PMT 9.3

கல் அணைமேல் துயில எப்போது கற்றாய்?

732 கொல்லணைவேல்வரிநெடுங்கண் கோசலைதன்
குலமதலாய்! * குனிவில்லேந்தும்
மல்லணைந்தவரைத்தோளா! வல்வினையேன்
மனமுருக்கும்வகையேகற்றாய் *
மெல்லணைமேல்முன்துயின்றாய்
இன்றினிப்போய்வியன்கானமரத்தின்நீழல் *
கல்லணைமேல்கண்டுயிலக்கற்றனையோ?
காகுத்தா! கரியகோவே!
732 kŏl aṇai vel vari nĕṭuṅ kaṇ * kaucalai taṉ kula matalāy kuṉi vil entum *
mal aṇainta varait tol̤ā * val viṉaiyeṉ maṉam urukkum vakaiye kaṟṟāy **
mĕl aṇaimel muṉ tuyiṉṟāy iṉṟu iṉippoy * viyaṉ kāṉa marattiṉ nīzhal *
kal aṇaimel kaṇ tuyilak kaṟṟaṉaiyo? * kākuttā kariya kove (3)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

732. Dasaratha says, “You, with your mountain-like arms that can fight anyone, the son of the family of Kosalai whose long red-lined eyes are like murderous spears, know how to melt my heart. Before you slept on a soft bed in the palace— how are you going to sleep under the shadow of a tree in the large forest? How could you learn to sleep on a stone bed, O dark king of the dynasty of Kahustha?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொல் அணை கொல்லும் திறனுடைய; வேல் வரி வேல்போன்ற; நெடுங் கண் நீண்ட கண்களையுடைய; கோசலைதன் கௌசல்யாவின்; குலமதலாய்! குலக் கொழுந்தே!; குனி வில் வளைவான வில்லை; ஏந்தும் தரித்த; மல் அணைந்த வலிமை மிக்க; வரை மலை போன்ற; தோளா! தோளை உடையவனே!; வல் வினையேன் மகா பாபியான என்னுடைய; மனம் உருக்கும் மனதை உருக; வகையே செய்வதை; கற்றாய்! கற்றவனே!; காகுத்தா! காகுத்த குலத்தவனே!; கரிய கோவே கரு நிற பிரானே!; மெல் மென்மையான; அணைமேல் பஞ்சணை மேல்; முன் துயின்றாய் உறங்கியவன் நீ; இன்று இனிப்போய் இனி இன்று முதல்; வியன் கான பெரிய காட்டிலுள்ள; மரத்தின் நீழல் மரத்தின் நிழலிலே; கல் பாறையையே; அணை மேல் படுக்கையாகக் கொண்டு; கண் துயில உறங்க; கற்றனையோ? கற்றாயோ!