PMT 7.6

நீ உண்ட உணவின் மிச்சம் எனக்குக் கிடைக்கவில்லை!

713 தண்ணந்தாமரைக்கண்ணனே! கண்ணா!
தவழ்ந்தெழுந்துதளர்ந்ததோர்நடையால் *
மண்ணில்செம்பொடியாடிவந்து என்தன்
மார்வில்மன்னிடப்பெற்றிலேனந்தோ *
வண்ணச்செஞ்சிறுகைவிரலனைத்தும்
வாரிவாய்க்கொண்டஅடிசிலின்மிச்சல் *
உண்ணப்பெற்றிலேன் ஓ! கொடுவினையேன்
என்னைஎஞ்செய்யப்பெற்றதெம்மோயே?
713 taṇ antāmaraik kaṇṇaṉe kaṇṇā * tavazhntu ĕzhuntu tal̤arntator naṭaiyāl *
maṇṇil cĕmpŏṭi āṭi vantu * ĕṉtaṉ mārvil maṉṉiṭap pĕṟṟileṉ anto **
vaṇṇac cĕñciṟu kaiviral aṉaittum * vāri vāykkŏṇṭa aṭiciliṉ miccil *
uṇṇap pĕṟṟileṉ o kŏṭu viṉaiyeṉ * ĕṉṉai ĕṉ cĕyyap pĕṟṟatu ĕm moye (6)

Ragam

Kēdāragauḷa / கேதாரகௌள

Thalam

Aḍa / அட

Bhavam

Mother

Simple Translation

713. “O Kanna with cool lotus eyes, you crawled and toddled in the cowherd village and you played in the red sand. I don’t have the good fortune of embracing you and covering my chest with the red sand you played in. When you eat your food you scatter it all over. I never had the good fortune of eating what was left over on your plate. Surely, my karmā is bad. What is the use of my mother gave birth to me?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தண் அம் குளிர்ந்த அழகிய; தாமரை! தாமரை போன்ற; கண்ணனே கண்ணை உடையவனே; கண்ணா கண்ணனே!; தவழ்ந்து தவழ்ந்து; எழுந்து எழுந்திருந்து; தளர்ந்ததோர் தட்டுத்தடுமாறிய; நடையால் நடையினால்; செம்பொடி மண்ணில் சிவந்த புழுதி மண்ணிலே; ஆடி வந்து விளையாடி வந்து; என்தன் மார்வில் என்னுடைய மார்விலே; மன்னிட நீ அணைய; பெற்றிலேன் பெற்றிலேனே; அந்தோ! என் துர்பாக்யம்!; வண்ணச் செஞ்சிறு சிவப்பழகு பெற்ற சிறிய; கைவிரல் கை விரல்கள்; அனைத்தும் எல்லாவற்றாலும்; வாரி வாரிக்கொண்டு; வாய்க்கொண்ட அமுது செய்த; அடிசிலின் பிரசாதத்தின்; மிச்சில் உண்ண மீதியை உண்ண; பெற்றிலேன் பெறவில்லை; கொடு வினையேன்! மகாபாபியான நான்!; ஓ! என்னை என் செய்யப் ஐயோ! என்னை எதற்காக; பெற்றது பெற்றாளோ!; எம் மோயே என் தாயானவள்!