மருவு நின் திரு நெற்றியில் சுட்டி அசை தர மணி வாய் இடை முத்தம் தருதலும் உன் தன் தாதையை போலும் வடிவு கண்டு கொண்டு உள்ளம் உள் குளிர விரலை செஞ்சிறு வாய் இடை சேர்த்து வெகுளியாய் நின்று உரைக்கும் அவ் வுரையும் திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே –7-5-
பதவுரை
நின் திரு நெற்றியில் மருவும் சுட்டி அசை தர–உன்னுடைய திரு நெற்றியிலே பொருந்தியிருக்கிற சுட்டியானது