ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத் தடம் கண்ணினன் தாலோ வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ வேழ போதக மன்னவன் தாலோ ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத தாயிற் கடை யாயின தாயே –7-1-
பதவுரை
ஆலை நீள் கரும்பு அன்னவன்–ஆலையிலிட்டு ஆடத் தகுந்த நீண்ட கரும்பு போன்ற கண்ணனே! தாலோ –(உனக்குத்) தாலாட்டு அம்புயம் தட கண்ணினன்–தாமரை