Chapter 8

A Lullaby for Rama - (மன்னு புகழ்)

தாலாட்டு
A Lullaby for Rama - (மன்னு புகழ்)
The āzhvār refers to Sowrirajan, who resides in Thirukannapuram, as Rama.
திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சவுரிராஜனையே ஆழ்வார் இராமனாகக் குறிப்பிடுகிறார்.
Verses: 719 to 729
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will become dear to the Lord
  • PMT 8.1
    719 ## மன்னு புகழ்க் கௌசலை தன் * மணி வயிறு வாய்த்தவனே *
    தென் இலங்கைக் கோன் முடிகள் * சிந்துவித்தாய் செம்பொன் சேர் **
    கன்னி நன் மா மதில் புடைசூழ் * கணபுரத்து என் கருமணியே *
    என்னுடைய இன்னமுதே * இராகவனே தாலேலோ (1)
  • PMT 8.2
    720 புண்டரிக மலர் தன் மேல் * புவனி எல்லாம் படைத்தவனே *
    திண் திறலாள் தாடகைதன் * உரம் உருவச் சிலை வளைத்தாய் **
    கண்டவர் தம் மனம் வழங்கும் * கணபுரத்து என் கருமணியே *
    எண் திசையும் ஆளுடையாய் * இராகவனே தாலேலோ (2)
  • PMT 8.3
    721 கொங்கு மலி கருங்குழலாள் * கௌசலை தன் குல மதலாய் *
    தங்கு பெரும் புகழ்ச்சனகன் * திரு மருகா தாசரதீ **
    கங்கையிலும் தீர்த்த மலி * கணபுரத்து என் கருமணியே
    எங்கள் குலத்து இன்னமுதே * இராகவனே தாலேலோ (3)
  • PMT 8.4
    722 தாமரை மேல் அயனவனைப் * படைத்தவனே தயரதன் தன் *
    மா மதலாய் * மைதிலிதன் மணவாளா ** வண்டினங்கள்
    காமரங்கள் இசை பாடும் * கணபுரத்து என் கருமணியே *
    ஏமருவும் சிலை வலவா * இராகவனே தாலேலோ (4)
  • PMT 8.5
    723 பார் ஆளும் படர் செல்வம் * பரத நம்பிக்கே அருளி *
    ஆரா அன்பு இளையவனோடு * அருங்கானம் அடைந்தவனே **
    சீர் ஆளும் வரை மார்பா * திருக் கண்ணபுரத்து அரசே *
    தார் ஆரும் நீண் முடி * என் தாசரதீ தாலேலோ (5)
  • PMT 8.6
    724 சுற்றம் எல்லாம் பின் தொடரத் * தொல் கானம் அடைந்தவனே *
    அற்றவர்கட்கு அருமருந்தே * அயோத்தி நகர்க்கு அதிபதியே **
    கற்றவர்கள் தாம் வாழும் * கணபுரத்து என் கருமணியே *
    சிற்றவை தன் சொல் கொண்ட * சீராமா தாலேலோ (6)
  • PMT 8.7
    725 ஆலின் இலைப் பாலகனாய் * அன்று உலகம் உண்டவனே *
    வாலியைக் கொன்று அரசு * இளைய வானரத்துக்கு அளித்தவனே **
    காலின் மணி கரை அலைக்கும் * கணபுரத்து என் கருமணியே *
    ஆலி நகர்க்கு அதிபதியே * அயோத்திமனே தாலேலோ (7)
  • PMT 8.8
    726 மலை அதனால் அணை கட்டி * மதிள் இலங்கை அழித்தவனே *
    அலை கடலைக் கடைந்து * அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே **
    கலை வலவர் தாம் வாழும் * கணபுரத்து என் கருமணியே *
    சிலை வலவா சேவகனே * சீராமா தாலேலோ (8)
  • PMT 8.9
    727 தளை அவிழும் நறுங் குஞ்சித் * தயரதன் தன் குல மதலாய் *
    வளைய ஒரு சிலை அதனால் * மதிள் இலங்கை அழித்தவனே **
    களை கழுநீர் மருங்கு அலரும் * கணபுரத்து என் கருமணியே *
    இளையவர்கட்கு அருள் உடையாய் * இராகவனே தாலேலோ (9)
  • PMT 8.10
    728 ## தேவரையும் அசுரரையும் * திசைகளையும் படைத்தவனே *
    யாவரும் வந்து அடி வணங்க * அரங்க நகர்த் துயின்றவனே **
    காவிரி நல் நதி பாயும் * கணபுரத்து என் கருமணியே *
    ஏ வரி வெஞ்சிலை வலவா * இராகவனே தாலேலோ (10)
  • PMT 8.11
    729 ## கன்னி நன் மா மதில் புடை சூழ் * கணபுரத்து என் காகுத்தன்
    தன் அடிமேல் * தாலேலோ என்று உரைத்த * தமிழ் மாலை **
    கொல் நவிலும் வேல் வலவன் * குடைக் குலசேகரன் சொன்ன *
    பன்னிய நூல் பத்தும் வல்லார் * பாங்காய பத்தர்களே (11)