Chapter 4

Wanting to become something on the hills of Thiruvengadam - (ஊன் ஏறு)

திருவேங்கடத்தில் பிறத்தலும் இருத்தலும் போதியது எனல்
Wanting to become something on the hills of Thiruvengadam - (ஊன் ஏறு)

The One who reclines in Thiruvarangam stands on the Thiruvenkatam hill. Shouldn't a person born as a human seek the connection with Thiruvenkatam? The cool, flowing streams of Venkata Hill are where the Lord delights in residing! Won't I be born as a stork living by the lake on that hill? Won't I be a fish living in the holy pond of Thiruvenkatam? Can't

+ Read more

திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவனே திருவேங்கடமலையில் நிற்கிறான். மனிதனாகப் பிறந்தவன் திருவேங்கடமலையின் சம்பந்தத்தைப் பெறவேண்டாமா? திருவேங்கடவன் விரும்பிவாழும் மலையன்றோ குளிரருவி வேங்கடம்! அம்மலையில் ஏரிக்கரையில் வாழும் நாரையாய்ப் பிறக்கமாட்டேனா! திருவேங்கடச் சுனையில் வாழும் மீனாக

+ Read more
Verses: 677 to 687
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Recital benefits: Will become devotees of the Lord
  • PMT 4.1
    677 ## ஊன் ஏறு செல்வத்து * உடற்பிறவி யான் வேண்டேன் *
    ஆனேறு ஏழ் வென்றான் * அடிமைத் திறம் அல்லால் **
    கூன் ஏறு சங்கம் இடத்தான் * தன் வேங்கடத்து *
    கோனேரி வாழும் * குருகாய்ப் பிறப்பேனே (1)
  • PMT 4.2
    678 ஆனாத செல்வத்து * அரம்பையர்கள் தன் சூழ *
    வான் ஆளும் செல்வமும் * மண் அரசும் யான் வேண்டேன் **
    தேன் ஆர் பூஞ்சோலைத் * திருவேங்கடச் சுனையில் *
    மீனாய்ப் பிறக்கும் * விதி உடையேன் ஆவேனே (2)
  • PMT 4.3
    679 பின் இட்ட சடையானும் * பிரமனும் இந்திரனும் *
    துன்னிட்டுப் புகல் அரிய * வைகுந்த நீள் வாசல் **
    மின் வட்டச் சுடர் ஆழி * வேங்கடக்கோன் தான் உமிழும் *
    பொன் வட்டில் பிடித்து உடனே * புகப்பெறுவேன் ஆவேனே (3)
  • PMT 4.4
    680 ஒண் பவள வேலை * உலவு தன் பாற்கடலுள் *
    கண் துயிலும் மாயோன் * கழலிணைகள் காண்பதற்கு **
    பண் பகரும் வண்டினங்கள் * பண் பாடும் வேங்கடத்து *
    செண்பகமாய் நிற்கும் * திரு உடையேன் ஆவேனே (4)
  • PMT 4.5
    681 கம்ப மத யானைக் * கழுத்தகத்தின்மேல் இருந்து *
    இன்பு அமரும் செல்வமும் * இவ் அரசும் யான் வேண்டேன் **
    எம்பெருமான் ஈசன் * எழில் வேங்கட மலை மேல் *
    தம்பகமாய் நிற்கும் * தவம் உடையேன் ஆவேனே (5)
  • PMT 4.6
    682 மின் அனைய நுண்ணிடையார் * உருப்பசியும் மேனகையும் *
    அன்னவர்தம் பாடலொடும் * ஆடல் அவை ஆதரியேன் **
    தென்ன என வண்டினங்கள் * பண் பாடும் வேங்கடத்துள் *
    அன்னனைய பொற்குவடாம் * அருந்தவத்தென் ஆவேனே (6)
  • PMT 4.7
    683 வான் ஆளும் மா மதி போல் * வெண் குடைக்கீழ் மன்னவர் தம் *
    கோன் ஆகி வீற்றிருந்து * கொண்டாடும் செல்வு அறியேன் **
    தேன் ஆர் பூஞ்சோலைத் * திருவேங்கட மலை மேல் *
    கானாறாய்ப் பாயும் * கருத்து உடையேன் ஆவேனே (7)
  • PMT 4.8
    684 பிறை ஏறு சடையானும் * பிரமனும் இந்திரனும் *
    முறையாய பெரு வேள்விக் * குறை முடிப்பான் மறை ஆனான் **
    வெறியார் தண் சோலைத் * திருவேங்கட மலை மேல் *
    நெறியாய்க் கிடக்கும் * நிலை உடையேன் ஆவேனே (8)
  • PMT 4.9
    685 ## செடியாய வல்வினைகள் தீர்க்கும் * திருமாலே *
    நெடியானே வேங்கடவா * நின் கோயிலின் வாசல் **
    அடியாரும் வானவரும் * அரம்பையரும் கிடந்து இயங்கும் *
    படியாய்க் கிடந்து * உன் பவளவாய் காண்பேனே (9)
  • PMT 4.10
    686 உம்பர் உலகு ஆண்டு * ஒரு குடைக்கீழ் உருப்பசி தன் *
    அம்பொன் கலை அல்குல் * பெற்றாலும் ஆதரியேன் **
    செம் பவள வாயான் * திருவேங்கடம் என்னும் *
    எம்பெருமான் பொன்மலை மேல் * ஏதேனும் ஆவேனே (10)
  • PMT 4.11
    687 ## மன்னிய தண் சாரல் * வட வேங்கடத்தான் தன் *
    பொன் இயலும் சேவடிகள் * காண்பான் புரிந்து இறைஞ்சி **
    கொல் நவிலும் கூர்வேல் * குலசேகரன் சொன்ன *
    பன்னிய நூல் தமிழ் வல்லார் * பாங்காய பத்தர்களே (11)