PMT 7.11

நாரணன் உலகு நண்ணுவர்

718 மல்லைமாநகர்க்கிறையவன்தன்னை
வான்செலுத்திவந் தீங்கணைமாயத்து *
எல்லையில்பிள்ளைசெய்வனகாணாத்
தெய்வத்தேவகிபுலம்பியபுலம்பல் *
கொல்லிகாவலன்மாலடிமுடிமேல்
கோலமாம்குலசேகரன்சொன்ன *
நல்லிசைத்தமிழ்மாலைவல்லார்கள்
நண்ணுவாரொல்லைநாரணனுலகே. (2)
718 ## mallai mā nakarkku iṟaiyavaṉtaṉṉai * vāṉ cĕlutti vantu īṅkaṇai māyattu *
ĕllaiyil pil̤l̤ai cĕyvaṉa kāṇāt * tĕyvat tevaki pulampiya pulampal **
kŏlli kāvalaṉ māl aṭi muṭimel * kolamām kulacekaraṉ cŏṉṉa *
nallicait tamizh mālai vallārkal̤ * naṇṇuvār ŏllai nāraṇaṉ ulake (11)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

718. Kulasekharan the king of கொல்லி who bowed down with his head and worshiped Kannan wrote a garland of ten Tamil pāsurams describing how Devaki was sad not to have the fortune of seeing her son grow up who fought with Kamsan the king of Madhura and killed him. If devotees learn and recite these fine musical Tamil pāsurams they will be with Naranan soon.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்லை மா நகர்க்கு செல்வம் மிக்க பெரிய நகரத்திற்கு; இறையவன் தன்னை தலைவனாயிருந்த கம்சனை; வான் செலுத்தி மேலுலகத்திற்கு அனுப்பி; ஈங்கு வந்து அணை இங்கே வந்து சேர்ந்த; பிள்ளை பிள்ளை; மாயத்து அற்புதத்தின்; எல்லையில் எல்லையில்லாதவைகளை; செய்வன செய்பவற்றை; காணா காணப்பெறாத; தெய்வத் தேவகி தெய்வத் தேவகியானவள்; புலம்பிய புலம்பல் புலம்பியபடி சொன்னவற்றை; கொல்லி காவலன் கொல்லி நகர்க்கு அரசராய்; மால் அடி பெருமானின் பாதங்களை; முடிமேல் தன் தலை மீது; கோலமாம் அலங்காரமாக உடைய; குலசேகரன் சொன்ன குலசேகராழ்வார் அருளிய; நல்லிசைத் நல்ல இசையுடைய; தமிழ் மாலை தமிழ்ப் பாடல் மாலையை; வல்லார்கள் ஓதவல்லவர்கள்; ஒல்லை நாரணன் விரைவாக நாரயணன்; உலகே உலகை; நண்ணுவார் சேரப்பெறுவர்