PMT 9.1

நன்றாக உன்னை நானிலத்தை ஆள்வித்தேன்!

730 வன்தாளினிணைவணங்கிவளநகரம்
தொழுதேத்த மன்னனாவான்
நின்றாயை * அரியணைமேலிருந்தாயை
நெடுங்கானம்படரப்போகு
என்றாள் * எம்மிராமாவோ!
உனைப்பயந்தகைகேசிதஞ்சொற்கேட்டு *
நன்றாகநானிலத்தையாள்வித்தேன்
நன்மகனே! உன்னைநானே. (2)
730 ## vaṉ tāl̤iṉ iṇai vaṇaṅki val̤anakaram tŏzhutu etta * maṉṉaṉ āvāṉ
niṉṟāyai * ariyaṇai mel iruntāyai * nĕṭuṅ kāṉam paṭarap poku
ĕṉṟāl̤ ** ĕm irāmāvo * uṉaip payanta kaikeci taṉ cŏl keṭṭu *
naṉṟāka nāṉilattai āl̤vitteṉ * naṉmakaṉe uṉṉai nāṉe (1)

Ragam

Kāmbhoji / காம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

730. Dasaratha says, “You were going to become king as the people of this flourishing country bowed to your strong feet and worshipped you. When you were about to sit on the throne, O Rāma, your step-mother said, ‘Go and stay for a long time in the large forest. ’ I listened to the words of Kaikeyi, your mother, and asked you to go to the forest. O my dear son, that is what I did to you!”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
எம் இராமாவோ! எனது இராமனே!; வளநகரம் வளமுள்ள அயோத்தி நகரத்து ஜனங்களனைவரையும்; வன் பாதுகாக்கும் வலிமையுடைய; தாளிணை உனது திருவடிகளை; வணங்கி வணங்கி; தொழுது ஏத்த துதித்துப் போற்ற; மன்னன் ஆவான் அரசனாவதற்கு; நின்றாயை நின்றவனும்; அரியணை மேல் சிங்காசனத்தின் மீது; இருந்தாயை வீற்றிருந்தவனை; நெடுங் கானம் அடர்ந்த காட்டிற்கு; படரப் போகு போவாய்; என்றாள் என்றாள்; நன் மகனே! நல்ல குமாரனே!; உனைப் பயந்த உன்னைப் பெற்று வளர்த்த நான்; கைகேசி தன் கைகேயியின்; சொற் கேட்டு வார்த்தையைக் கேட்டு; நன்றாக உன்னை நன்றாக உன்னை; நானிலத்தை நானிலத்தை; ஆள்வித்தேன் ஆளும்படி செய்தேனோ!
ĕm irāmāvo! my dear Rama!; vaṉ You have the strenght to protect; val̤anakaram the prosperous citizens of Ayodhya; tŏḻutu etta they worship and; vaṇaṅki bow down; tāl̤iṇai at Your feet; niṉṟāyai when You stood ready; maṉṉaṉ āvāṉ to become the King; iruntāyai and to be seated on; ariyaṇai mel the throne; ĕṉṟāl̤ Your step mother; paṭarap poku asked You to go; nĕṭuṅ kāṉam to a dense forest; naṉ makaṉe! o noble Son!; uṉaip payanta I, who bore and raised You; cŏṟ keṭṭu listened to the words of; kaikeci taṉ Kaikeyi; naṉṟāka uṉṉai hence, did I truly prepare You; āl̤vitteṉ to rule; nāṉilattai this earth

Detailed WBW explanation

My good Son! Well did I have You reign over the earth, listening to the words of Kaikeyī who begot You,
O my Rāma! She said, ‘Go [and] reach the vast forest’ to You who sat on the throne [and] stood to become king, as the wealthy city paid homage to [and] praised [You] worshipping [Your] pair of mighty feet!

⬥vaṉ tāḷiṉ iṇai vaṇaṅki – ‘worshipping [Your]

+ Read more