் மிக்க வலிமைமிக்க; பார்த்தனுக்கு அர்ஜுநனுக்கு; அருளி அருள் செய்தவனும்; பகலவன் ஸூர்ய; ஒளி கெட ஒளிமங்கும்படி; பகலே அன்று பகலை; அன்று அங்கு அந்த பாரத யுத்தத்திலே; ஆழியால் சக்கராயுதத்தினால்; ஆழியை ஸூரியனை; மறைத்தான் மறைத்தவனுமான பெருமான்; அரங்க திருவரங்கம்; மா நகர் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தான்

PT 5.7.9

1416 பேயினார்முலையூண்பிள்ளையாய் ஒருகால்
பெருநிலம்விழுங்கி * அதுமிழ்ந்த
வாயனாய்மாலாய்ஆலிலைவளர்ந்து
மணிமுடிவானவர்தமக்குச்
சேயனாய் * அடியேற்குஅணியனாய்வந்து
என்சிந்தையுள்வெந்துயரறுக்கும் *
ஆயனாய்அன்றுகுன்றமொன்றெடுத்தான்
அரங்கமாநகரமர்ந்தானே.
1416 பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய் * ஒருகால்
பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த
வாயன் ஆய் * மால் ஆய் ஆல் இலை வளர்ந்து
மணி முடி வானவர் தமக்குச்
சேயன் ஆய் ** அடியேர்க்கு அணியன் ஆய் வந்து * என்
சிந்தையுள் வெம் துயர் அறுக்கும் *
ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான் *
அரங்க மா நகர் அமர்ந்தானே 9
1416 peyiṉār mulai ūṇ pil̤l̤ai āy * ŏrukāl
pĕru nilam vizhuṅki atu umizhnta
vāyaṉ āy * māl āy āl ilai val̤arntu
maṇi muṭi vāṉavar-tamakkuc
ceyaṉ āy ** aṭiyerkku aṇiyaṉ āy vantu * ĕṉ
cintaiyul̤ vĕm tuyar aṟukkum *
āyaṉ āy aṉṟu kuṉṟam ŏṉṟu ĕṭuttāṉ *
-araṅka mā nakar amarntāṉe-9

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1416. The lord who drank the milk from the devil Putanā and killed her, the dark-colored god who swallowed all the worlds and spit them out lay on a banyan leaf at the end of the eon. He can’t be reached by the gods in the sky who wear diamond crowns but he is close to me and removes all the troubles in my mind. He, the god of Thiruvarangam, was born as a cowherd child and carried Govardhanā mountain to save the cows and the cowherds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பேயினார் பூதனையென்னும்; முலை பேய்ச்சியின் பாலை; ஊண் பிள்ளை ஆய் உண்ட பிள்ளையும்; ஒருகால் ஒருசமயம்; பெருநிலம் பிரளயகாலத்தில்; விழுங்கி பூமியை விழுங்கி பின்பு; அது அதை; உமிழ்ந்த உமிழ்ந்த ஸ்ருஷ்டித்த; வாயன் ஆய் வாயயையுடையவனும்; மால் ஆய் ஆலிலை ஆலந்தளிரில்; வளர்ந்து கண் வளர்ந்தவனும்; மணி முடி மணிமயமான கிரீடமணிந்த; வானவர் தமக்கு தேவதைகளுக்கு; சேயன் ஆய் எட்டாதவனும்; அடியேற்கு அடியேனுக்கு; அணியன் ஆய் வந்து தானே வந்து; என் சிந்தையுள் என் சிந்தையுள்; வெம் துயர் கடும் துக்கங்களை; அறுக்கும் போக்கினவனும்; அன்று முன்பொரு காலம்; ஆயனாய் கண்ணனாய் வந்து; குன்றம் ஒன்று குன்றமெடுத்து; எடுத்தான் பசுக்களைக் காத்தவனுமான; அரங்க பெருமான் திருவரங்கம்; மா நகர் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தான்

PT 5.7.10

1417 பொன்னுமாமணியும்முத்தமும்சுமந்து
பொருதிரைமாநதிபுடைசூழ்ந்து *
அன்னமாடுலவும்அலைபுனல்சூழ்ந்த
அரங்கமாநகரமர்ந்தானை *
மன்னுமாமாடமங்கையர்தலைவன்
மானவேற்கலியன்வாயொலிகள் *
பன்னியபனுவல்பாடுவார் நாளும்
பழவினைபற்றறுப்பாரே. (2)
1417 ## பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து *
பொரு திரை மா நதி புடை சூழ்ந்து *
அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த *
அரங்க மா நகர் அமர்ந்தானை *
மன்னு மா மாட மங்கையர் தலைவன் *
மான வேல் கலியன் வாய் ஒலிகள் *
பன்னிய பனுவல் பாடுவார் * நாளும்
பழவினை பற்று அறுப்பாரே 10
1417 ## pŏṉṉum mā maṇiyum muttamum cumantu *
pŏru tirai mā nati puṭai cūzhntu *
aṉṉam māṭu ulavum alai puṉal cūzhnta *
araṅka mā nakar amarntāṉai *
maṉṉu mā māṭa maṅkaiyar talaivaṉ *
māṉa vel kaliyaṉ vāy ŏlikal̤ *
paṉṉiya paṉuval pāṭuvār * nāl̤um
pazhaviṉai paṟṟu aṟuppāre-10

Ragam

Dhanyāsi / தன்யாசி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1417. Kaliyan with a heroic spear, the chief of Thirumangai filled with beautiful, everlasting palaces, composed ten Tamil songs on the god who stays in Thiruvarangam surrounded by the Kaveri river filled with swimming swans as it brings pearls, precious jewels and gold in its rolling waves. If devotees learn and sing these songs, their bad karmā will disappear.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பொன்னும் பொன்னையும்; மா மணியும் சிறந்த ரத்தனங்களையும்; முத்தமும் முத்துக்களையும்; சுமந்து சுமந்து வரும்; பொரு திரை மா அலைகளையுடைய பெரிய; நதி புடை நதியான காவேரியால்; சூழ்ந்து இருபுறமும் சூழ்ந்ததும்; அன்னம் மாடு அன்னப்பறவைகள்; உலவும் அருகில் உலவும்; அலை அலைகளையுடைய; புனல் சூழ்ந்த குளங்கள் இருக்கும்; அரங்க திருவரங்கம்; மா நகர் பெரிய கோயிலில்; அமர்ந்தானே அமர்ந்தவனைக் குறித்து; மன்னு அழிவற்ற மாடங்களையுடைய; மா மாட திருமங்கையின்; மங்கையர் தலைவன் மங்கையர் தலைவன்; மான வேல் சிறந்த வேலையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; வாய் ஒலிகள் அருளிச்செய்த; பன்னிய பனுவல் குறைவற்ற பாசுரங்களை; பாடுவார் நாளும் தினமும் பாடுபவர்கள்; பழவினை பற்று பழவினைகளை; அறுப்பாரே போக்குவர்