PMT 7.2

நீ மல்லாந்து கிடந்ததைக் காணப்பெற்றிலேன்

709 வடிக்கொளஞ்சனமெழுதுசெம்மலர்க்கண் மருவி
மேலினிதொன்றினைநோக்கி *
முடக்கிச்சேவடிமலர்ச்சிறுகருந்தாள்
பொலியுநீர்முகில்குழவியேபோல *
அடக்கியாரச்செஞ்சிறுவிரலனைத்தும்
அங்கையோடணைந்தானையிற்கிடந்த *
கிடக்கைகண்டிடப்பெற்றிலனந்தோ!
கேசவா! கெடுவேன்கெடுவேனே.
709 vaṭik kŏl̤ añcaṉam ĕzhutu cĕm malarkkaṇ * maruvi mel iṉitu ŏṉṟiṉai nokki *
muṭakkic cevaṭi malarc ciṟu karuntāl̤ * pŏliyum nīr-mukil kuzhaviye pola **
aṭakkiyārac cĕñ ciṟu viral aṉaittum * aṅkaiyoṭu aṇaintu āṇaiyil kiṭanta *
kiṭakkai kaṇṭiṭap pĕṟṟilaṉ anto * kecavā kĕṭuveṉ kĕṭuveṉe (2)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

709. “Your lotus eyes darkened with kohl are beautiful as you look up and see the decorations on the cradle. You look like a baby cloud. As you bend your legs and put your fingers in your mouth, you look like an elephant bending its trunk and sleeping. O Kesava, I don’t have the good fortune of seeing these things when you are a baby. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வடிக் கொள் தீர்மையாக; அஞ்சனம் எழுது மையிடப்பெற்ற; செம் மலர் செந்தாமரை மலர் போன்ற; கண் கண்களாலே; மேல் மேலே தொங்கவிடப்பட்டிருக்கும்; ஒன்றினை விளையாட்டுப் பொருளை; மருவி இனிது இனிதாகப் பொருந்த; நோக்கி பார்த்தும்; கருந்தாள் கறுத்த புறந்தாளையுடைய; மலர் மலரையொத்த; சிறு சேவடி சிறிய பாதங்களை; முடக்கி முடக்கிக் கொண்டும்; பொலியும் நீர் நீரைப் பருகி விளங்கும்; முகில் குழவியே போல மேகக் குட்டிப்போல; செஞ் சிறு விரல் அழகிய சிறு விரல்கள்; அனைத்தும் எல்லாவற்றையும்; அங்கையோடு உள்ளங்கையிலே; அடக்கியார அடங்கும் படி; அணைந்து பிடித்துக் கொண்டும்; ஆனையிற் கிடந்த யானைக் கன்றைப் போலே; கிடக்கை படுத்திருப்பதை; கண்டிட பெற்றிலன் பார்க்கப் பெறவில்லை; அந்தோ! கேசவா! அந்தோ! கேசவா!; கெடுவேன் பாவியானேன்!; கெடுவேனே! பாவியானேனே!