Chapter 7

Devaki's Lullaby to Krishna - (ஆலை நீள்)

தேவகியின் புலம்பல்
Devaki's Lullaby to Krishna - (ஆலை நீள்)

The āzhvār, embodying Devaki who missed witnessing her son's divine plays, experiences her sorrow. "Krishna! They say I am your mother. Among all the mothers in the world, I am the least fortunate! I did not get to place you in a cradle and lull you to sleep! I did not see the beauty of you lying down! I did not experience the joy of your childhood!

+ Read more

மகனின் திருவிளையாடல்களைக் கண்டுகளிக்கும் அனுபவத்தை இழந்த தேவகியாக இருந்துகொண்டு ஆழ்வார் அனுபவிக்கிறார். கண்ணா! என்னை உனக்குத் தாய் என்கிறார்கள். உலகில் உள்ள தாய்மார்களுள் நான் கடைசியாக இருப்பவள். பாக்கிய மில்லாதவள்! உன்னைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டவில்லை! நீ படுத்திருக்கும் அழகைக்

+ Read more
Verses: 708 to 718
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will be with Narayana soon
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PMT 7.1

708 ஆலைநீள்கரும்பன்னவன்தாலோ
அம்புயுத்தடங்கண்ணினன்தாலோ *
வேலைநீர்நிறத்தன்னவன்தாலோ
வேழப்போதகமன்னவன்தாலோ *
ஏலவார்குழலென்மகன்தாலோ
என்றென்றுன்னைஎன்வாயிடைநிறைய *
தாலொலித்திடும்திருவினையில்லாத்
தாயரில்கடையாயினதாயே. (2)
708 ## ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ * அம்புயத் தடங் கண்ணினன் தாலோ *
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ * வேழப் போதகம் அன்னவன் தாலோ **
ஏல வார் குழல் என்மகன் தாலோ * என்று என்று உன்னை என் வாயிடை நிறைய *
தால் ஒலித்திடும் திருவினை இல்லாத் * தாயரில் கடை ஆயின தாயே (1)
708 ## ālai nīl̤ karumpu aṉṉavaṉ tālo * ampuyat taṭaṅ kaṇṇiṉaṉ tālo *
velai nīr niṟattu aṉṉavaṉ tālo * vezhap potakam aṉṉavaṉ tālo **
ela vār kuzhal ĕṉmakaṉ tālo * ĕṉṟu ĕṉṟu uṉṉai ĕṉ vāyiṭai niṟaiya *
tāl ŏlittiṭum tiruviṉai illāt * tāyaril kaṭai āyiṉa tāye (1)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

708. “You are as sweet as the sugarcane juice that comes from a sugarcane press, thālo. Your big eyes are lovely as lotuses in the water, thālo. Your color is like the water of the ocean, thālo. You are the king who killed the elephant Kuvalayābeedam, thālo. You are my son with handsome fragrant hair, thālo. I am more unlucky than all other mothers because I don’t have the good fortune of singing a lullaby and saying “thālo, thālo” for you. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
ஆலை நீள் ஆலையில் இட்டுப்பிழிவதற்கேற்ற நீண்ட; கரும்பு அன்னவன் கரும்பு போன்றவனே; தாலோ! தாலேலோ!; அம்புயத் தடங் தாமரை போன்று விசாலமான; கண்ணினன் கண்களை உடையவனே!; தாலோ! தாலேலோ!; வேலை நீர் நிறத்து கடல் நீர் நிறம்; அன்னவன் தாலோ! போன்றவனே! தாலேலோ!; வேழப்போதகம் யானைக்கன்று; அன்னவன் போன்றவனே!; தாலோ! தாலேலோ!; ஏல வார் மணம் மிக்க நீண்ட; குழல் முடியையுடைய!; என் மகன் தாலோ! என்மகனே! தாலேலோ!; என்று என்று உன்னை என்று இப்படிச் சொல்லி!; என் வாயிடை நிறைய என் வாயாரப் பாடி; ஒலித்திடும் தாலாட்டுகிற; திருவினை இல்லா பாக்யம் இல்லாத; தாயரில் தாய்மார்களில்; கடை ஆயின தாயே கடையவளாகி நிற்கின்றேனே
karumpu aṉṉavaṉ One who is like a sugarcane; ālai nīl̤ perfect for the press!; tālo! thaale-lo! (a lullaby refrain); kaṇṇiṉaṉ One with wide eyes; ampuyat taṭaṅ like the lotus flower!; tālo! thaale-lo!; velai nīr niṟattu the One with ocean’s water!; aṉṉavaṉ tālo! like color, thaale-lo!; aṉṉavaṉ One who resembles; veḻappotakam a baby Elephant!; tālo! thaale-lo!; kuḻal One with long, fragrant; ela vār hair; ĕṉ makaṉ tālo! my Son! thaale-lo!; ĕṉṟu ĕṉṟu uṉṉai saying thus; kaṭai āyiṉa tāye I stand as the most unfortunate one; tāyaril among all the mothers,; tiruviṉai illā without the fortune; ĕṉ vāyiṭai niṟaiya of singing; ŏlittiṭum the lullaby for You

PMT 7.2

709 வடிக்கொளஞ்சனமெழுதுசெம்மலர்க்கண் மருவி
மேலினிதொன்றினைநோக்கி *
முடக்கிச்சேவடிமலர்ச்சிறுகருந்தாள்
பொலியுநீர்முகில்குழவியேபோல *
அடக்கியாரச்செஞ்சிறுவிரலனைத்தும்
அங்கையோடணைந்தானையிற்கிடந்த *
கிடக்கைகண்டிடப்பெற்றிலனந்தோ!
கேசவா! கெடுவேன்கெடுவேனே.
709 வடிக் கொள் அஞ்சனம் எழுது செம் மலர்க்கண் * மருவி மேல் இனிது ஒன்றினை நோக்கி *
முடக்கிச் சேவடி மலர்ச் சிறு கருந்தாள் * பொலியும் நீர் முகில் குழவியே போல **
அடக்கியாரச் செஞ் சிறு விரல் அனைத்தும் * அங்கையோடு அணைந்து ஆணையில் கிடந்த *
கிடக்கை கண்டிடப் பெற்றிலன் அந்தோ * கேசவா கெடுவேன் கெடுவேனே (2)
709 vaṭik kŏl̤ añcaṉam ĕzhutu cĕm malarkkaṇ * maruvi mel iṉitu ŏṉṟiṉai nokki *
muṭakkic cevaṭi malarc ciṟu karuntāl̤ * pŏliyum nīr-mukil kuzhaviye pola **
aṭakkiyārac cĕñ ciṟu viral aṉaittum * aṅkaiyoṭu aṇaintu āṇaiyil kiṭanta *
kiṭakkai kaṇṭiṭap pĕṟṟilaṉ anto * kecavā kĕṭuveṉ kĕṭuveṉe (2)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

709. “Your lotus eyes darkened with kohl are beautiful as you look up and see the decorations on the cradle. You look like a baby cloud. As you bend your legs and put your fingers in your mouth, you look like an elephant bending its trunk and sleeping. O Kesava, I don’t have the good fortune of seeing these things when you are a baby. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வடிக் கொள் தீர்மையாக; அஞ்சனம் எழுது மையிடப்பெற்ற; செம் மலர் செந்தாமரை மலர் போன்ற; கண் கண்களாலே; மேல் மேலே தொங்கவிடப்பட்டிருக்கும்; ஒன்றினை விளையாட்டுப் பொருளை; மருவி இனிது இனிதாகப் பொருந்த; நோக்கி பார்த்தும்; கருந்தாள் கறுத்த புறந்தாளையுடைய; மலர் மலரையொத்த; சிறு சேவடி சிறிய பாதங்களை; முடக்கி முடக்கிக் கொண்டும்; பொலியும் நீர் நீரைப் பருகி விளங்கும்; முகில் குழவியே போல மேகக் குட்டிப்போல; செஞ் சிறு விரல் அழகிய சிறு விரல்கள்; அனைத்தும் எல்லாவற்றையும்; அங்கையோடு உள்ளங்கையிலே; அடக்கியார அடங்கும் படி; அணைந்து பிடித்துக் கொண்டும்; ஆனையிற் கிடந்த யானைக் கன்றைப் போலே; கிடக்கை படுத்திருப்பதை; கண்டிட பெற்றிலன் பார்க்கப் பெறவில்லை; அந்தோ! கேசவா! அந்தோ! கேசவா!; கெடுவேன் பாவியானேன்!; கெடுவேனே! பாவியானேனே!
kaṇ with Your eyes that are like; cĕm malar blooming red lotuses; vaṭik kŏl̤ darkened; añcaṉam ĕḻutu with kohl; nokki You look; maruvi iṉitu and gaze sweetly; ŏṉṟiṉai at the toy; mel hanging from above the cradle; karuntāl̤ with dark soles like; malar flower-bases; muṭakki curling in those; ciṟu cevaṭi tiny feet; mukil kuḻaviye pola You are like a clouldlet growing; pŏliyum nīr after sipping water; cĕñ ciṟu viral with beautiful little fingers; aṭakkiyāra You grasp; aṉaittum everything; aṅkaiyoṭu within your small palm; aṇaintu and hold on tightly; āṉaiyiṟ kiṭanta like how a baby elephant; kiṭakkai holds; kaṇṭiṭa pĕṟṟilaṉ i never get to see; anto! kecavā! alas! O Keshava!; kĕṭuveṉ I am a sinner!; kĕṭuveṉe! I am a sinner!

PMT 7.3

710 முந்தைநன்முறையன்புடைமகளிர்
முறைமுறைதந்தம்குறங்கிடையிருத்தி *
எந்தையே! என்றன்குலப்பெருஞ்சுடரே!
எழுமுகில்கணத்தெழில்கவரேறே! *
உந்தையாவன்என்றுரைப்ப நின்செங்கேழ்
விரலினும்கடைக்கண்ணினும்காட்ட *
நந்தன்பெற்றனன் நல்வினையில்லா
நங்கள்கோன்வசுதேவன்பெற்றிலனே.
710 முந்தை நன்முறை அன்பு உடை மகளிர் * முறை முறை தம் தம் குறங்கிடை இருத்தி *
எந்தையே என்தன் குலப் பெருஞ் சுடரே * எழு முகில் கணத்து எழில் கவர் ஏறே **
உந்தை யாவன் என்று உரைப்ப * நின் செங்கேழ் விரலினும் கடைக்கண்ணினும் காட்ட *
நந்தன் பெற்றனன் நல்வினை யில்லா * நங்கள்கோன் வசுதேவன் பெற்றிலனே. (3)
710 muntai naṉmuṟai aṉpu uṭai makal̤ir * muṟai muṟai tam tam kuṟaṅkiṭai irutti *
ĕntaiye ĕṉtaṉ kulap pĕruñ cuṭare * ĕzhu mukil kaṇattu ĕzhil kavar eṟe **
untai yāvaṉ ĕṉṟu uraippa * niṉ cĕṅkezh viraliṉum kaṭaikkaṇṇiṉum kāṭṭa *
nantaṉ pĕṟṟaṉaṉ nalviṉai yillā * naṅkal̤koṉ vacutevaṉ pĕṟṟilaṉe. (3)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

710. “Mothers from good families keep their children on their laps and say, ‘You are my dear one, you are the bright light of our family, you are like a bull that has the color of a cloud. ’ When someone asked you, ‘Who is your father?’ you looked at Nandagopan out of the corner of your eyes and pointed at him with your beautiful fingers. Vasudevan, our chief, does not have the good fortune of being your father. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
அன்பு உடை அன்பு உடையவர்களான; முந்தை பரம்பரையாக வருகிற; நன்முறை நல்ல உறவுமுறை உடைய; மகளிர் பெண்கள்; முறை முறை முறைப்படி; தம் தம் தங்கள் தங்கள்; குறங்கிடை மடியிலே; இருத்தி வைத்துக்கொண்டு; எந்தையே! என் அப்பனே!; என்தன் குலப் எங்கள் குல; பெருஞ் சுடரே! விளக்கே!; எழு முகில் மேலெழுகின்ற மேக; கணத்து எழில் கூட்டத்தின் அழகை; கவர் கவர்ந்திட்ட; ஏறே! காளை போன்றவனே!; உந்தை உன் தந்தை; யாவன் என்று யார் என்று; உரைப்ப சொல் என்றபோது; நின் செங்கேழ் உனது சிவந்த சிறு; விரலினும் விரலினாலும்; கடைக்கண்ணினும் கடைக்கண்ணாலும்; காட்ட காண்பிக்கும் பாக்கியத்தை; நந்தன் பெற்றனன் நந்தகோபர் பெற்றார்; நல்வினை யில்லா பாக்கியமில்லாதவரான; நங்கள் கோன் என்னுடைய; வசுதேவன் பர்த்தா வசுதேவர்; பெற்றிலனே பெறவில்லையே! 3
aṉpu uṭai the loved ones; muntai coming from a good lineage; makal̤ir and women; naṉmuṟai born into noble families; muṟai muṟai customarily; irutti hold their children; tam tam in their; kuṟaṅkiṭai laps; ĕntaiye! and say “My dear child!”; pĕruñ cuṭare! “The light; ĕṉtaṉ kulap of our lineage!”; kavar You are like an attractive; eṟe! young bull; kaṇattu ĕḻil with the beauty of; ĕḻu mukil the rising cluster of clouds; uraippa when asked; yāvaṉ ĕṉṟu who Your; untai father is; niṉ cĕṅkeḻ with Your rosy little; viraliṉum finger; kaṭaikkaṇṇiṉum and with the corner of Your eyes; kāṭṭa You pointed to; nantaṉ pĕṟṟaṉaṉ the blessed Nandagopar; naṅkal̤ koṉ which my; vacutevaṉ husband Vasudeva; nalviṉai yillā the unfortunate one; pĕṟṟilaṉe was not blessed with

PMT 7.4

711 களிநிலாவெழில்மதிபுரைமுகமும்
கண்ணனே! திண்கைமார்வும்திண்டோளும் *
தளிமலர்க்கருங்குழல்பிறையதுவும்
தடங்கொள்தாமரைக்கண்களும்பொலிந்த *
இளமையின்பத்தை இன்றென்றன்கண்ணால்
பருகுவேற்கிவள்தாயெனநினைந்த *
அளவில்பிள்ளைமையின்பத்தையிழந்த
பாவியேனெனதாவிநில்லாதே.
711 களி நிலா எழில் மதிபுரை முகமும் * கண்ணனே திண்கை மார்வும் திண்தோளும் *
தளிர் மலர்க் கருங்குழல் பிறையதுவும் * தடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த **
இளமை இன்பத்தை இன்று என்தன் கண்ணால் * பருகுவேற்கு இவள் தாயென நினைந்த *
அளவில் பிள்ளைமை இன்பத்தை இழந்த * பாவியேன் எனது ஆவி நில்லாதே (4)
711 kal̤i nilā ĕzhil matipurai mukamum * kaṇṇaṉe tiṇkai mārvum tiṇtol̤um *
tal̤ir malark karuṅkuzhal piṟaiyatuvum * taṭaṅkŏl̤ tāmaraik kaṇkal̤um pŏlinta **
il̤amai-iṉpattai iṉṟu ĕṉtaṉ kaṇṇāl * parukuveṟku ival̤ tāyĕṉa niṉainta *
al̤avil pil̤l̤aimai-iṉpattai izhanta * pāviyeṉ ĕṉatu āvi nillāte (4)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

711. “O Kanna, your face is like the shining full moon, your hands, chest and arms are strong, your dark hair is adorned with fresh flowers, your forehead is like the crescent moon and your eyes are like lotuses blooming in a pond. I do not have the fortune of seeing you with my eyes when you are a baby even though I think of myself as your mother. I am unlucky and I don’t have the pleasure of raising my child, yet still I am alive. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கண்ணனே! கிருஷ்ணனே!; களி நிலா களிப்பூட்டும் நிலவு போன்ற; எழில் மதிபுரை அழகு சந்திரனை ஒத்த; முகமும் திருமுகமும்; திண்கை வலிமை மிக்க கையும்; மார்வும் மார்பும்; திண் தோளும் பலம் பொருந்திய தோள்களும்; தளிர் மலர்க் தளிர்மலர் போன்ற; கருங் குழல் கருத்தமுடியின்; பிறையதுவும் கீழே பிறைச்சந்திரன் போன்ற நெற்றியும்; தடங்கொள் விசாலமான; தாமரைக் கண்களும் தாமரைப் போன்ற கண்களும்; பொலிந்த இளமை அழகு இளமையின்; இன்பத்தை இன்பத்தை; இன்று என்தன் கண்ணால் இன்று என்னுடைய கண்களால்; பருகுவேற்கு பருகுகும் எனக்கு; இவள் தாயென இவள் என்னுடைய தாய் என்று; நினைந்த நினைப்பதற்குத் தகுதியான; அளவில் பிள்ளைமை குழைந்தை தரும்; இன்பத்தை இழந்த இன்பத்தை இழந்த; பாவியேன் எனது பாவியான என்னுடைய; ஆவி நில்லாதே உயிரானது தரித்திருக்காதே!
kaṇṇaṉe! Oh Krishna!; mukamum You divine face is; ĕḻil matipurai like the beautiful; kal̤i nilā and delightful moon; mārvum Your chest; tiṇkai and arms are strong; tiṇ tol̤um and have mightly shoulders; karuṅ kuḻal You dark hair is; tal̤ir malark like blossoming flowers; piṟaiyatuvum You have a crescent moon-like forehead; taṭaṅkŏl̤ and wide; tāmaraik kaṇkal̤um lotus-like eyes; iṉpattai iḻanta I lost the joy; al̤avil pil̤l̤aimai given by the child; iṉṟu ĕṉtaṉ kaṇṇāl and for my eyes today; parukuveṟku to drink; iṉpattai the joy; pŏlinta il̤amai of Your youthful beauty; niṉainta and deserving of a thought; ival̤ tāyĕṉa that 'she is my mother'; pāviyeṉ ĕṉatu I, the sinful one; āvi nillāte could not endure it

PMT 7.5

712 மருவுநின்திருநெற்றியில்சுட்டியசைதர
மணிவாயிடைமுத்தம்
தருதலும் * உன்தன்தாதையைப்போலும்
வடிவுகண்டுகொண்டுள்ளமுள்குளிர *
விரலைச்செஞ்சிறுவாயிடைச்சேர்த்து
வெகுளியாய்நின்றுரைக்கும்அவ்வுரையும் *
திருவிலேனொன்றும்பெற்றிலேன் எல்லாம்
தெய்வநங்கையசோதைபெற்றாளே.
712 மருவும் நின் திருநெற்றியில் சுட்டி அசைதர * மணிவாயிடை முத்தம்
தருதலும் * உன்தன் தாதையைப் போலும் * வடிவு கண்டுகொண்டு உள்ளம் உள் குளிர **
விரலைச் செஞ் சிறுவாயிடைச் சேர்த்து * வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் உரையும் *
திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் * எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே (5)
712 maruvum niṉ tirunĕṟṟiyil cuṭṭi acaitara * maṇivāyiṭai muttam
tarutalum * uṉtaṉ tātaiyaip polum * vaṭivu kaṇṭukŏṇṭu ul̤l̤am ul̤ kul̤ira **
viralaic cĕñ ciṟuvāyiṭaic certtu * vĕkul̤iyāy niṉṟu uraikkum av uraiyum *
tiruvileṉ ŏṉṟum pĕṟṟileṉ * ĕllām tĕyva naṅkai yacotai pĕṟṟāl̤e (5)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

712. “You kissed your father Nandagopan and your mother Yashodā with your beautiful lips as the chutti ornament on your beautiful forehead swung around. You put your sweet fingers into your lovely mouth and prattled innocently. When your father saw you like that his heart was filled with joy, but I did not have the good fortune of seeing those things or listening to your baby talk. Only the divine Yashodā has known that joy. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நின் திரு நெற்றியில் உன்னுடைய திரு நெற்றியிலே; மருவும் சுட்டி பொருந்தியிருக்கிற சுட்டியானது; அசைதர அசையும்படி; மணிவாயிடை முத்தம் அழகிய வாய் முத்தத்தை; தருதலும் உன்தன் கொடுப்பதும் உன்னுடைய; தாதையைப் போலும் தந்தையைப் போலுள்ள; வடிவு கண்டு கொண்டு வடிவழகை பார்த்து; உள்ளம் உள் குளிர உள்ளம் உள்ளே குளிர்ந்திட; செஞ்சிறு வாயிடைச் சிவந்த சிறிய திருவாயிலே; விரலைச் சேர்த்து விரலை வைத்துக் கொண்டு; வெகுளியாய் நின்று வெகுளியாக மழலையில்; உரைக்கும் அவ் உரையும் சொல்லும் வார்த்தைகளும்; ஒன்றும் திருவிலேன் ஒன்றையும் நற்பேறு இல்லாத; பெற்றிலேன் நான் அநுபவிக்கப் பெறவில்லை; தெய்வ நங்கை தெய்வமாதாவான; யசோதை யசோதை; எல்லாம் பெற்றாளே எல்லாவற்றையும் பெற்றாளே!
tarutalum uṉtaṉ You give; maṇivāyiṭai muttam a kiss from Your beautiful lips; maruvum cuṭṭi as the chutti ornament; niṉ tiru nĕṟṟiyil on your beautiful forehead; acaitara swung around; vaṭivu kaṇṭu kŏṇṭu seeing Your form; tātaiyaip polum that is similar to Your father; viralaic certtu You place a finger; cĕñciṟu vāyiṭaic on your small, red sacred lips; ul̤l̤am ul̤ kul̤ira that makes the heart feel cool within; uraikkum av uraiyum you say; vĕkul̤iyāy niṉṟu the babbling little words; ŏṉṟum tiruvileṉ I, unworthy; pĕṟṟileṉ have not experienced any of these; tĕyva naṅkai but the divine mother; yacotai Yashoda; ĕllām pĕṟṟāl̤e was blessed with all of it!

PMT 7.6

713 தண்ணந்தாமரைக்கண்ணனே! கண்ணா!
தவழ்ந்தெழுந்துதளர்ந்ததோர்நடையால் *
மண்ணில்செம்பொடியாடிவந்து என்தன்
மார்வில்மன்னிடப்பெற்றிலேனந்தோ *
வண்ணச்செஞ்சிறுகைவிரலனைத்தும்
வாரிவாய்க்கொண்டஅடிசிலின்மிச்சல் *
உண்ணப்பெற்றிலேன் ஓ! கொடுவினையேன்
என்னைஎஞ்செய்யப்பெற்றதெம்மோயே?
713 தண் அந்தாமரைக் கண்ணனே கண்ணா * தவழ்ந்து எழுந்து தளர்ந்ததோர் நடையால் *
மண்ணில் செம்பொடி ஆடி வந்து * என்தன் மார்வில் மன்னிடப் பெற்றிலேன் அந்தோ **
வண்ணச் செஞ்சிறு கைவிரல் அனைத்தும் * வாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சில் *
உண்ணப் பெற்றிலேன் ஓ கொடு வினையேன் * என்னை என் செய்யப் பெற்றது எம் மோயே (6)
713 taṇ antāmaraik kaṇṇaṉe kaṇṇā * tavazhntu ĕzhuntu tal̤arntator naṭaiyāl *
maṇṇil cĕmpŏṭi āṭi vantu * ĕṉtaṉ mārvil maṉṉiṭap pĕṟṟileṉ anto **
vaṇṇac cĕñciṟu kaiviral aṉaittum * vāri vāykkŏṇṭa aṭiciliṉ miccil *
uṇṇap pĕṟṟileṉ o kŏṭu viṉaiyeṉ * ĕṉṉai ĕṉ cĕyyap pĕṟṟatu ĕm moye (6)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

713. “O Kanna with cool lotus eyes, you crawled and toddled in the cowherd village and you played in the red sand. I don’t have the good fortune of embracing you and covering my chest with the red sand you played in. When you eat your food you scatter it all over. I never had the good fortune of eating what was left over on your plate. Surely, my karmā is bad. What is the use of my mother gave birth to me?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
தண் அம் குளிர்ந்த அழகிய; தாமரை! தாமரை போன்ற; கண்ணனே கண்ணை உடையவனே; கண்ணா கண்ணனே!; தவழ்ந்து தவழ்ந்து; எழுந்து எழுந்திருந்து; தளர்ந்ததோர் தட்டுத்தடுமாறிய; நடையால் நடையினால்; செம்பொடி மண்ணில் சிவந்த புழுதி மண்ணிலே; ஆடி வந்து விளையாடி வந்து; என்தன் மார்வில் என்னுடைய மார்விலே; மன்னிட நீ அணைய; பெற்றிலேன் பெற்றிலேனே; அந்தோ! என் துர்பாக்யம்!; வண்ணச் செஞ்சிறு சிவப்பழகு பெற்ற சிறிய; கைவிரல் கை விரல்கள்; அனைத்தும் எல்லாவற்றாலும்; வாரி வாரிக்கொண்டு; வாய்க்கொண்ட அமுது செய்த; அடிசிலின் பிரசாதத்தின்; மிச்சில் உண்ண மீதியை உண்ண; பெற்றிலேன் பெறவில்லை; கொடு வினையேன்! மகாபாபியான நான்!; ஓ! என்னை என் செய்யப் ஐயோ! என்னை எதற்காக; பெற்றது பெற்றாளோ!; எம் மோயே என் தாயானவள்!
kaṇṇā oh Kannan!; kaṇṇaṉe the One with eyes; tāmarai! like a lotus that is; taṇ am cool and beautiful; pĕṟṟileṉ I did not receive the joy; maṉṉiṭa of You embracing me; ĕṉtaṉ mārvil upon my chest; āṭi vantu after playing; cĕmpŏṭi maṇṇil on the red dusty earth; tavaḻntu crawling; ĕḻuntu standing up; tal̤arntator stumbling; naṭaiyāl with an unsteady walk; anto! my misfortune!; vāri You scoop up; vāykkŏṇṭa the food; aṉaittum with all; kaiviral the fingers of Your hand; vaṇṇac cĕñciṟu that are tiny, red and beautiful; pĕṟṟileṉ I did not get the chance; miccil uṇṇa to eat the left over; aṭiciliṉ of that divine prasadam; kŏṭu viṉaiyeṉ! I, the great sinner; o! ĕṉṉai ĕṉ cĕyyap why did; ĕm moye my mother!; pĕṟṟatu give birth to me?

PMT 7.7

714 குழகனே! என்றன்கோமளப்பிள்ளாய்!
கோவிந்தா! என்குடங்கையில்மன்னி *
ஒழுகுபேரெழிலிளஞ்சிறுதளிர்போல்
ஒருகையாலொருமுலைமுகம்நெருடா *
மழலைமென்னகையிடையிடையருளா
வாயிலேமுலையிருக்கவென்முகத்தே *
எழில்கொள்நின்திருக்கண்ணிணைநோக்கத்
தன்னையும் இழந்தேனிழந்தேனே.
714 குழகனே என்தன் கோமளப் பிள்ளாய் * கோவிந்தா என் குடங்கையில் மன்னி *
ஒழுகு பேர் எழில் இளஞ்சிறு தளிர்போல் * ஒரு கையால் ஒரு முலை முகம் நெருடா *
மழலை மென்னகை இடையிடை அருளா * வாயிலே முலை இருக்க என் முகத்தே *
எழில் கொள் நின் திருக் கண்ணினை நோக்கந் தன்னையும் * இழந்தேன் இழந்தேனே! (7)
714 kuzhakaṉe ĕṉtaṉ komal̤ap pil̤l̤āy * kovintā ĕṉ kuṭaṅkaiyil maṉṉi *
ŏzhuku per ĕzhil il̤añciṟu tal̤irpol * ŏru kaiyāl ŏru mulai-mukam nĕruṭā *
mazhalai mĕṉṉakai iṭaiyiṭai arul̤ā * vāyile mulai irukka ĕṉ mukatte *
ĕzhil kŏl̤ niṉ tiruk kaṇṇiṉai nokkan taṉṉaiyum * izhanteṉ izhanteṉe! (7)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

714. “O sweet one, my lovely child, Govinda, babies hold on to one of their mothers’ breasts with their young beautiful hands that are as tender as shoots and drink milk. They look at their mother’s face and smile at them. I don’t have the fortune of feeding you milk like that. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
குழகனே! இளையோனே!; என் தன் கோமளப் பிள்ளாய்! எனது அழகிய குமாரனே; கோவிந்தா! கோவிந்தா!; என் குடங்கையில் என்னுடைய கையிலே; மன்னி ஒழுகு பேர் லாவகமாக இருந்து; எழில் இளஞ்சிறு அழகுமிகு இளம்; தளிர் போல் தளிர் போன்ற; ஒரு கையால் ஒரு முலை முகம் ஒரு கையாலே என் மார்பை; நெருடா நெருடிக் கொண்டு; முலை வாயிலே இருக்க மற்றொரு மார்பில் வாய் வைத்து; இடையிடை நடு நடுவே; என் முகத்தே என் முகத்தை நோக்கி; மழலை மென்னகை அருளா மழலையாக சிரித்துக் கொண்டு; எழில் கொள் நின் அழகிய உன்; திருக் கண்ணிணை திருக் கண்களால்; நோக்கந் தன்னையும் பார்க்கிற பார்வையையும்; இழந்தேன் இழந்தேனே! இழந்தேனே! இழந்தேனே!
kuḻakaṉe! oh young One!; ĕṉ taṉ komal̤ap pil̤l̤āy! my beautiful Prince; kovintā! Govinda!; maṉṉi ŏḻuku per You gracefully rest; ĕṉ kuṭaṅkaiyil in my hand; tal̤ir pol like a bud that is; ĕḻil il̤añciṟu beautiful and tender; ŏru kaiyāl ŏru mulai mukam with one hand You press my chest; nĕruṭā play; mulai vāyile irukka and place Your mouth on the other breast; iṭaiyiṭai and in between; ĕṉ mukatte You look at my face; maḻalai mĕṉṉakai arul̤ā with an innocent smile; iḻanteṉ iḻanteṉe! I have lost it, I have lost it! the opportunity to see; nokkan taṉṉaiyum the gaze You give with; ĕḻil kŏl̤ niṉ your beautiful; tiruk kaṇṇiṇai divine eyes

PMT 7.8

715 முழுதும்வெண்ணெயளைந்துதொட்டுண்ணும்
முகிழிளஞ்சிறுத்தாமரைக்கையும் *
எழில்கொள்தாம்புகொண்டடிப்பதற்கெள்கு
நிலையும் வெண்தயிர்தோய்ந்தசெவ்வாயும் *
அழுகையுமஞ்சிநோக்குமந்நோக்கும்
அணிகொள்செஞ்சிறுவாய்நெளிப்பதுவும் *
தொழுகையும் இவைகண்டஅசோதை
தொல்லையின்பத்திறுதிகண்டாளே.
715 முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் * முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும் *
எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் * வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் **
அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் * அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும் *
தொழுகையும் இவை கண்ட அசோதை * தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே (8)
715 muzhutum vĕṇṇĕy al̤aintu tŏṭṭu uṇṇum * mukizh il̤añ ciṟut tāmaraik kaiyum *
ĕzhilkŏl̤ tāmpu kŏṇṭu aṭippataṟku ĕl̤ku nilaiyum * vĕṇ tayir toynta cĕvvāyum **
azhukaiyum añci nokkum an nokkum * aṇikŏl̤ cĕñ ciṟuvāy nĕl̤ippatuvum *
tŏzhukaiyum ivai kaṇṭa acotai * tŏllai-iṉpattu iṟuti kaṇṭāl̤e (8)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

715. “You took butter with your small lotus-bud-like hands and ate it. When Yashodā brought a rope, you (damodara) were afraid she was going to hit you and, your beautiful mouth smeared with yogurt, you were scared as you looked at her and cried and your small red mouth trembled. Then you folded your hands and worshipped her and when she saw this, she found endless joy. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வெண்ணெய் முழுதும் வெண்ணெயை முழுதுமாக; அளைந்து அளைந்து; தொட்டு உண்ணும் எடுத்து உண்கிற; இள முகிழ் தாமரைச் இளந்தளிர்த் தாமரை போன்ற; சிறுகையும் சிறிய கைகளையும்; எழில்கொள் தாம்பு கொண்டு அழகிய தாம்பாலே; அடிப்பதற்கு அடிப்பதற்கு; எள்கு நிலையும் அஞ்சி நிற்கும் நிலையையும்; வெண் தயிர் தோய்ந்த வெண்மையான தயிருடன் கூடிய; செவ்வாயும் சிவந்த வாயையும்; அழுகையும் அழுகையையும்; அஞ்சி நோக்கும் பயந்து பார்க்கிற; அந் நோக்கும் அந்தப் பார்வையையும்; அணிகொள் செஞ்சிறு வாய் அழகிய சிவந்த சிறிய வாய்; நெளிப்பதுவும் நெளிந்திடுவதையும்; தொழுகையும் கை கூப்புவதையும்; இவை இவற்றையெல்லாம்; கண்ட அசோதை நேரில் பார்த்த அசோதை; தொல்லை இன்பத்து பழமையான காலத்து இன்பத்தின்; இறுதி கண்டாளே எல்லையை காணப்பெற்றாள்
ciṟukaiyum with the tiny little hands; il̤a mukiḻ tāmaraic like tender lotus buds; al̤aintu He scooped up; vĕṇṇĕy muḻutum the butter, completely; tŏṭṭu uṇṇum and eating it; ĕl̤ku nilaiyum the fearful frozen stance; aṭippataṟku when He expected beating; ĕḻilkŏl̤ tāmpu kŏṇṭu with a beautiful rope; cĕvvāyum His red mouth; vĕṇ tayir toynta smeared with yogurt; aḻukaiyum the weeping and; añci nokkum the frightened anxious gaze; an nokkum that very look; aṇikŏl̤ cĕñciṟu vāy that beautiful red little mouth; nĕl̤ippatuvum trembling; tŏḻukaiyum He joined hands in a plea; kaṇṭa acotai Yashoda who saw all of these directly; ivai all these things; iṟuti kaṇṭāl̤e and was able to witness; tŏllai iṉpattu the ancient bliss

PMT 7.9

716 குன்றினால்குடைகவித்ததும் கோலக்
குரவைகோத்ததும்குடமாட்டும் *
கன்றினால்விளவெறிந்ததும் காலால்
காளியன்தலைமிதித்ததுமுதலா *
வென்றிசேர்பிள்ளைநல்விளையாட்டமனைத்திலும்
அங்கென்னுள்ளமுள்குளிர *
ஒன்றும்கண்டிடப்பெற்றிலேனடியேன்
காணுமாறினியுண்டெனிலருளே.
716 குன்றினால் குடை கவித்ததும் * கோலக் குரவை கோத்ததுவும் குடமாட்டும் *
கன்றினால் விளவு எறிந்ததும் * காலால் காளியன் தலை மிதித்ததும் முதலா **
வென்றி சேர் பிள்ளை நல் விளையாட்டம் அனைத்திலும் * அங்கு என் உள்ளம் உள்குளிர *
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் அடியேன் * காணுமாறு இனி உண்டெனில் அருளே. (9)
716 kuṉṟiṉāl kuṭai kavittatum * kolak kuravai kottatuvum kuṭamāṭṭum *
kaṉṟiṉāl vil̤avu ĕṟintatum * kālāl kāl̤iyaṉ talai mitittatum mutalā **
vĕṉṟi cer pil̤l̤ai nal vil̤aiyāṭṭam aṉaittilum * aṅku ĕṉ ul̤l̤am ul̤kul̤ira *
ŏṉṟum kaṇṭiṭap pĕṟṟileṉ aṭiyeṉ * kāṇumāṟu iṉi uṇṭĕṉil arul̤e. (9)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

716. “You stopped the rain with Govardhanā mountain and protected the cows. You danced the beautiful kuravai dance and danced on a pot. You picked up the Rakshasās when they came as calves, threw them at the vilam fruit tree and killed them. You danced on the head of Kālingan the snake. I never saw how you played like this as a child— my heart never felt the joy of seeing these things. Give me your grace that I may see you play like that if you can do it again. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
குன்றினால் கோவர்த்தன மலையை; குடை கவித்ததும் குடையாக; தாங்கி நின்றதும் தாங்கி நின்றதும்; கோலக் குரவை குரவை; கோத்ததுவும் கூத்து ஆடியதும்; குட மாட்டும் குடக் கூத்தாடினதும்; கன்றினால் கன்றாய் வந்த; எறிந்ததும் ஒரு அசுரனைக் கொண்டு; விளவு விளங்காய்களை உதிர்த்ததும்; காலால் திருவடிகளாலே; காளியன் காளிய நாகத்தின்; முதலா தலை தலைமேல் நர்த்தனம்; மிதித்ததும் ஆடியதும் ஆகிய இவை; வென்றி சேர் வெற்றி பொருந்திய; நல் பிள்ளை விலக்ஷணமான பால்ய; விளையாட்டம் சேஷ்டிதங்கள்; அனைத்திலும் எல்லாவற்றினுள்ளும்; ஒன்றும் ஒரு சேஷ்டிதத்தையும்; என் உள்ளம் என் நெஞ்சு; உள் குளிர குளிரும்படி; அடியேன் அங்கு நான்; கண்டிடப் கண்ணாரக்கண்டு களிக்க; பெற்றிலேன் பெற்றிலேன்; இனி காணுமாறு இனி காணமுடியுமானால்; உண்டெனில் உண்டெனில்; அருளே அருள வேண்டும்
tāṅki niṉṟatum standing and holding; kuṉṟiṉāl the Govardhana mountain; kuṭai kavittatum as an umbrella; kottatuvum performing; kolak kuravai the kuravai dance; kuṭa māṭṭum dancing on the pot; ĕṟintatum using an asura; kaṉṟiṉāl who came as a calf; vil̤avu to scatter the fruits of a tree; mitittatum dancing; kālāl with the divine feet; mutalā talai on the head of; kāl̤iyaṉ the serpent Kaliga; aṉaittilum among all these; vĕṉṟi cer victorious; nal pil̤l̤ai and extraordinary childhood; vil̤aiyāṭṭam past times; pĕṟṟileṉ I did not get; kaṇṭiṭap to see with the eyes; aṭiyeṉ aṅku of mine; ŏṉṟum not even one; ĕṉ ul̤l̤am until my heart; ul̤ kul̤ira cools; uṇṭĕṉil if its possible; iṉi kāṇumāṟu that I could still see it; arul̤e You must bless me

PMT 7.10

717 வஞ்சமேவிய நெஞ்சுடைப்பேய்ச்சி
வரண்டுநார்நரம்பெழக்கரிந்துக்க *
நஞ்சமார்தருசுழிமுலையந்தோ!
சுவைத்துநீயருள்செய்துவளர்ந்தாய் *
கஞ்சன்நாள்கவர்கருமுகிலெந்தாய் !
கடைப்பட்டேன்வெறிதேமுலைசுமந்து
தஞ்சமேலொன்றிலேனுய்ந்திருந்தேன்
தக்கதேநல்லதாயைப்பெற்றாயே.
717 வஞ்சம் மேவிய நெஞ்சு உடைப் பேய்ச்சி * வரண்டு நார் நரம்பு எழக் கரிந்து உக்க *
நஞ்சம் ஆர்தரு சுழிமுலை அந்தோ * சுவைத்து நீ அருள்செய்து வளர்ந்தாய் **
கஞ்சன் நாள் கவர் கருமுகில் எந்தாய் * கடைப்பட்டேன் வறிதே முலை சுமந்து *
தஞ்ச மேல் ஒன்றிலேன் உய்ந்திருந்தேன் * தக்கதே நல்ல தாயைப் பெற்றாயே (10)
717 vañcam meviya nĕñcu uṭaip peycci * varaṇṭu nār narampu ĕzhak karintu ukka *
nañcam ārtaru cuzhimulai anto * cuvaittu nī arul̤cĕytu val̤arntāy **
kañcaṉ nāl̤ kavar karumukil ĕntāy * kaṭaippaṭṭeṉ vaṟite mulai cumantu *
tañca mel ŏṉṟileṉ uyntirunteṉ * takkate nalla tāyaip pĕṟṟāye (10)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

717. “When you drank milk from the breasts of Putanā, the evil-hearted one, her body became withered, blood flowed out and her nerves were broken. You survived even though you drank her poisonous milk and gave your grace to all. O my father who are like a dark cloud, who took the life of Kamsan, my breasts are a burden to me and I cannot use them. I think I will see you one day and that is the only thing I am living for. You have a good mother, Yashodā. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
வஞ்சம் ஏவிய நெஞ்சு உடைப் வஞ்சக மனமுடைய; பேய்ச்சி பூதனை; நார் நரம்பு கரிந்து உக்க நார்போன்ற நரம்புகள் கருகிட; வரண்டு எழ வரண்டு போகுமளவு; நஞ்சம் ஆர் தரு சுழிமுலை விஷம் தீற்றிய மார்பை; நீ சுவைத்து நீ சுவைத்தும்; அருள் செய்து கிருபையினாலே; வளர்ந்தாய்! உயிருடன் வளர்ந்தாய்; அந்தோ! ஆச்சரியம்!; கஞ்சன் நாள் கவர் கம்சனுடைய ஆயுளைப் பறித்த; கருமுகில் எந்தாய்! காளமேகம் போன்ற நாயகனே!; முலை வறிதே சுமந்து மார்பகத்தை வீணே சுமந்து; கடைப்பட்டேன் கடைகெட்டவளானேன்; தஞ்ச மேல் ஒன்றிலேன் புகலற்றவளாய்; உய்ந்திருந்தேன் ஜீவிக்கிறேன்; தக்கதே தகுதியான; நல்ல தாயை நல்ல தாயை; பெற்றாயே! பெற்றுக் கொண்டாய் போலும்
arul̤ cĕytu by the grace; val̤arntāy! You suvivied and grew; nī cuvaittu even after You sucked; nañcam ār taru cuḻimulai her poinson smeared breast of; peycci Bhutana; vañcam eviya nĕñcu uṭaip who had an evil mind; nār narampu karintu ukka You made her fiber like nerves scorch; varaṇṭu ĕḻa and wither away; anto! thats a miracle!; karumukil ĕntāy! oh raincloud colored Lord; kañcaṉ nāl̤ kavar who took the life of Kamsa; kaṭaippaṭṭeṉ i am a wrethched women; mulai vaṟite cumantu bearing the chest in vain; uyntirunteṉ I continue to live; tañca mel ŏṉṟileṉ with nowhere to take refuge; pĕṟṟāye! it seems You have gotten; takkate a deserving; nalla tāyai good mother

PMT 7.11

718 மல்லைமாநகர்க்கிறையவன்தன்னை
வான்செலுத்திவந் தீங்கணைமாயத்து *
எல்லையில்பிள்ளைசெய்வனகாணாத்
தெய்வத்தேவகிபுலம்பியபுலம்பல் *
கொல்லிகாவலன்மாலடிமுடிமேல்
கோலமாம்குலசேகரன்சொன்ன *
நல்லிசைத்தமிழ்மாலைவல்லார்கள்
நண்ணுவாரொல்லைநாரணனுலகே. (2)
718 ## மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை * வான் செலுத்தி வந்து ஈங்கணை மாயத்து *
எல்லையில் பிள்ளை செய்வன காணாத் * தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல் **
கொல்லி காவலன் மால் அடி முடிமேல் * கோலமாம் குலசேகரன் சொன்ன *
நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள் * நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (11)
718 ## mallai mā nakarkku iṟaiyavaṉtaṉṉai * vāṉ cĕlutti vantu īṅkaṇai māyattu *
ĕllaiyil pil̤l̤ai cĕyvaṉa kāṇāt * tĕyvat tevaki pulampiya pulampal **
kŏlli kāvalaṉ māl aṭi muṭimel * kolamām kulacekaraṉ cŏṉṉa *
nallicait tamizh mālai vallārkal̤ * naṇṇuvār ŏllai nāraṇaṉ ulake (11)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

718. Kulasekharan the king of கொல்லி who bowed down with his head and worshiped Kannan wrote a garland of ten Tamil pāsurams describing how Devaki was sad not to have the fortune of seeing her son grow up who fought with Kamsan the king of Madhura and killed him. If devotees learn and recite these fine musical Tamil pāsurams they will be with Naranan soon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
மல்லை மா நகர்க்கு செல்வம் மிக்க பெரிய நகரத்திற்கு; இறையவன் தன்னை தலைவனாயிருந்த கம்சனை; வான் செலுத்தி மேலுலகத்திற்கு அனுப்பி; ஈங்கு வந்து அணை இங்கே வந்து சேர்ந்த; பிள்ளை பிள்ளை; மாயத்து அற்புதத்தின்; எல்லையில் எல்லையில்லாதவைகளை; செய்வன செய்பவற்றை; காணா காணப்பெறாத; தெய்வத் தேவகி தெய்வத் தேவகியானவள்; புலம்பிய புலம்பல் புலம்பியபடி சொன்னவற்றை; கொல்லி காவலன் கொல்லி நகர்க்கு அரசராய்; மால் அடி பெருமானின் பாதங்களை; முடிமேல் தன் தலை மீது; கோலமாம் அலங்காரமாக உடைய; குலசேகரன் சொன்ன குலசேகராழ்வார் அருளிய; நல்லிசைத் நல்ல இசையுடைய; தமிழ் மாலை தமிழ்ப் பாடல் மாலையை; வல்லார்கள் ஓதவல்லவர்கள்; ஒல்லை நாரணன் விரைவாக நாரயணன்; உலகே உலகை; நண்ணுவார் சேரப்பெறுவர்
iṟaiyavaṉ taṉṉai Kamsa, who ruled; mallai mā nakarkku the great city filled with wealth; vāṉ cĕlutti You sent him to the other world; īṅku vantu aṇai and came here; vallārkal̤ those who recite; tamiḻ mālai the tamil pasurams; nallicait composed with melodious music; kulacekaraṉ cŏṉṉa by Kulasekara Azhwar; kolamām who has as adorned; muṭimel on the head; māl aṭi the Lord's feet; kŏlli kāvalaṉ and is the king of the city of Kolli; pulampiya pulampal about the lamenting words of; tĕyvat tevaki mother Devaki who; kāṇā did not get to see; pil̤l̤ai that child's; cĕyvaṉa performance of; ĕllaiyil endless; māyattu miracles; naṇṇuvār will attain; ulake the world of; ŏllai nāraṇaṉ Narayanan soon