PMT 3.8

பேயரே எனக்கு யாவரும்

675 பேயரே எனக்குயாவரும் * யானுமோர்
பேயனேஎவர்க்கும் இதுபேசியென்? *
ஆயனேஅரங்கா என்றழைக்கின்றேன் *
பேயனாயொழிந்தேன் எம்பிரானுக்கே.
675 peyare * ĕṉakku yāvarum * yāṉum or
peyaṉe * ĕvarkkum itu peci ĕṉ **
āyaṉe * araṅkā ĕṉṟu azhaikkiṉṟeṉ *
peyaṉāy ŏzhinteṉ * ĕmpirāṉukke (8)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

675. Everyone in the world looks crazy to me. and I am also crazy. What's the use in calling like this? I call out , “O cowherd, O Ranga!” and I become crazy for you, my dear lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யாவரும் எல்லாரும்; எனக்கு என்னைப் பொருத்தவரை; பேயரே பேய் போன்றவரே; எவர்க்கும் எல்லாருக்கும்; யானும் ஓர் பேயனே நானும் ஒரு பேய்தான்!; இது பேசி என்! இப்படி பேசி என்ன பயன்; ஆயனே! அரங்கா! ஆயனே! அரங்கா!; என்று என்று; அழைக்கின்றேன் அழைத்திடுகிறேன்; எம்பிரானுக்கே எம்பிரானுக்கே; பேயனாய் பித்து பிடித்தவனாக; ஒழிந்தேன் ஆனேன்