Chapter 9

Dasharatha suffers when Rama goes to forest - (வன் தாளின்)

தசரதன் புலம்பல்
Dasharatha suffers when Rama goes to forest - (வன் தாளின்)
Rama went into exile in the forest. Dasaratha, separated from Rama, grieved deeply and lamented. The āzhvār captures and sings of Dasaratha's lamentation in his verses.
இராமன் வனவாசம் செய்யச் சென்றான். தசரதன் இராமனைப் பிரிந்து வருந்தினான்; மனமிரங்கிப் புலம்பினான். அவன் புலம்பியவாற்றை ஆழ்வார் ஈண்டுப்பாடுகிறார்.
Verses: 730 to 740
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will avoid bad paths in life
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PMT 9.1

730 வன்தாளினிணைவணங்கிவளநகரம்
தொழுதேத்த மன்னனாவான்
நின்றாயை * அரியணைமேலிருந்தாயை
நெடுங்கானம்படரப்போகு
என்றாள் * எம்மிராமாவோ!
உனைப்பயந்தகைகேசிதஞ்சொற்கேட்டு *
நன்றாகநானிலத்தையாள்வித்தேன்
நன்மகனே! உன்னைநானே. (2)
730 ## வன் தாளின் இணை வணங்கி வளநகரம் தொழுது ஏத்த * மன்னன் ஆவான்
நின்றாயை * அரியணை மேல் இருந்தாயை * நெடுங் கானம் படரப் போகு
என்றாள் ** எம் இராமாவோ * உனைப் பயந்த கைகேசி தன் சொல் கேட்டு *
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன் * நன்மகனே உன்னை நானே (1)
730 ## vaṉ tāl̤iṉ iṇai vaṇaṅki val̤anakaram tŏzhutu etta * maṉṉaṉ āvāṉ
niṉṟāyai * ariyaṇai mel iruntāyai * nĕṭuṅ kāṉam paṭarap poku
ĕṉṟāl̤ ** ĕm irāmāvo * uṉaip payanta kaikeci taṉ cŏl keṭṭu *
naṉṟāka nāṉilattai āl̤vitteṉ * naṉmakaṉe uṉṉai nāṉe (1)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

730. Dasaratha says, “You were going to become king as the people of this flourishing country bowed to your strong feet and worshipped you. When you were about to sit on the throne, O Rāma, your step-mother said, ‘Go and stay for a long time in the large forest. ’ I listened to the words of Kaikeyi, your mother, and asked you to go to the forest. O my dear son, that is what I did to you!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் இராமாவோ! எனது இராமனே!; வளநகரம் வளமுள்ள அயோத்தி நகரத்து ஜனங்களனைவரையும்; வன் பாதுகாக்கும் வலிமையுடைய; தாளிணை உனது திருவடிகளை; வணங்கி வணங்கி; தொழுது ஏத்த துதித்துப் போற்ற; மன்னன் ஆவான் அரசனாவதற்கு; நின்றாயை நின்றவனும்; அரியணை மேல் சிங்காசனத்தின் மீது; இருந்தாயை வீற்றிருந்தவனை; நெடுங் கானம் அடர்ந்த காட்டிற்கு; படரப் போகு போவாய்; என்றாள் என்றாள்; நன் மகனே! நல்ல குமாரனே!; உனைப் பயந்த உன்னைப் பெற்று வளர்த்த நான்; கைகேசி தன் கைகேயியின்; சொற் கேட்டு வார்த்தையைக் கேட்டு; நன்றாக உன்னை நன்றாக உன்னை; நானிலத்தை நானிலத்தை; ஆள்வித்தேன் ஆளும்படி செய்தேனோ!

PMT 9.2

731 வெவ்வாயேன்வெவ்வுரைகேட்டு இருநிலத்தை
வேண்டாதேவிரைந்து * வென்றி
மைவாயகளிறொழிந்துதேரொழிந்து
மாவொழிந்து வனமேமேவி *
நெய்வாயவேல்நெடுங்கண்நேரிழையும்
இளங்கோவும்பின்புபோக *
எவ்வாறுநடந்தனை? எம்மிரமாவோ!
எம்பெருமான்! என்செய்கேனே?
731 வெவ்வாயேன் வெவ்வுரை கேட்டு * இரு நிலத்தை வேண்டாதே, விரைந்து * வென்றி
மைவாய களிறொழிந்து தேரொழிந்து * மாவொழிந்து வனமே மேவி **
நெய்வாய வேல் நெடுங்கண் * நேரிழையும் இளங்கோவும் பின்பு போக *
எவ்வாறு நடந்தனை? எம் இராமாவோ * எம்பெருமான் என் செய்கேனே (2)
731 vĕvvāyeṉ vĕvvurai keṭṭu * iru nilattai veṇṭāte, viraintu * vĕṉṟi
maivāya kal̤iṟŏzhintu terŏzhintu * māvŏzhintu vaṉame mevi **
nĕyvāya vel nĕṭuṅkaṇ * nerizhaiyum il̤aṅkovum piṉpu poka *
ĕvvāṟu naṭantaṉai? ĕm irāmāvo * ĕmpĕrumāṉ ĕṉ cĕykeṉe (2)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

731. Dasaratha says, “You listened to my cruel words and left quickly, leaving this kingdom with its victorious elephants, chariots and horses and went to the forest. Your lovely wife, decorated with ornaments, her long eyes like spears smeared with oil, and your younger brother Lakshmana followed you. How could you walk in that cruel forest? O our Rāma! You are my dear lord. What can I do?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் இராமாவோ! என் ராமனே!; வெவ்வாயேன் கொடிய வாயையுடைய என்; வெவ்வுரை கேட்டு கடுஞ்சொற்களைக் கேட்டு; இரு நிலத்தை பெரிய பூமியை; வேண்டாதே ஆள விரும்பாமல்; விரைந்து விரைவாக; வென்றி மைவாய வெற்றிதரும் மை நிறமுள்ள; களிறொழிந்து யானையைத் தவிர்த்து; தேரொழிந்து தேரைத் தவிர்த்து; மாவொழிந்து குதிரையைத் தவிர்த்து; வனமே மேவி காட்டையே அடைந்து; நெய்வாய நெய் பூசிய நுனியுடைய; வேல் வேல் போன்ற; நெடுங்கண் நீள்விழி; நேரிழையும் பிராட்டியும்; இளங்கோவும் இளையவனும்; பின்பு போக தொடர்ந்து வர; எவ்வாறு எப்படித்தான்; நடந்தனை நடந்து சென்றாயோ!; எம்பெருமான்! நான்; என்செய்கேனே! என் செய்வேன்!

PMT 9.3

732 கொல்லணைவேல்வரிநெடுங்கண் கோசலைதன்
குலமதலாய்! * குனிவில்லேந்தும்
மல்லணைந்தவரைத்தோளா! வல்வினையேன்
மனமுருக்கும்வகையேகற்றாய் *
மெல்லணைமேல்முன்துயின்றாய்
இன்றினிப்போய்வியன்கானமரத்தின்நீழல் *
கல்லணைமேல்கண்டுயிலக்கற்றனையோ?
காகுத்தா! கரியகோவே!
732 கொல் அணை வேல் வரி நெடுங் கண் * கௌசலை தன் குல மதலாய் குனி வில் ஏந்தும் *
மல் அணைந்த வரைத் தோளா * வல் வினையேன் மனம் உருக்கும் வகையே கற்றாய் **
மெல் அணைமேல் முன் துயின்றாய் இன்று இனிப்போய் * வியன் கான மரத்தின் நீழல் *
கல் அணைமேல் கண் துயிலக் கற்றனையோ? * காகுத்தா கரிய கோவே (3)
732 kŏl aṇai vel vari nĕṭuṅ kaṇ * kaucalai taṉ kula matalāy kuṉi vil entum *
mal aṇainta varait tol̤ā * val viṉaiyeṉ maṉam urukkum vakaiye kaṟṟāy **
mĕl aṇaimel muṉ tuyiṉṟāy iṉṟu iṉippoy * viyaṉ kāṉa marattiṉ nīzhal *
kal aṇaimel kaṇ tuyilak kaṟṟaṉaiyo? * kākuttā kariya kove (3)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

732. Dasaratha says, “You, with your mountain-like arms that can fight anyone, the son of the family of Kosalai whose long red-lined eyes are like murderous spears, know how to melt my heart. Before you slept on a soft bed in the palace— how are you going to sleep under the shadow of a tree in the large forest? How could you learn to sleep on a stone bed, O dark king of the dynasty of Kahustha?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொல் அணை கொல்லும் திறனுடைய; வேல் வரி வேல்போன்ற; நெடுங் கண் நீண்ட கண்களையுடைய; கோசலைதன் கௌசல்யாவின்; குலமதலாய்! குலக் கொழுந்தே!; குனி வில் வளைவான வில்லை; ஏந்தும் தரித்த; மல் அணைந்த வலிமை மிக்க; வரை மலை போன்ற; தோளா! தோளை உடையவனே!; வல் வினையேன் மகா பாபியான என்னுடைய; மனம் உருக்கும் மனதை உருக; வகையே செய்வதை; கற்றாய்! கற்றவனே!; காகுத்தா! காகுத்த குலத்தவனே!; கரிய கோவே கரு நிற பிரானே!; மெல் மென்மையான; அணைமேல் பஞ்சணை மேல்; முன் துயின்றாய் உறங்கியவன் நீ; இன்று இனிப்போய் இனி இன்று முதல்; வியன் கான பெரிய காட்டிலுள்ள; மரத்தின் நீழல் மரத்தின் நிழலிலே; கல் பாறையையே; அணை மேல் படுக்கையாகக் கொண்டு; கண் துயில உறங்க; கற்றனையோ? கற்றாயோ!

PMT 9.4

733 வாபோகுவா இன்னம்வந்து
ஒருகால்கண்டுபோ மலராள்கூந்தல் *
வேய்போலுமெழில்தோளிதன்பொருட்டா
விடையோன்றன்வில்லைச்செற்றாய்! *
மாபோகுநெடுங்கானம் வல்வினையேன்
மனமுருக்கும்மகனே! * இன்று
நீபோகஎன்னெஞ்சம் இருபிளவாய்ப்
போகாதேநிற்குமாறே!
733 வா போகு வா இன்னம் வந்து * ஒரு கால் கண்டு போ மலராள் கூந்தல் *
வேய் போலும் எழில் தோளி தன் பொருட்டா * விடையோன் தன் வில்லைச் செற்றாய் **
மா போகு நெடுங் கானம் * வல்வினையேன் மனம் உருக்கும் மகனே * இன்று
நீ போக என் நெஞ்சம் * இரு பிளவாய்ப் போகாதே நிற்குமாறே (4)
733 vā poku vā iṉṉam vantu * ŏru kāl kaṇṭu po malarāl̤ kūntal *
vey polum ĕzhil-tol̤i taṉ pŏruṭṭā * viṭaiyoṉ taṉ villaic cĕṟṟāy **
mā poku nĕṭuṅ kāṉam * valviṉaiyeṉ maṉam urukkum makaṉe * iṉṟu
nī poka ĕṉ nĕñcam * iru pil̤avāyp pokāte niṟkumāṟe (4)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

733. Dasaratha says, “Come here and go back to the forest, come and see me one more time before you go. O you who broke the bow of Shivā who rides the bull to marry your wife Sita with lovely hair decorated with flowers and beautiful bamboo-like arms. Now you are going to the wide forest and you make my heart suffer. Surely I must have done bad karmā. My son, you are leaving, yet my heart does not split in two. "

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வா போகு வா வாராய் செல்வாய் வருவாய்; இன்னம் வந்து பின்னும் வந்து; ஒருகால் கண்டு போ ஒரு தரம் பார்த்துவிட்டுப் போ; மலராள் கூந்தல் பூக்களை சூடியவளும்; வேய் போலும் மூங்கில் போன்ற; எழில் தோளி அழகிய தோளையுடைய; தன் பொருட்டா பிராட்டிக்காக; விடையோன் தன் வில்லை சிவனுடைய தனுசை; செற்றாய்! முறித்தவனே!; வல் வினையேன் மகாபாபியான என்; மனம் உருக்கும் மகனே! மனதை உருக்கும் மகனே!; இன்று இப்பொழுது; மா போகு யானை திரியும்; நெடுங் கானம் காட்டுக்கு; நீ போக நீ போகின்றாயே; என் நெஞ்சம் என் மனமானது; இரு பிளவாய் இரண்டாகப் பிளந்து; போகாதே போகாமல்; நிற்குமாறே! நிற்கின்றதே அந்தோ!

PMT 9.5

734 பொருந்தார்கைவேல்நுதிபோல்
பரல்பாய மெல்லடிக்கள்குருதிசோர *
விரும்பாதகான்விரும்பிவெயிலுறைப்ப
வெம்பசிநோய்கூர * இன்று
பெரும்பாவியேன்மகனே! போகின்றாய்
கேகயர்கோன்மகளாய்ப்பெற்ற *
அரும்பாவிசொற்கேட்டஅருவினையேன்
என்செய்கேன்? அந்தோ! யானே.
734 பொருந்தார் கை வேல் நுதிபோல் பரல் பாய * மெல்லடிக்கள் குருதி சோர *
விரும்பாத கான் விரும்பி வெயில் உறைப்ப * வெம் பசிநோய் கூர ** இன்று
பெரும் பாவியேன் மகனே போகின்றாய் * கேகயர் கோன் மகளாய்ப் பெற்ற *
அரும் பாவி சொல் கேட்ட * அருவினையேன் என் செய்கேன் அந்தோ யானே (5)
734 pŏruntār kai vel-nutipol paral pāya * mĕllaṭikkal̤ kuruti cora *
virumpāta kāṉ virumpi vĕyil uṟaippa * vĕm pacinoy kūra ** iṉṟu
pĕrum pāviyeṉ makaṉe pokiṉṟāy * kekayar koṉ makal̤āyp pĕṟṟa *
arum pāvi cŏl keṭṭa * aruviṉaiyeṉ ĕṉ cĕykeṉ anto yāṉe (5)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

734. Dasaratha says, “Your soft feet will hurt when you walk on the gravel with stones as sharp as the points of the spears enemies hold, and they may bleed. Willingly you are going to the forest where no one wishes to go. The sun will be hot and hunger will cause you cruel pain. My son, you are going now because I, a sinner, listened to the evil daughter of king Kaikeyan. Surely I must have done bad karmā. What can I do to stop you?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொருந்தார் கை பகைவர்கள் கையில் உள்ள; வேல் கூர்மையான வேலின்; நுதிபோல் நுனி போன்ற; பரல் பாய பரல் கற்கள் காலில் அழுத்தவும்; மெல்லடிக்கள் மிருதுவான பாதங்களில்; குருதி சோர ரத்தம் பெருகவும்; வெயில் உறைப்ப வெய்யில் உறைக்கவும்; வெம் பசி கடும் பசிப்பிணி; நோய் கூர அதிகரிக்கவும்; பெரும்பாவியேன் மஹாபாபியான; மகனே! எனது மைந்தனே!; இன்று விரும்பாத நான் விரும்பாத; கான் விரும்பி காட்டிற்கு விரும்பி செல்கிறாய்; கேகயர்கோன் கேகயமன்னனின்; அரும்பாவி அரும்பாபியான; மகளாய்ப் பெற்ற மகள் கைகேயின்; சொற்கேட்ட வார்த்தையைக் கேட்ட; அருவினையேன் யானே கொடியேனாகிய நான்; என்செய்கேன்! அந்தோ! ஏது செய்வேன் ஐயோ!

PMT 9.6

735 அம்மாவென்றுகந்தழைக்கும் ஆர்வச்சொல்
கேளாதே * அணிசேர்மார்வம்
என்மார்வத்திடையழுந்தத் தழுவாதே
முழுசாதேமோவா துச்சி *
கைம்மாவின்நடையன்னமென்னடையும்
கமலம்போல்முகமும்காணாது *
எம்மானையென்மகனையிழந்திட்ட
இழிதகையேனிருக்கின்றேனே.
735 அம்மா என்று உகந்து அழைக்கும் * ஆர்வச்சொல் கேளாதே அணி சேர் மார்வம் *
என் மார்வத்திடை அழுந்தத் தழுவாதே * முழுசாதே மோவாது உச்சி **
கைம்மாவின் நடை அன்ன மென்னடையும் * கமலம் போல் முகமும் காணாது *
எம்மானை என் மகனை இழந்திட்ட * இழி தகையேன் இருக்கின்றேனே (6)
735 ammā ĕṉṟu ukantu azhaikkum * ārvaccŏl kel̤āte aṇi cer mārvam *
ĕṉ mārvattiṭai azhuntat tazhuvāte * muzhucāte movātu ucci **
kaimmāviṉ naṭai aṉṉa mĕṉṉaṭaiyum * kamalam pol mukamum kāṇātu *
ĕmmāṉai ĕṉ makaṉai izhantiṭṭa * izhi takaiyeṉ irukkiṉṟeṉe (6)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

735. Dasaratha says, “From now on I will not hear anyone lovingly calling me “amma. ” No more will I feel the tight embrace of his ornamented chest on my chest. I cannot kiss him on his forehead, I will not be able to see his majestic walk that is like the stride of an elephant, I will not be able to see his lotus face anymore. I have lost my dear one, my son. Surely I have done terrible deeds, yet I am still alive. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம்மா! என்று அம்மா! என்று; உகந்து அழைக்கும் மகிழ்ச்சியாக அழைக்கின்ற; ஆர்வச்சொல் அன்பு மிக்கச்சொல்லை; கேளாதே கேட்காமலும்; அணி சேர் மார்வம் நகைகள் அணிந்த மார்பை; என் மார்வத்திடை என் மார்பிலே; அழுந்த அழுந்தும்படி; தழுவாதே இறுக தழுவாமலும்; முழுசாதே முழுமையாக; உச்சி மோவாது உச்சியை மோந்திடாமலும்; கைம்மாவின் யானையின்; நடை அன்ன நடைபோன்ற; மென்னடையும் மென்மையான நடையும்; கமலம் போல் தாமரை மலர்போன்ற; முகமும் முகத்தை; காணாது காணாமலும்; எம்மானை என் மகனை; இழந்திட்ட காட்டிற்கு அனுப்பிவிட்ட; இழி இழிவான செயலை; தகையேன் செய்த நான்; இருக்கின்றேனே உயிருடன் இருக்கின்றேனே! அந்தோ!

PMT 9.7

736 பூமருவுநறுங்குஞ்சிபுஞ்சடையாய்ப்புனைந்து
பூந்துகில்சேரல்குல் *
காமரெழில்விழலுடுத்துக் கலனணியாது
அங்கங்களழகுமாறி *
ஏமருதோளென்புதல்வன் யானின்று
செலத்தக்கவனந்தான்சேர்தல் *
தூமறையீர்! இதுதகவோ? சுமந்திரனே!
விசிட்டனே! சொல்லீர்நீரே.
736 பூ மருவு நறுங்குஞ்சி புன்சடையாப் புனைந்து * பூந் துகில் சேர் அல்குல் *
காமர் எழில் விழல் உடுத்து கலன் அணியாது * அங்கங்கள் அழகு மாறி **
ஏமரு தோள் என் புதல்வன் * யான் இன்று செலத்தக்க வனம் தான் சேர்தல் *
தூ மறையீர் இது தகவோ? * சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே (7)
736 pū maruvu naṟuṅkuñci puṉcaṭaiyāp puṉaintu * pūn tukil cer alkul *
kāmar ĕzhil vizhal uṭuttu kalaṉ aṇiyātu * aṅkaṅkal̤ azhaku māṟi **
emaru tol̤ ĕṉ putalvaṉ * yāṉ iṉṟu cĕlattakka vaṉam tāṉ certal *
tū maṟaiyīr itu takavo? * cumantiraṉe vaciṭṭaṉe cŏllīr nīre (7)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

736. Dasaratha says, “His hair that was decorated with fragrant flowers is matted into jata now. He would wear lovely, soft garments on his waist but now he wears orange clothes like a renunciant and he does not wear any ornaments. Is it right that my son with such handsome arms should go to the forest instead of me? O, Sumanthra, O sage Vashista, you are learned men of the Vedās. Tell me!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூ தூய்மையான; மறையீர்! வேதத்ததை ஓதுபவர்களே!; சுமந்திரனே! சுமந்திரரே!; வசிட்டனே! குரு வசிஷ்டரே!; பூ மருவு பூ மாறாத; நறுங்குஞ்சி மணம் கமழும்; திருக் குழலை தலைமுடியை; புன் சடையாய் அழகற்ற ஜடையாக; புனைந்து திரித்து; பூந் துகில் நல்ல பட்டாடைகளை; சேர் அல்குல் அணிய வேண்டிய இடுப்பிலே; காமர் எழில் அழகற்ற தர்ப்பயை; விழல் உடுத்து முறுக்கிச் சாத்தி; கலன் ஆபரணங்கள்; அணியாது அணியாமல்; அங்கங்கள் அழகு இயற்கையழகு; மாறி குன்றி; ஏ மரு பகைவர் பயப்படக்கூடிய; தோள் தோளையுடைய; என் புதல்வன் தான் என் மகன் தான்; யான் இன்று செலத்தக்க நான் போகவேண்டிய; வனம் சேர்தல் காட்டுக்குப் போவது; இது தகவோ? இது தகுமோ? தர்மமாகுமோ?; நீரே சொல்லீர் நீங்களே சொல்லுங்கள்

PMT 9.8

737 பொன்பெற்றாரெழில்வேதப்புதல்வனையும்
தம்பியையும்பூவைபோலும் *
மின்பற்றாநுண்மருங்குல்மெல்லியலென்
மருகிகையும் வனத்தில்போக்கி *
நின்பற்றாநின்மகன்மேல்பழிவிளைத்திட்டு
என்னையும்நீள்வானில்போக்க *
என்பெற்றாய்? கைகேசீ! இருநிலத்தில்
இனிதாகவிருக்கின்றாயே.
737 பொன் பெற்றார் எழில் வேதப் புதல்வனையும் * தம்பியையும் பூவை போலும் *
மின் பற்றா நுண்மருங்குல் மெல்லியல் என் * மருகியையும் வனத்தில் போக்கி **
நின் பற்றா நின் மகன் மேல் பழி விளைத்திட்டு * என்னையும் நீள் வானில் போக்க *
என் பெற்றாய்? கைகேசீ * இரு நிலத்தில் இனிதாக இருக்கின்றாயே (8)
737 pŏṉ pĕṟṟār ĕzhil vetap putalvaṉaiyum * tampiyaiyum pūvai polum *
miṉ paṟṟā nuṇmaruṅkul mĕlliyal ĕṉ * marukiyaiyum vaṉattil pokki **
niṉ paṟṟā niṉ makaṉ mel pazhi vil̤aittiṭṭu * ĕṉṉaiyum nīl̤ vāṉil pokka *
ĕṉ pĕṟṟāy? kaikeci * iru nilattil iṉitāka irukkiṉṟāye (8)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

737. Dasaratha says, “O Kaikeyi, you have sent to the forest my divine son, as precious as gold, his brother Lakshmana and my gentle-natured daughter-in-law with a waist as thin as lightning and words as sweet as a puvai bird’s. People will blame your own son Bharatha for what you have done and you are going to make me go to heaven in the sky. What are you going to get from all this? O Kaikeyi, how could you live happily in this large world?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கைகேசீ! கைகேயியே; பொன் பொன்னொத்த; பெற்றார் கல்வியை பெற்றவர்; எழில் வேத அழகிய வேதங்களைக்கற்ற; புதல்வனையும் புதல்வனையும்; தம்பியையும் தம்பியையும்; பூவை போலும் பூவைப் போன்றவளும்; மின் பற்றா மின்னலை ஒத்த; நுண்மருங்குல் இடை உள்ளவளும்; மெல்லியல் மென்மையானவளும் ஆன; என் மருகியையும் என் மருமகளையும்; வனத்தில் போக்கி காட்டுக்குப் போகச்செய்து; நின் பற்றா உனது அன்புக்கு உரிய; நின் மகன் மேல் மகன் மீது பரதன்மீது; பழி விளைத்திட்டு பழியுண்டாம்கும்படி செய்து; என்னையும் என்னையும்; நீள் வானில் மேலுலகத்திற்கு; போக்க அனுப்புதலினால்; என் பெற்றாய் நீ என்ன பயனடைந்தாய்?; இரு நிலத்தில் பெரிய இவ்வுலகத்தில்; இனிதாக சுகமாக; இருக்கின்றாயே! வாழ்கின்றாயே

PMT 9.9

738 முன்னொருநாள்மழுவாளிசிலைவாங்கி
அவன்தவத்தைமுற்றும்செற்றாய் *
உன்னையுமுன்னருமையையுமுன்மோயின்
வருத்தமும் ஒன்றாகக்கொள்ளாது *
என்னையும்என்மெய்யுரையும்மெய்யாகக்
கொண்டு வனம்புக்கஎந்தாய்! *
நின்னையேமகனாகப்பெறப்பெறுவேன்
ஏழ்பிறப்பும்நெடுந்தோள்வேந்தே!
738 முன் ஒரு நாள் மழுவாளி சிலைவாங்கி * அவன் தவத்தை முற்றும் செற்றாய் *
உன்னையும் உன் அருமையையும் உன் மோயின் வருத்தமும் * ஒன்றாகக் கொள்ளாது **
என்னையும் என் மெய் உரையும் மெய்யாகக் கொண்டு * வனம் புக்க எந்தாய் *
நின்னையே மகனாகப் பெறப் பெறுவேன் * ஏழ் பிறப்பும் நெடுந்தோள் வேந்தே! (9)
738 muṉ ŏru nāl̤ mazhuvāl̤i cilaivāṅki * avaṉ tavattai muṟṟum cĕṟṟāy *
uṉṉaiyum uṉ arumaiyaiyum uṉ moyiṉ varuttamum * ŏṉṟākak kŏl̤l̤ātu **
ĕṉṉaiyum ĕṉ mĕy uraiyum mĕyyākak kŏṇṭu * vaṉam pukka ĕntāy *
niṉṉaiye makaṉākap pĕṟap pĕṟuveṉ * ezh piṟappum nĕṭuntol̤ vente! (9)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

738. Dasaratha says, “You broke the bow of axe-carrying ParasuRāma and destroyed his tapas. Without thinking how I will suffer and without thinking how your mother will suffer, you just listened to my words and my promise to your step-mother and left for the forest. You are my dear one. I wish that you could be born as my son for the next seven births. May I have that fortune, O king with long, strong arms. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் ஒரு நாள் முன்பு ஒரு நாளிலே; மழுவாளி பரசுராமனின்; சிலைவாங்கி வில்லை வாங்கி; அவன் தவத்தை அவன் தவப்பயன்; முற்றும் செற்றாய் முழுதும் அழித்திட்டவனே!; உன்னையும் உன்னையும்; உன் அருமையையும் உன் அருமையையும்; உன் மோயின் உன் தாயின்; வருத்தமும் வருத்தத்தையும்; ஒன்றாக ஒரு பொருளாக; கொள்ளாது கருதாமல்; என்னையும் என்னையும்; என் என்; மெய்யுரையும் உண்மையான வாக்கையும்; மெய்யாகக் கொண்டு உண்மை என்று கருதி; வனம் புக்க காட்டிற்குச் சென்ற; எந்தாய்! எம்பிரானே!; நெடுந்தோள் அகன்ற தோளையுடைய; வேந்தே! அரசனே!; ஏழ் பிறப்பும் ஏழு ஜன்மத்திலும்; நின்னையே மகனாக உன்னையே மகனாக; பெறப் பெறுவேன் அடையப் பெறுவேனாக

PMT 9.10

739 தேன்நகுமாமலர்க்கூந்தல்கௌசலையும்
சுமித்திரையும்சிந்தைநோவ *
கூனுருவில்கொடுந்தொழுத்தைசொற்கேட்ட
கொடியவள்தன்சொற்கொண்டு * இன்று
கானகமேமிகவிரும்பி நீதுறந்த
வளநகரைத்துறந்து * நானும்
வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்
மனுகுலத்தார் தங்கள்கோவே!
739 தேன் நகு மா மலர்க் கூந்தல் * கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ *
கூன் உருவின் கொடுந்தொழுத்தை சொல் கேட்ட * கொடியவள்தன் சொற்கொண்டு ** இன்று
கானகமே மிக விரும்பி * நீ துறந்த வள நகரைத் துறந்து * நானும்
வானகமே மிக விரும்பிப் போகின்றேன் * மனு குலத்தார் தங்கள் கோவே (10)
739 teṉ naku mā malark kūntal * kaucalaiyum cumittiraiyum cintai nova *
kūṉ uruviṉ kŏṭuntŏzhuttai cŏl keṭṭa * kŏṭiyaval̤taṉ cŏṟkŏṇṭu ** iṉṟu
kāṉakame mika virumpi * nī tuṟanta val̤a nakarait tuṟantu * nāṉum
vāṉakame mika virumpip pokiṉṟeṉ * maṉu-kulattār taṅkal̤ kove (10)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

739. Dasaratha says, “I heard the cruel words of the evil Kaikeyi who followed the advice of Kuni and now I will leave Sumithra to suffer and Kosalai with hair filled with flowers that drip honey. You are going to the forest, leaving this rich palace happily, and I will leave this place and go to the gods’ world happily, O king of the dynasty of Manu. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மனு குலத்தார் தங்கள் மனுகுலத்தில் தோன்றிய; கோவே சிறந்த அரசனே!; தேன் நகுமா தேன் சிந்தும்; மலர்க் கூந்தல் மலரைச் சூடிய கூந்தலையுடைய; கௌசலையும் கௌசலையும்; சுமித்திரையும் சுமித்திரையும்; சிந்தை நோவ மனம் வருந்த; கூன் உருவின் கூன் வடிவம் போலவே; கொடும் கோணல் மனமுடைய; தொழுத்தை பணிப்பெண்; சொற்கேட்ட வார்த்தையைக் கேட்ட; கொடியவள் தன் கொடியவளின்; சொற்கொண்டு சொல்லை ஏற்று; கானகமே மிக காட்டையே மிகவும்; விரும்பி விரும்பி; இன்று நீ துறந்த இப்போது நீ கைவிட்ட; வளநகரைத் நானும் இந்நகரத்தை நானும்; துறந்து துறந்து; வானகமே மேல் உலகத்தையே; மிக விரும்பி மிக விரும்பி; போகின்றேன் செல்கின்றேன்

PMT 9.11

740 ஏரார்ந்தகருநெடுமால்இராமனாய்
வனம்புக்கஅதனுக்காற்றா *
தாரார்ந்ததடவரைத்தோள்தயரதன்தான்
புலம்பிய அப்புலம்பல்தன்னை *
கூரார்ந்தவேல்வலவன்கோழியர்கோன்
குடைக்குலசேகரஞ்சொற்செய்த *
சீரார்ந்ததமிழ்மாலையிவைவல்லார்
தீநெறிக்கண்செல்லார்தாமே. (2)
740 ## ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய் * வனம் புக்க அதனுக்கு ஆற்றா *
தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய * அப்புலம்பல் தன்னை **
கூர் ஆர்ந்த வேல் வலவன் * கோழியர் கோன் குடைக் குல சேகரன் சொல் செய்த *
சீர் ஆர்ந்த தமிழ் மாலை இவை வல்லார் * தீ நெறிக்கண் செல்லார் தாமே (11)
740 ## er ārnta karu nĕṭumāl irāmaṉāy * vaṉam pukka ataṉukku āṟṟā *
tār ārnta taṭavarait tol̤ tayarataṉ tāṉ pulampiya * appulampal taṉṉai **
kūr ārnta vel valavaṉ * kozhiyar koṉ kuṭaik kula cekaraṉ cŏl cĕyta *
cīr ārnta tamizh mālai ivai vallār * tī nĕṟikkaṇ cĕllār tāme (11)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

740. Dasharatha, adorned with garlands, his arms strong as mountains, suffered when his son, the beautiful dark Nedumāl, went to the forest. Kulasekharan, the king of Kozhiyur who carries a sharp spear and rules under a royal umbrella composed ten Tamil pāsurams that describe the suffering of Dasharatha. If devotees learn these Tamil pāsurams they will avoid the bad paths of life.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏர் ஆர்ந்த அழகு நிறைந்த; கரு நெடுமால் கருத்த நிறமுடைய; இராமனாய் ராமனாக தோன்றி; வனம் புக்க காட்டுக்குச் செல்ல; அதனுக்கு ஆற்றா அதைப் பொறுக்கமாட்டாமல்; தார் ஆர்ந்த மாலை சூடிய; தடவரைத்தோள் மலையொத்த தோளுடைய; தயரதன் தான் தசரத சக்ரவர்த்தி; புலம்பிய புலம்பிய; அப் புலம்பல் தன்னை அந்தப் புலம்பலை; கூரார்ந்த கூர்மையான திறன் மிக்க; வேல்வலவன் வேல் நிபுணன்; கோழியர் கோன் உறையூர்க்குத் தலைவன்; குடை கொற்றக்குடையை உடைய; குலசேகரன் குலசேகரன்; சொற் செய்த இயற்றிய; சீர் ஆர்ந்த சிறப்பு மிக்க; தமிழ் மாலை தமிழ்ப் பாசுரங்களை; இவை வல்லார் கற்க வல்லவர்கள்; தீ நெறிக்கண் கொடியவழி யொன்றிலும்; செல்லார் தாமே செல்லவே மாட்டார்!