PMT 3.1

அரங்கனிடமே மயங்குகிறேன்

668 மெய்யில்வாழ்க்கையை மெய்யெனக்கொள்ளும் * இவ்
வையந்தன்னொடும் கூடுவதில்லையான் *
ஐயனேஅரங்கா என்றழைக்கின்றேன் *
மையல்கொண்டொழிந்தேன் என்தன்மாலுக்கே. (2)
668 ## mĕy il vāzhkkaiyai * mĕy ĕṉak kŏl̤l̤um * iv
vaiyamtaṉṉŏṭum * kūṭuvatu illai yāṉ **
aiyaṉe * araṅkā ĕṉṟu azhaikkiṉṟeṉ *
maiyal kŏṇṭŏzhinteṉ * ĕṉtaṉ mālukke (1)

Ragam

Shaurāṣhṭra / சௌராஷ்ட்

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

668. I don't want to join the people of this world to whom the illusory life on earth is true. I beseech You, my father, my lord Ranga. I am in deep love with You and I suffer.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெய் இல் நிலையற்ற பொய்யான; வாழ்க்கையை உலக வாழ்க்கையை; மெய் என நிலையானது; கொள்ளும் என்று கருதுகிற; இவ்வையம் தன்னொடும் உலகத்தோடு; யான் இனி நான்; கூடுவது இல்லை சேர்வதில்லை; ஐயனே! அரங்கா! ஐயனே! அரங்கா!; என்று அழைக்கின்றேன் என்று அழைக்கின்றேன்; என் தன் என்னிடம் அன்பு கொண்டுள்ள; மாலுக்கே பெருமானிடத்தே; மையல் அன்பு பூண்டு; கொண்டொழிந்தேன் இருக்கிறேன்