Chapter 3

Describing separation from worldly people after becoming Sriranganatha's devotee - (மெய் இல்)

அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்
Describing separation from worldly people after becoming Sriranganatha's devotee - (மெய் இல்)
The supreme devotee and the jewel among kings, this āzhvār, renounced worldly life, declaring that loving Lord Ranganatha is the only noble deed.
பரம பக்தரும், முடிவேந்தர் சிகாமணியுமான இவ்வாழ்வார் உலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கி அவ்வாழ்க்கையில் அரங்கனிடம் அன்பு கொண்டிருப்பது ஒன்றே சிறந்த செயல் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
Verses: 668 to 676
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PMT 3.1

668 மெய்யில்வாழ்க்கையை மெய்யெனக்கொள்ளும் * இவ்
வையந்தன்னொடும் கூடுவதில்லையான் *
ஐயனேஅரங்கா என்றழைக்கின்றேன் *
மையல்கொண்டொழிந்தேன் என்தன்மாலுக்கே. (2)
668 ## மெய் இல் வாழ்க்கையை * மெய் எனக் கொள்ளும் * இவ்
வையம்தன்னொடும் * கூடுவது இல்லை யான் **
ஐயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
மையல் கொண்டொழிந்தேன் * என்தன் மாலுக்கே (1)
668 ## mĕy il vāzhkkaiyai * mĕy ĕṉak kŏl̤l̤um * iv
vaiyamtaṉṉŏṭum * kūṭuvatu illai yāṉ **
aiyaṉe * araṅkā ĕṉṟu azhaikkiṉṟeṉ *
maiyal kŏṇṭŏzhinteṉ * ĕṉtaṉ mālukke (1)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

668. I don't want to join the people of this world to whom the illusory life on earth is true. I beseech You, my father, my lord Ranga. I am in deep love with You and I suffer.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெய் இல் நிலையற்ற பொய்யான; வாழ்க்கையை உலக வாழ்க்கையை; மெய் என நிலையானது; கொள்ளும் என்று கருதுகிற; இவ்வையம் தன்னொடும் உலகத்தோடு; யான் இனி நான்; கூடுவது இல்லை சேர்வதில்லை; ஐயனே! அரங்கா! ஐயனே! அரங்கா!; என்று அழைக்கின்றேன் என்று அழைக்கின்றேன்; என் தன் என்னிடம் அன்பு கொண்டுள்ள; மாலுக்கே பெருமானிடத்தே; மையல் அன்பு பூண்டு; கொண்டொழிந்தேன் இருக்கிறேன்

PMT 3.2

669 நூலினேரிடையார்திறத்தே நிற்கும் *
ஞாலந்தன்னொடும் கூடுவதில்லையான் *
ஆலியாஅழையா அரங்கா! என்று *
மாலெழுந்தொழிந்தேன் என்தன்மாலுக்கே.
669 நூலின் நேர் இடையார் * திறத்தே நிற்கும் *
ஞாலம் தன்னொடும் * கூடுவது இல்லை யான் **
ஆலியா அழையா * அரங்கா என்று *
மால் எழுந்தொழிந்தேன் * என்தன் மாலுக்கே (2)
669 nūliṉ ner-iṭaiyār * tiṟatte niṟkum *
ñālam taṉṉŏṭum * kūṭuvatu illai yāṉ **
āliyā azhaiyā * araṅkā ĕṉṟu *
māl ĕzhuntŏzhinteṉ * ĕṉtaṉ mālukke (2)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

669. I don't want to associate with those who love women with beautiful , thread-like slender waists. I call out in love," O Ranga! You sleep on the banyan leaf!" My love increases and I suffer.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நூலின் நேர் நூல் போன்று மெல்லிய; இடை யார் இடையையுடைய; திறத்தே நிற்கும் பெண்களிடத்தே ஈடுபடும்; ஞாலம் தன்னொடும் இவ்வுலகத்தோடே; யான் யான்; கூடுவது இல்லை சேரப்போவது இல்லை; ஆலியா அன்பினால் ஆடி; அரங்கா! என்று அரங்கா! என்று; அழையா அழைத்து; என்தன் மாலுக்கே என் திருமாலிடமே; மால் மையல்; எழுந்தொழிந்தேன் கொண்டுள்ளேன்

PMT 3.3

670 மாரனார்வரிவெஞ்சிலைக் காட்செய்யும் *
பாரினாரொடும் கூடுவதில்லையான் *
ஆரமார்வன் அரங்கனனந்தன் * நல்
நாரணன் நரகாந்தகன்பித்தனே.
670 மாரனார் * வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும் *
பாரினாரொடும் * கூடுவது இல்லை யான் **
ஆர மார்வன் * அரங்கன் அனந்தன் * நல்
நாரணன் * நரகாந்தகன் பித்தனே (3)
670 māraṉār * vari vĕñ cilaikku āṭcĕyyum *
pāriṉārŏṭum * kūṭuvatu illai yāṉ **
āra-mārvaṉ * araṅkaṉ aṉantaṉ * nal
nāraṇaṉ * narakāntakaṉ pittaṉe (3)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

670. I am not in the company of people who yield to the mischievous arrows of the love-god(Manmathan) My Rangan’s chest is adorned with garlands and he is my good Nāranan who rests on Adishesha. He saves his devotees from falling into hell. I am crazy for of Him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாரனார் மன்மதனுடைய; வரி வெம் அழகிய கடுமையான; சிலைக்கு வில்லுக்கு; ஆட்செய்யும் கட்டுப்பட்டு இருக்கும்; பாரினாரொடும் இவ்வுலக மக்களோடு; கூடுவது இல்லை யான் யான் சேர மாட்டேன்; ஆர மார்வன் மாலை அணிந்துள்ள; அனந்தன் அனந்தன்; நல் நாரணன் நாராயணன் பக்தர்களை; நரகாந்தகன் நரகத்திலிருந்து காப்பவனான; அரங்கன் அரங்கனின்; பித்தனே பித்தனாக இருக்கிறேன்

PMT 3.4

671 உண்டியேயுடையே யுகந்தோடும் * இம்
மண்டலத்தொடும் கூடுவதில்லையான் *
அண்டவாணன் அரங்கன் * வன்பேய்முலை
உண்டவாயன்தன் உன்மத்தன்காண்மினே.
671 உண்டியே உடையே * உகந்து ஓடும் * இம்
மண்டலத்தொடும் * கூடுவது இல்லை யான் **
அண்டவாணன் * அரங்கன் வன் பேய் முலை *
உண்ட வாயன்தன் * உன்மத்தன் காண்மினே (4)
671 uṇṭiye uṭaiye * ukantu oṭum * im
maṇṭalattŏṭum * kūṭuvatu illai yāṉ **
aṇṭavāṇaṉ * araṅkaṉ vaṉ pey-mulai *
uṇṭa vāyaṉtaṉ * uṉmattaṉ kāṇmiṉe (4)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

671. The people of this world crave for food and clothes and search for them. I do not want to join them. I am crazy of Rangan, the lord of the world, who drank milk from the breasts of the cruel devil Putanā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உண்டியே உடையே உணவையும் உடையையுமே; உகந்து ஓடும் விரும்பி ஓடுகின்ற; இம் மண்டலத்தொடும் இந்த உலகத்தாரோடு; கூடுவது இல்லை யான் சேர மாட்டேன்; அண்டவாணன் விண்ணவர்களுக்குத் தலைவனும்; வன் பேய் வன்மையான பேய் போன்றவளிடம்; முலை பாலை; உண்ட வாயன் உண்ட வாயனான; அரங்கன் அரங்கன் மீது; உன்மத்தன் பைத்தியமாகியுள்ளதை; காண்மினே காணுங்கள்

PMT 3.5

672 தீதில்நன்னெறிநிற்கஅல்லாதுசெய் *
நீதியாரொடும் கூடுவதில்லையான் *
ஆதிஆயன் அரங்கன் * அந்தாமரைப்
பேதைமாமணவாளன்றன் பித்தனே.
672 தீதில் நன்னெறி நிற்க * அல்லாது செய் *
நீதியாரொடும் * கூடுவது இல்லை யான் **
ஆதி ஆயன் * அரங்கன் அந் தாமரைப் *
பேதை மா மணவாளன் * தன் பித்தனே (5)
672 tītil naṉṉĕṟi niṟka * allātu cĕy *
nītiyārŏṭum * kūṭuvatu illai yāṉ **
āti āyaṉ * araṅkaṉ an tāmaraip *
petai mā maṇavāl̤aṉ * taṉ pittaṉe (5)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

672. I do not join with those who do evil things, when there are good things to do. I am crazy of Rangan, the cowherd, the primordial force, the beloved husband of His consort Lakshmi seated on a beautiful lotus.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தீதில் நன்னெறி தீதற்ற நல்வழி; நிற்க இருக்கும்போது; அல்லாது செய் மற்றதை செய்ய; நீதியாரொடும் விரும்புபவர்களுடன்; கூடுவது இல்லை யான் யான் சேர்வதில்லை; ஆதி தொன்று தொட்டு; ஆயன் ஆயர்பிரான்; அந் தாமரை அழகிய தாமரை மலரில்; பேதை மா அவதரித்த பிராட்டியின்; மணவாளன் மணாளன்; அரங்கன் தன் அரங்கனிடத்தில்; பித்தனே பித்துப் பிடித்து இருக்கிறேன்

PMT 3.6

673 எம்பரத்தரல்லாரொடும் கூடலன் *
உம்பர்வாழ்வை ஒன்றாகக்கருதிலன் *
தம்பிரானமரர்க்கு * அரங்கநகர்
எம்பிரானுக்கு எழுமையுமபித்தனே.
673 எம் பரத்தர் * அல்லாரொடும் கூடலன் *
உம்பர் வாழ்வை * ஒன்றாகக் கருதிலன் **
தம்பிரான் அமரர்க்கு * அரங்க நகர் *
எம்பிரானுக்கு * எழுமையும் பித்தனே (6)
673 ĕm parattar * allārŏṭum kūṭalaṉ *
umpar vāzhvai * ŏṉṟākak karutilaṉ **
tampirāṉ amararkku * araṅka nakar *
ĕmpirāṉukku * ĕzhumaiyum pittaṉe (6)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

673.I will not seek the company of those who are not His devotees. Nor do I long for the life of the gods above. In all my seven births I want to be an ardent devotee of my dear god of the gods in divine Srirangam.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம் பரத்தர் என் போன்ற அடியாராக; அல்லாரொடும் இல்லாதவரோடு; கூடலன் நான் கூடமாட்டேன்; உம்பர் தேவர்களின் சொர்க்கம் முதலிய; வாழ்வை செல்வத்தை; ஒன்றாக ஒரு பொருளாகக் கருத மாட்டேன்; அமரர்க்கு அமர்களுக்கு; தம்பிரான் தலைவனாய்; அரங்க நகர் அரங்க நகர்; எம்பிரானுக்கு பெருமானுக்கு; எழுமையும் ஏழ்பிறப்பிலும்; பித்தனே பித்தனாவேன்

PMT 3.7

674 எத்திறத்திலும் யாரொடும்கூடும் * அச்
சித்தந்தன்னைத்தவிர்த்தனன் செங்கண்மால் *
அத்தனே! அரங்கா! என்றழைக்கின்றேன் *
பித்தனாயொழிந்தேன் எம்பிரானுக்கே.
674 எத் திறத்திலும் * யாரொடும் கூடும் * அச்
சித்தந்தன்னைத் * தவிர்த்தனன் செங்கண் மால் **
அத்தனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
பித்தனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (7)
674 ĕt tiṟattilum * yārŏṭum kūṭum * ac
cittantaṉṉait * tavirttaṉaṉ cĕṅkaṇ māl **
attaṉe * araṅkā ĕṉṟu azhaikkiṉṟeṉ *
pittaṉāy ŏzhinteṉ * ĕmpirāṉukke (7)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

674. My mind shuns the thought of joining anyone who is not your devotee. I call you, “O Thirumāl with beautiful eyes, You are my Rangan, You are my lord!” and O lord, I have become crazy .

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எத்திறத்திலும் எந்த விஷயத்திலும்; யாரொடும் கூடும் எல்லாரோடும் சேரும்; அச்சித்தம் அப்படிப்பட்ட சித்தம்; தன்னை தன்னை; செங்கண் மால் எம்பெருமான்; தவிர்த்தனன் நீக்கினான்; அத்தனே! அரங்கா! ஸ்வாமியே! ரங்கனே!; என்று என்று; அழைக்கின்றேன் அழைக்கின்றேன்; எம்பிரானுக்கே எம்பிரானுக்கே; பித்தனாய் ஒழிந்தேன் பித்தனாய் ஆனேன்

PMT 3.8

675 பேயரே எனக்குயாவரும் * யானுமோர்
பேயனேஎவர்க்கும் இதுபேசியென்? *
ஆயனேஅரங்கா என்றழைக்கின்றேன் *
பேயனாயொழிந்தேன் எம்பிரானுக்கே.
675 பேயரே * எனக்கு யாவரும் * யானும் ஓர்
பேயனே * எவர்க்கும் இது பேசி என் **
ஆயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
பேயனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (8)
675 peyare * ĕṉakku yāvarum * yāṉum or
peyaṉe * ĕvarkkum itu peci ĕṉ **
āyaṉe * araṅkā ĕṉṟu azhaikkiṉṟeṉ *
peyaṉāy ŏzhinteṉ * ĕmpirāṉukke (8)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

675. Everyone in the world looks crazy to me. and I am also crazy. What's the use in calling like this? I call out , “O cowherd, O Ranga!” and I become crazy for you, my dear lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாவரும் எல்லாரும்; எனக்கு என்னைப் பொருத்தவரை; பேயரே பேய் போன்றவரே; எவர்க்கும் எல்லாருக்கும்; யானும் ஓர் பேயனே நானும் ஒரு பேய்தான்!; இது பேசி என்! இப்படி பேசி என்ன பயன்; ஆயனே! அரங்கா! ஆயனே! அரங்கா!; என்று என்று; அழைக்கின்றேன் அழைத்திடுகிறேன்; எம்பிரானுக்கே எம்பிரானுக்கே; பேயனாய் பித்து பிடித்தவனாக; ஒழிந்தேன் ஆனேன்

PMT 3.9

676 அங்கையாழி அரங்கனடியிணை *
தங்குசிந்தைத் தனிப்பெரும்பித்தனாய் *
கொங்கர்கோன் குலசேகரன்சொன்னசொல் *
இங்குவல்லவர்க்கு ஏதமொன்றில்லையே. (2)
676 ## அங்கை ஆழி * அரங்கன் அடியிணை *
தங்கு சிந்தைத் * தனிப் பெரும் பித்தனாய் **
கொங்கர்கோன் * குலசேகரன் சொன்ன சொல் *
இங்கு வல்லவர்க்கு * ஏதம் ஒன்று இல்லையே (9)
676 ## aṅkai-āzhi * araṅkaṉ aṭiyiṇai *
taṅku cintait * taṉip pĕrum pittaṉāy **
kŏṅkarkoṉ * kulacekaraṉ cŏṉṉa cŏl *
iṅku vallavarkku * etam ŏṉṟu illaiye (9)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

676. Kulasekharan, the Chera king, sings about Arangan who holds the shining discus(chakra) in His beautiful hands and His feet on which the mind rests Those who recite these verses of Kulasekharan, will not have any trouble in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கை அழகிய கையில்; ஆழி சக்கரம் ஏந்திய; அரங்கன் அரங்கனின்; அடி இணை திருவடிகளில்; தங்கு சிந்தை தங்கி இருக்கும் மனமும்; தனி பெரும் ஒப்புற்ற; பித்தனாய் அன்பையுடையவனும்; கொங்கர் சேரதேசத்தவர்களின்; கோன் தலைவனுமான; குலசேகரன் குலசேகராழ்வார்; சொன்ன அருளிச்செய்த; சொல் இங்கு இப்பாசுரங்கள் இங்கு; வல்லவர்க்கு ஓத வல்லவர்க்கு; ஏதம் ஒன்று இல்லையே இடையூறு எதுவும் இருக்காது