அவதாரிகை –
எட்டாம் பாட்டு -நான் இழந்த இழவு எல்லாம் ஸ்ரீ யசோதை பிராட்டி பெற்றாள் என்கிறாள் –
முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளம் சிறு தாமரை கையும் எழில் கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ் வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணி கொள் செஞ்சிறு வாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட வசோதை தொல்லை இன்பத்து இறுதி