PMT 9.8

கைகேசீ! உனக்கு இதயமே இல்லையா?

737 பொன்பெற்றாரெழில்வேதப்புதல்வனையும்
தம்பியையும்பூவைபோலும் *
மின்பற்றாநுண்மருங்குல்மெல்லியலென்
மருகிகையும் வனத்தில்போக்கி *
நின்பற்றாநின்மகன்மேல்பழிவிளைத்திட்டு
என்னையும்நீள்வானில்போக்க *
என்பெற்றாய்? கைகேசீ! இருநிலத்தில்
இனிதாகவிருக்கின்றாயே.
737 pŏṉ pĕṟṟār ĕzhil vetap putalvaṉaiyum * tampiyaiyum pūvai polum *
miṉ paṟṟā nuṇmaruṅkul mĕlliyal ĕṉ * marukiyaiyum vaṉattil pokki **
niṉ paṟṟā niṉ makaṉ mel pazhi vil̤aittiṭṭu * ĕṉṉaiyum nīl̤ vāṉil pokka *
ĕṉ pĕṟṟāy? kaikeci * iru nilattil iṉitāka irukkiṉṟāye (8)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

737. Dasaratha says, “O Kaikeyi, you have sent to the forest my divine son, as precious as gold, his brother Lakshmana and my gentle-natured daughter-in-law with a waist as thin as lightning and words as sweet as a puvai bird’s. People will blame your own son Bharatha for what you have done and you are going to make me go to heaven in the sky. What are you going to get from all this? O Kaikeyi, how could you live happily in this large world?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கைகேசீ! கைகேயியே; பொன் பொன்னொத்த; பெற்றார் கல்வியை பெற்றவர்; எழில் வேத அழகிய வேதங்களைக்கற்ற; புதல்வனையும் புதல்வனையும்; தம்பியையும் தம்பியையும்; பூவை போலும் பூவைப் போன்றவளும்; மின் பற்றா மின்னலை ஒத்த; நுண்மருங்குல் இடை உள்ளவளும்; மெல்லியல் மென்மையானவளும் ஆன; என் மருகியையும் என் மருமகளையும்; வனத்தில் போக்கி காட்டுக்குப் போகச்செய்து; நின் பற்றா உனது அன்புக்கு உரிய; நின் மகன் மேல் மகன் மீது பரதன்மீது; பழி விளைத்திட்டு பழியுண்டாம்கும்படி செய்து; என்னையும் என்னையும்; நீள் வானில் மேலுலகத்திற்கு; போக்க அனுப்புதலினால்; என் பெற்றாய் நீ என்ன பயனடைந்தாய்?; இரு நிலத்தில் பெரிய இவ்வுலகத்தில்; இனிதாக சுகமாக; இருக்கின்றாயே! வாழ்கின்றாயே