Chapter 3
Describing separation from worldly people after becoming Sriranganatha's devotee - (மெய் இல்)
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல்
The supreme devotee and the jewel among kings, this āzhvār, renounced worldly life, declaring that loving Lord Ranganatha is the only noble deed.
பரம பக்தரும், முடிவேந்தர் சிகாமணியுமான இவ்வாழ்வார் உலக வாழ்க்கையை வெறுத்தொதுக்கி அவ்வாழ்க்கையில் அரங்கனிடம் அன்பு கொண்டிருப்பது ஒன்றே சிறந்த செயல் என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.
Verses: 668 to 676
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Recital benefits: Getting freed from all hurdles
- PMT 3.1
668 ## மெய் இல் வாழ்க்கையை * மெய் எனக் கொள்ளும் * இவ்
வையம்தன்னொடும் * கூடுவது இல்லை யான் **
ஐயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
மையல் கொண்டொழிந்தேன் * என்தன் மாலுக்கே (1) - PMT 3.2
669 நூலின் நேர் இடையார் * திறத்தே நிற்கும் *
ஞாலம் தன்னொடும் * கூடுவது இல்லை யான் **
ஆலியா அழையா * அரங்கா என்று *
மால் எழுந்தொழிந்தேன் * என்தன் மாலுக்கே (2) - PMT 3.3
670 மாரனார் * வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும் *
பாரினாரொடும் * கூடுவது இல்லை யான் **
ஆர மார்வன் * அரங்கன் அனந்தன் * நல்
நாரணன் * நரகாந்தகன் பித்தனே (3) - PMT 3.4
671 உண்டியே உடையே * உகந்து ஓடும் * இம்
மண்டலத்தொடும் * கூடுவது இல்லை யான் **
அண்டவாணன் * அரங்கன் வன் பேய் முலை *
உண்ட வாயன்தன் * உன்மத்தன் காண்மினே (4) - PMT 3.5
672 தீதில் நன்னெறி நிற்க * அல்லாது செய் *
நீதியாரொடும் * கூடுவது இல்லை யான் **
ஆதி ஆயன் * அரங்கன் அந் தாமரைப் *
பேதை மா மணவாளன் * தன் பித்தனே (5) - PMT 3.6
673 எம் பரத்தர் * அல்லாரொடும் கூடலன் *
உம்பர் வாழ்வை * ஒன்றாகக் கருதிலன் **
தம்பிரான் அமரர்க்கு * அரங்க நகர் *
எம்பிரானுக்கு * எழுமையும் பித்தனே (6) - PMT 3.7
674 எத் திறத்திலும் * யாரொடும் கூடும் * அச்
சித்தந்தன்னைத் * தவிர்த்தனன் செங்கண் மால் **
அத்தனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
பித்தனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (7) - PMT 3.8
675 பேயரே * எனக்கு யாவரும் * யானும் ஓர்
பேயனே * எவர்க்கும் இது பேசி என் **
ஆயனே * அரங்கா என்று அழைக்கின்றேன் *
பேயனாய் ஒழிந்தேன் * எம்பிரானுக்கே (8) - PMT 3.9
676 ## அங்கை ஆழி * அரங்கன் அடியிணை *
தங்கு சிந்தைத் * தனிப் பெரும் பித்தனாய் **
கொங்கர்கோன் * குலசேகரன் சொன்ன சொல் *
இங்கு வல்லவர்க்கு * ஏதம் ஒன்று இல்லையே (9)