PMT 9.7

என் மகன் வனம் செல்லுதல் தகுமோ?

736 பூமருவுநறுங்குஞ்சிபுஞ்சடையாய்ப்புனைந்து
பூந்துகில்சேரல்குல் *
காமரெழில்விழலுடுத்துக் கலனணியாது
அங்கங்களழகுமாறி *
ஏமருதோளென்புதல்வன் யானின்று
செலத்தக்கவனந்தான்சேர்தல் *
தூமறையீர்! இதுதகவோ? சுமந்திரனே!
விசிட்டனே! சொல்லீர்நீரே.
736 pū maruvu naṟuṅkuñci puṉcaṭaiyāp puṉaintu * pūn tukil cer alkul *
kāmar ĕzhil vizhal uṭuttu kalaṉ aṇiyātu * aṅkaṅkal̤ azhaku māṟi **
emaru tol̤ ĕṉ putalvaṉ * yāṉ iṉṟu cĕlattakka vaṉam tāṉ certal *
tū maṟaiyīr itu takavo? * cumantiraṉe vaciṭṭaṉe cŏllīr nīre (7)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

736. Dasaratha says, “His hair that was decorated with fragrant flowers is matted into jata now. He would wear lovely, soft garments on his waist but now he wears orange clothes like a renunciant and he does not wear any ornaments. Is it right that my son with such handsome arms should go to the forest instead of me? O, Sumanthra, O sage Vashista, you are learned men of the Vedās. Tell me!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தூ தூய்மையான; மறையீர்! வேதத்ததை ஓதுபவர்களே!; சுமந்திரனே! சுமந்திரரே!; வசிட்டனே! குரு வசிஷ்டரே!; பூ மருவு பூ மாறாத; நறுங்குஞ்சி மணம் கமழும்; திருக் குழலை தலைமுடியை; புன் சடையாய் அழகற்ற ஜடையாக; புனைந்து திரித்து; பூந் துகில் நல்ல பட்டாடைகளை; சேர் அல்குல் அணிய வேண்டிய இடுப்பிலே; காமர் எழில் அழகற்ற தர்ப்பயை; விழல் உடுத்து முறுக்கிச் சாத்தி; கலன் ஆபரணங்கள்; அணியாது அணியாமல்; அங்கங்கள் அழகு இயற்கையழகு; மாறி குன்றி; ஏ மரு பகைவர் பயப்படக்கூடிய; தோள் தோளையுடைய; என் புதல்வன் தான் என் மகன் தான்; யான் இன்று செலத்தக்க நான் போகவேண்டிய; வனம் சேர்தல் காட்டுக்குப் போவது; இது தகவோ? இது தகுமோ? தர்மமாகுமோ?; நீரே சொல்லீர் நீங்களே சொல்லுங்கள்