PMT 3.2

மாலிடம் மால்கொண்டேன்

669 நூலினேரிடையார்திறத்தே நிற்கும் *
ஞாலந்தன்னொடும் கூடுவதில்லையான் *
ஆலியாஅழையா அரங்கா! என்று *
மாலெழுந்தொழிந்தேன் என்தன்மாலுக்கே.
669 nūliṉ ner-iṭaiyār * tiṟatte niṟkum *
ñālam taṉṉŏṭum * kūṭuvatu illai yāṉ **
āliyā azhaiyā * araṅkā ĕṉṟu *
māl ĕzhuntŏzhinteṉ * ĕṉtaṉ mālukke (2)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

669. I don't want to associate with those who love women with beautiful , thread-like slender waists. I call out in love," O Ranga! You sleep on the banyan leaf!" My love increases and I suffer.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நூலின் நேர் நூல் போன்று மெல்லிய; இடை யார் இடையையுடைய; திறத்தே நிற்கும் பெண்களிடத்தே ஈடுபடும்; ஞாலம் தன்னொடும் இவ்வுலகத்தோடே; யான் யான்; கூடுவது இல்லை சேரப்போவது இல்லை; ஆலியா அன்பினால் ஆடி; அரங்கா! என்று அரங்கா! என்று; அழையா அழைத்து; என்தன் மாலுக்கே என் திருமாலிடமே; மால் மையல்; எழுந்தொழிந்தேன் கொண்டுள்ளேன்