PMT 9.10

யான் இறக்கப் போகின்றேன்

739 தேன்நகுமாமலர்க்கூந்தல்கௌசலையும்
சுமித்திரையும்சிந்தைநோவ *
கூனுருவில்கொடுந்தொழுத்தைசொற்கேட்ட
கொடியவள்தன்சொற்கொண்டு * இன்று
கானகமேமிகவிரும்பி நீதுறந்த
வளநகரைத்துறந்து * நானும்
வானகமேமிகவிரும்பிப்போகின்றேன்
மனுகுலத்தார் தங்கள்கோவே!
739 teṉ naku mā malark kūntal * kaucalaiyum cumittiraiyum cintai nova *
kūṉ uruviṉ kŏṭuntŏzhuttai cŏl keṭṭa * kŏṭiyaval̤taṉ cŏṟkŏṇṭu ** iṉṟu
kāṉakame mika virumpi * nī tuṟanta val̤a nakarait tuṟantu * nāṉum
vāṉakame mika virumpip pokiṉṟeṉ * maṉu-kulattār taṅkal̤ kove (10)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

739. Dasaratha says, “I heard the cruel words of the evil Kaikeyi who followed the advice of Kuni and now I will leave Sumithra to suffer and Kosalai with hair filled with flowers that drip honey. You are going to the forest, leaving this rich palace happily, and I will leave this place and go to the gods’ world happily, O king of the dynasty of Manu. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மனு குலத்தார் தங்கள் மனுகுலத்தில் தோன்றிய; கோவே சிறந்த அரசனே!; தேன் நகுமா தேன் சிந்தும்; மலர்க் கூந்தல் மலரைச் சூடிய கூந்தலையுடைய; கௌசலையும் கௌசலையும்; சுமித்திரையும் சுமித்திரையும்; சிந்தை நோவ மனம் வருந்த; கூன் உருவின் கூன் வடிவம் போலவே; கொடும் கோணல் மனமுடைய; தொழுத்தை பணிப்பெண்; சொற்கேட்ட வார்த்தையைக் கேட்ட; கொடியவள் தன் கொடியவளின்; சொற்கொண்டு சொல்லை ஏற்று; கானகமே மிக காட்டையே மிகவும்; விரும்பி விரும்பி; இன்று நீ துறந்த இப்போது நீ கைவிட்ட; வளநகரைத் நானும் இந்நகரத்தை நானும்; துறந்து துறந்து; வானகமே மேல் உலகத்தையே; மிக விரும்பி மிக விரும்பி; போகின்றேன் செல்கின்றேன்