PMT 7.10

கண்ணா! நீ நல்ல தாயைப் பெற்றாய்!

717 வஞ்சமேவிய நெஞ்சுடைப்பேய்ச்சி
வரண்டுநார்நரம்பெழக்கரிந்துக்க *
நஞ்சமார்தருசுழிமுலையந்தோ!
சுவைத்துநீயருள்செய்துவளர்ந்தாய் *
கஞ்சன்நாள்கவர்கருமுகிலெந்தாய் !
கடைப்பட்டேன்வெறிதேமுலைசுமந்து
தஞ்சமேலொன்றிலேனுய்ந்திருந்தேன்
தக்கதேநல்லதாயைப்பெற்றாயே.
717 vañcam meviya nĕñcu uṭaip peycci * varaṇṭu nār narampu ĕzhak karintu ukka *
nañcam ārtaru cuzhimulai anto * cuvaittu nī arul̤cĕytu val̤arntāy **
kañcaṉ nāl̤ kavar karumukil ĕntāy * kaṭaippaṭṭeṉ vaṟite mulai cumantu *
tañca mel ŏṉṟileṉ uyntirunteṉ * takkate nalla tāyaip pĕṟṟāye (10)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

717. “When you drank milk from the breasts of Putanā, the evil-hearted one, her body became withered, blood flowed out and her nerves were broken. You survived even though you drank her poisonous milk and gave your grace to all. O my father who are like a dark cloud, who took the life of Kamsan, my breasts are a burden to me and I cannot use them. I think I will see you one day and that is the only thing I am living for. You have a good mother, Yashodā. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வஞ்சம் ஏவிய நெஞ்சு உடைப் வஞ்சக மனமுடைய; பேய்ச்சி பூதனை; நார் நரம்பு கரிந்து உக்க நார்போன்ற நரம்புகள் கருகிட; வரண்டு எழ வரண்டு போகுமளவு; நஞ்சம் ஆர் தரு சுழிமுலை விஷம் தீற்றிய மார்பை; நீ சுவைத்து நீ சுவைத்தும்; அருள் செய்து கிருபையினாலே; வளர்ந்தாய்! உயிருடன் வளர்ந்தாய்; அந்தோ! ஆச்சரியம்!; கஞ்சன் நாள் கவர் கம்சனுடைய ஆயுளைப் பறித்த; கருமுகில் எந்தாய்! காளமேகம் போன்ற நாயகனே!; முலை வறிதே சுமந்து மார்பகத்தை வீணே சுமந்து; கடைப்பட்டேன் கடைகெட்டவளானேன்; தஞ்ச மேல் ஒன்றிலேன் புகலற்றவளாய்; உய்ந்திருந்தேன் ஜீவிக்கிறேன்; தக்கதே தகுதியான; நல்ல தாயை நல்ல தாயை; பெற்றாயே! பெற்றுக் கொண்டாய் போலும்