Chapter 2

Women asks Kannan not to destroy their sand houses - (நாமம் ஆயிரம்)

சிற்றில் சிதையேல் எனல்
Women asks Kannan not to destroy their sand houses - (நாமம் ஆயிரம்)
"Manmatha's time of arrival is during the month of Panguni. In anticipation of his arrival, the cowherd women decorate the streets beautifully; they create rangoli designs and make small playhouses out of sand and other materials. Krishna quickly comes and tries to destroy them. The women say, 'Krishna! You come to the place where we stay. You show your face! You smile mischievously! You destroy our small houses and our hearts too! Is this fair?'"
மன்மதன் வரும் காலம் பங்குனி மாதம். அவன் வருகைக்காக ஆயர் பெண்கள் வீதிகளை அழகு மிளிரச் செய்கிறார்கள்; கோலமிடுகிறார்கள்; மணலாலும், மற்றப் பொருள்களாலும் மிகச் சிறிய விளையாட்டு வீடுகளை அமைக்கிறார்கள். கண்ணன் விரைவாக வந்து அவற்றை அழிக்க முயல்கிறான். கண்ணா! நாங்கள் இருக்குமிடத்திற்கு வருகிறாய். + Read more
Verses: 514 to 523
Grammar: Eḻuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Recital benefits: Will go to Vaikuṇṭam and remain there always
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

NAT 2.1

514 நாமமாயிர மேத்தநின்ற நாராயணா! நரனே! * உன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதை தவிருமே *
காமன்போதரு காலமென்றுபங்குனிநாள்கடை பாரித்தோம் *
தீமைசெய்யும்சிரீதரா! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே. (2)
514 ## நாமம் ஆயிரம் ஏத்த நின்ற * நாராயணா நரனே * உன்னை
மாமி தன் மகன் ஆகப் பெற்றால் * எமக்கு வாதை தவிருமே **
காமன் போதரு காலம் என்று * பங்குனி நாள் கடை பாரித்தோம் *
தீமை செய்யும் சிரீதரா ! * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (1)
514 ## nāmam āyiram etta niṉṟa * nārāyaṇā naraṉe * uṉṉai
māmi taṉ makaṉ ākap pĕṟṟāl * ĕmakku vātai tavirume **
kāmaṉ potaru kālam ĕṉṟu * paṅkuṉi nāl̤ kaṭai pārittom *
tīmai cĕyyum cirītarā ! * ĕṅkal̤ ciṟṟil vantu citaiyele (1)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

514. O Nārāyanā praised with a thousand names, You took the human form If we are able to wed You, the son of Yashodā, our distress will get destroyed. We do nombu in the month of Panguni because that is the month when Kama comes. O Sridhara, don’t bother us, don’t come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
நாமம் ஆயிரம் ஆயிரம் பெயர்களினால்; ஏத்த நின்ற துதித்திட நின்ற; நாராயணா! நாராயணனே!; நரனே! மானிட உடல் கொண்டவனே!; உன்னை உன்னை; மாமி தன் மகன் ஆக கணவனாக; பெற்றால் அடைந்தால்; எமக்கு வாதை என் அவதி; தவிருமே தவிர்ந்திடும்; காமன் போதரு மன்மதன்; காலம் என்று வரும் சமயமென்று; பங்குனி நாள் பங்குனியில்; கடை அவன் வரும் வழியை; பாரித்தோம் அலங்கரித்தோம்; தீமை செய்யும் தீம்புகளை; சிரீதரா! செய்யும் பிரானே!; எங்கள் எங்கள்; சிற்றில் வந்து சிறுவீடுகளுக்கு வந்து; சிதையேலே சிதைக்கவேண்டாம்
nārāyaṇā! o Narayana; etta niṉṟa prasie by; nāmam āyiram a thousand names; naraṉe! who took the human form; pĕṟṟāl if I attain; uṉṉai You; māmi taṉ makaṉ āka as my husband; ĕmakku vātai my sufferings; tavirume will end; paṅkuṉi nāl̤ in panguni; pārittom we decorated; kaṭai the path; kāmaṉ potaru in which Manmatha; kālam ĕṉṟu comes; cirītarā! o Lord who does; tīmai cĕyyum mischiefs; citaiyele please do not destroy; ĕṅkal̤ our; ciṟṟil vantu little sand homes

NAT 2.2

515 இன்றுமுற்றும்முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை *
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் *
அன்றுபாலகனாகி ஆலிலைமேல்துயின்றஎம்மாதியாய்! *
என்றுமுன்றனக்கெங்கள்மேல் இரக்கம்மெழாததெம்பாவமே.
515 இன்று முற்றும் முதுகு நோவ * இருந்து இழைத்த இச்சிற்றிலை *
நன்றும் கண் உற நோக்கி * நாம் கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் **
அன்று பாலகன் ஆகி * ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய் ! *
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் * இரக்கம் எழாதது எம் பாவமே (2)
515 iṉṟu muṟṟum mutuku nova * iruntu izhaitta icciṟṟilai *
naṉṟum kaṇ uṟa nokki * nām kŏl̤um ārvantaṉṉait taṇikiṭāy **
aṉṟu pālakaṉ āki * ālilai mel tuyiṉṟa ĕm ātiyāy ! *
ĕṉṟum uṉ taṉakku ĕṅkal̤ mel * irakkam ĕzhātatu ĕm pāvame (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

515. We worked all day to build these sand houses and our backs hurt. Look at our sand houses. They make us happy. O ancient one who slept on a banyan leaf as a baby, it is a pity that you are not kind to us. Do not come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
இன்று இன்றைய தினம்; முற்றும் முழுவதும்; முதுகு நோவ முதுகு நோகும்படி; இருந்து இருந்து; இழைத்த உருவாக்கிய; இச் சிற்றிலை இந்தச் சிறு வீட்டை; நன்றும் கண் நன்றாக; உற நோக்கி ஆர்வத்துடன் பார்த்து; நாம் கொளும் நாங்கள் கொண்டுள்ள; ஆர்வம் தன்னை ஆசையை; தணிகிடாய் தணித்திடுவாய்; அன்று ஒரு காலத்தில்; பாலகன் ஆகி சிறு குழந்தையாய்; ஆலிலை மேல் ஆலிலை மேல்; துயின்ற துயின்ற; எம் ஆதியாய்! எங்கள் ஆதியானவனே!; என்றும் உன் தனக்கு எந்நாளும் உமக்கு; எங்கள் மேல் இரக்கம் எங்கள் மீது தயவு; எழாதது ஏற்படாமலிருப்பது; எம் பாவமே எங்கள் பாவத்தாலே!
muṟṟum throughout; iṉṟu today; mutuku nova to the point our back ached; iruntu we worked; iḻaitta and created; ic ciṟṟilai this small house; naṉṟum kaṇ have a good; uṟa nokki look at it with interest; taṇikiṭāy and please fulfill; nām kŏl̤um our; ārvam taṉṉai desire; tuyiṉṟa You slept; aṉṟu once; pālakaṉ āki as a little child; ālilai mel on a banyan leaf; ĕm ātiyāy! o our primordial Lord!; ĕṉṟum uṉ taṉakku always, your; ĕṅkal̤ mel irakkam mercy on us; ĕḻātatu is not arising; ĕm pāvame because of our sins!

NAT 2.3

516 குண்டுநீருறைகோளரீ! மதயானைகோள்விடுத்தாய்! * உன்னைக்
கண்டுமாலுறுவோங்களைக் கடைக்கண்களாலிட்டுவாதியேல் *
வண்டல்நுண்மணல்தெள்ளி யாம்வளைக்கைகளால்சிரமப்பட்டோம் *
தெண்டிரைக்கடற்பள்ளியாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.
516 குண்டு நீர் உறை கோளரீ ! * மத யானை கோள் விடுத்தாய்! * உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக் * கடைக் கண்களால் இட்டு வாதியேல் **
வண்டல் நுண் மணல் தெள்ளி * யாம் வளைக் கைகளால் சிரமப் பட்டோம் *
தெண் திரைக்கடல் பள்ளியாய் * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (3)
516 kuṇṭu nīr uṟai kol̤arī ! * mata yāṉai kol̤ viṭuttāy! * uṉṉaik
kaṇṭu māl uṟuvoṅkal̤aik * kaṭaik kaṇkal̤āl iṭṭu vātiyel **
vaṇṭal nuṇ maṇal tĕl̤l̤i * yām val̤aik kaikal̤āl ciramap paṭṭom *
tĕṇ tiraikkaṭal pal̤l̤iyāy * ĕṅkal̤ ciṟṟil vantu citaiyele (3)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

516. You who sleep on the deep milky ocean took the form of a lion to destroy Hiranyan and saved Gajendra from the mouth of the crocodile. When we saw you and fell in love with you, you looked at us out of the corner of your eye and didn’t worry about what we might think. We worked hard to make our houses with soft sand and our bangled hands hurt. O lord, you rest on the ocean where clear waves roll. Do not come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
குண்டு நீர் மிக்க ஆழத்தையுடைய கடலிலே; உறை கோளரி! உறையும் சிங்கமே!; மத யானை கஜேந்திரனின்; கோள் விடுத்தாய்! துயர் தீர்த்தாய்; உன்னைக் கண்டு உன்னைப் பார்த்து; மால் உறுவோங்களைக் மையல் படும் எங்களை; கடைக்கண்களால் இட்டு கடைக் கண்களால் நோக்கி; வாதியேல் கஷ்டப்படுத்தாதே; வண்டல் வண்டலிலுள்ள; நுண்மணல் நுண்ணிய மணலை; வளை வளை; கைகளால் அணிந்த கைகளினால்; யாம் நாங்கள்; தெள்ளி சுத்தம் செய்து; சிரமப் பட்டோம் சிரமப் பட்டோம்; தெண் தெளிந்த; திரை அலைகளையுடைய; கடல் கடலில்; பள்ளியாய்! சயனிப்பவனே!; எங்கள் எங்கள்; சிற்றில் வந்து சிறுவீடுகளை; சிதையேலே சிதைத்திடாதே!
uṟai kol̤ari! o Lion who resides; kuṇṭu nīr mikka in the deep ocean; kol̤ viṭuttāy! You relieved the sorrow; mata yāṉai of Gajendra; uṉṉaik kaṇṭu looking at You; māl uṟuvoṅkal̤aik we are dazed in devotion; vātiyel do not cause us suffering; kaṭaikkaṇkal̤āl iṭṭu by looking out of the corner of Your eye; ciramap paṭṭom took great efforts to; kaikal̤āl with our hands; val̤ai with bangles; yām we; tĕl̤l̤i purify the; nuṇmaṇal fine sand; vaṇṭal from the sediment; pal̤l̤iyāy! One who rests on; tĕṇ the clear; tirai wave-filled; kaṭal ocean; citaiyele do not destroy; ĕṅkal̤ our; ciṟṟil vantu small homes

NAT 2.4

517 பெய்யுமாமுகில்போல்வண்ணா! உன்றன்பேச்சும்செய்கையும் * எங்களை
மையலேற்றிமயக்க உன்முகம் மாயமந்திரந்தான்கொலோ? *
நொய்யர்பிள்ளைகளென்பதற்கு உன்னை நோவநாங்களுரைக்கிலோம் *
செய்யதாமரைக் கண்ணினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.
517 பெய்யு மா முகில்போல் வண்ணா * உன்தன் பேச்சும் செய்கையும் * எங்களை
மையல் ஏற்றி மயக்க * உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ? **
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு * உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம் *
செய்ய தாமரைக் கண்ணினாய் * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (4)
517 pĕyyu mā mukilpol vaṇṇā * uṉtaṉ peccum cĕykaiyum * ĕṅkal̤ai
maiyal eṟṟi mayakka * uṉ mukam māya mantiram tāṉ kŏlo? **
nŏyyar pil̤l̤aikal̤ ĕṉpataṟku * uṉṉai nova nāṅkal̤ uraikkilom *
cĕyya tāmaraik kaṇṇiṉāy * ĕṅkal̤ ciṟṟil vantu citaiyele (4)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

517. O lord, you have the color of the rain-giving clouds and your speech and deeds fascinate us. What spell does your beautiful face cast to bewitch us? We won’t complain to others that you trouble us innocent, weak girls. We don’t want them to blame you O! the One with lovely lotus eyes. Don’t come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பெய்யு மா மழை பொழியும்; முகில் போல் காளமேகம் போன்ற; வண்ணா! நிறத்தனே!; உன்தன் உன்னுடைய; பேச்சும் பேச்சும்; செய்கையும் செய்கையும்; எங்களை மையல் எங்களை; ஏற்றி மயக்க மயங்குவதற்கு; உன் முகம் உன் முகம்; மாய மந்திரம் தான் மாயாஜாலம்தான்; கொலோ காரணமோ?; நொய்யர் அற்பமான; பிள்ளைகள் சிறுமியர்கள்; என்பதற்கு என்று கூற்றுக்குப் பயந்து; உன்னை உன்னை; நோவ நோகச் செய்ய; நாங்கள் நாங்கள் ஏதும்; உரைக்கிலோம் கூறவில்லை; செய்ய சிவந்த; தாமரை தாமரை போன்ற; கண்ணினாய்! கண்களையுடையவனே!; எங்கள் எங்கள்; சிற்றில் வந்து சிறுவீடுகளை; சிதையேலே! சிதைத்திடாதே!
vaṇṇā! the One with the hue; mukil pol of a dark cloud; pĕyyu mā that is ready to pour rain; uṉtaṉ Your; peccum speech; cĕykaiyum and actions; ĕṅkal̤ai maiyal make us; eṟṟi mayakka lose ourselves; uṉ mukam Your face; māya mantiram tāṉ is magical; kŏlo is that the reason?; ĕṉpataṟku fearing people calling us; nŏyyar lowly; pil̤l̤aikal̤ young girls; nāṅkal̤ we didnt; uraikkilom say anything; nova that would hurt; uṉṉai You; kaṇṇiṉāy! the One with eyes; cĕyya of red; tāmarai lotus; citaiyele! do not destroy; ĕṅkal̤ our; ciṟṟil vantu small homes

NAT 2.5

518 வெள்ளைநுண்மணல்கொண்டு சிற்றில்விசித்திரப்பட * வீதிவாய்த்
தெள்ளிநாங்களிழைத்தகோலம் அழித்தியாகிலும் உன்தன்மேல் *
உள்ளமோடியுருகலல்லால் உரோடமொன்றுமிலோங்கண்டாய் *
கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தனகண்களல்லவே.
518 வெள்ளை நுண் மணல் கொண்டு * சிற்றில் விசித்திரப் பட * வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் * அழித்தியாகிலும் உன் தன் மேல் **
உள்ளம் ஓடி உருகலல்லால் * உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய் *
கள்ள மாதவா! கேசவா ! * உன் முகத்தன கண்கள் அல்லவே (5)
518 vĕl̤l̤ai nuṇ maṇal kŏṇṭu * ciṟṟil vicittirap paṭa * vīti vāyt
tĕl̤l̤i nāṅkal̤ izhaitta kolam * azhittiyākilum uṉ taṉ mel **
ul̤l̤am oṭi urukalallāl * uroṭam ŏṉṟum ilom kaṇṭāy *
kal̤l̤a mātavā! kecavā ! * uṉ mukattaṉa kaṇkal̤ allave (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

518. We made our sand houses with soft white sand and to the amazement of everyone, we drew kolams but you came and destroyed them. Even so we aren’t angry at you. Our hearts melt for your love. You are a thief, Madhavan, Kesavan. Don't you have eyes on your face? Don’t come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கள்ள கள்ளத்தனமுள்ள; மாதவா! மாதவனே!; கேசவா! கேசவனே!; வெள்ளை வெளுத்து; நுண் மணல் சிறுத்த மணலால்; வீதிவாய் தெருவிலே; தெள்ளி தெளிந்து அனைவரும்; விசித்திரப் பட வியந்திடும்படி; நாங்கள் இழைத்த நாங்கள் போட்ட; சிற்றில் கோலம் சிறிய கோலத்தை; அழித்தியாகிலும் நீ அழித்தாலும் கூட; உன்தன் மேல் உன் மேல்; உள்ளம் ஓடி உள்ளம்; உருகலல்லால் உருகுமே தவிர; உரோடம் ஒன்றும் கோபம் துளியும்; இலோம் கண்டாய் இல்லை; உன் முகத்தன உன் முகத்திலுள்ள; கண்கள் கண்கள் வெறும் கண்களல்ல; அல்லவே! இரக்கம் பொருந்தியவை!
kal̤l̤a mischief-filled; mātavā! Madhava!; kecavā! Keshava!; vĕl̤l̤ai with white; nuṇ maṇal fine sand; tĕl̤l̤i to make everyone; vicittirap paṭa be amazed; vītivāy in the street; nāṅkal̤ iḻaitta we drew; ciṟṟil kolam small kollam; aḻittiyākilum even if you erase it; ilom kaṇṭāy we will not have; uroṭam ŏṉṟum any anger; ul̤l̤am oṭi and our hearts; urukalallāl only melt; uṉtaṉ mel for You; uṉ mukattaṉa in Your face; kaṇkal̤ the eyes are not mere eyes; allave! they are filled with compassion

NAT 2.6

519 முற்றிலாதபிள்ளைகளோம் முலைபோந்திலாதோமை * நாள்தொறும்
சிற்றில்மேலிட்டுக்கொண்டு நீசிறிதுண்டுதிண்ணென நாமது
கற்றிலோம் * கடலையடைத்தரக்கர்குலங்களை முற்றவும் *
செற்று இலங்கையைப்பூசலாக்கியசேவகா! எம்மைவாதியேல்.
519 முற்று இலாத பிள்ளைகளோம் * முலை போந்திலாதோமை * நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு * நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் ** கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும் *
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய சேவகா! * எம்மை வாதியேல் (6)
519 muṟṟu ilāta pil̤l̤aikal̤om * mulai pontilātomai * nāl̤tŏṟum
ciṟṟil mel iṭṭuk kŏṇṭu * nī ciṟitu uṇṭu tiṇṇĕṉa nām atu
kaṟṟilom ** kaṭalai aṭaittu arakkar kulaṅkal̤ai muṟṟavum *
cĕṟṟu ilaṅkaiyaip pūcal ākkiya cevakā! * ĕmmai vātiyel (6)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

519. We are children, not grown-up yet, still immature in growth. You come here to knock over our little sand houses but really wanting to do something else. We don’t understand what you want. You built a bridge on the ocean, went to Lankā, and fought and destroyed the Rakshasā clan Don’t give us trouble, don’t come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கடலை கடலில்; அடைத்து அணைகட்டி; அரக்கர் அரக்கர்களுடைய; குலங்களை குலங்களை; முற்றவும் முழுதுமாக; செற்று அழித்து; இலங்கையைப் இலங்கையை; பூசல் ஆக்கிய போர்க்களமாக்கிய; சேவகா! வீரனே!; முற்று இலாத இளம்; பிள்ளைகளோம் சிறுமிகளான; முலை மார்பே; போந்திலாதோமை வெளிவராத எங்களை; நாள்தொறும் நாள்தோறும்; சிற்றில் மேல் சிற்றில் விஷயமாக; இட்டு ஒரு சாக்கை; கொண்டு வைத்துக்கொண்டு; நீ சிறிது நீ செய்பவை; உண்டு சில இருக்கும்; நாம் அது நாங்கள் அவற்றை; திண் என முழுதுமாக; கற்றிலோம் கற்கவில்லை; எம்மை எங்களை நீ; வாதியேல் துன்புறுத்தாதே
cevakā! o brave One!; aṭaittu You built a bridge; kaṭalai in the sea; muṟṟavum and completely; cĕṟṟu destroyed; kulaṅkal̤ai clans of; arakkar the demons; ilaṅkaiyaip who turned Sri Lanka; pūcal ākkiya into a battle field; muṟṟu ilāta we are young; pil̤l̤aikal̤om girls; pontilātomai who are yet to; mulai come of age; nāl̤tŏṟum every day; ciṟṟil mel as a minor matter; kŏṇṭu You have; iṭṭu one excuse; nī ciṟitu and do; uṇṭu some things; nām atu which we; kaṟṟilom do not understand; tiṇ ĕṉa completely; vātiyel please do not; ĕmmai toment us

NAT 2.7

520 பேதம்நன்கறிவார்களோடு இவைபேசினால்பெரிதிஞ்சுவை *
யாதுமொன்றறியாதபிள்ளைகளோமை நீநலிந்தென்பயன்? *
ஓதமாகடல்வண்ணா! உன்மணவாட்டிமாரொடுசூழறும் *
சேதுபந்தம்திருத்தினாய்! எங்கள்சிற்றில்வந்துசிதையேலே.
520 பேதம் நன்கு அறிவார்களோடு * இவை பேசினால் பெரிது இன் சுவை *
யாதும் ஒன்று அறியாத பிள்ளைக ளோமை * நீ நலிந்து என் பயன்? **
ஓத மா கடல்வண்ணா! * உன் மண வாட்டிமாரொடு சூழறும் *
சேது பந்தம் திருத்தினாய்! * எங்கள் சிற்றில் வந்து சிதையேலே (7) **
520 petam naṉku aṟivārkal̤oṭu * ivai peciṉāl pĕritu iṉ cuvai *
yātum ŏṉṟu aṟiyāta pil̤l̤aika l̤omai * nī nalintu ĕṉ payaṉ? **
ota mā kaṭalvaṇṇā! * uṉ maṇa vāṭṭimārŏṭu cūzhaṟum *
cetu-pantam tiruttiṉāy! * ĕṅkal̤ ciṟṟil vantu citaiyele (7) **

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

520. If you talk to people who understand what you say, that will be all right, but if you talk to us who are young and don’t know anything, it just hurts us. What do you gain from that? O! the One having the color of the wide sounding ocean the One who built the bridge Sethu! Don’t come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
பேதம் உன் பேச்சின் பேதத்தை; நன்கு நன்றாக; அறிவார்களோடு அறிய வல்லவரோடு; இவை இப்பேச்சுகளை; பேசினால் பேசினால்; பெரிது மிகவும்; இன் சுவை இனிமையாக இருக்கும்; யாதும் ஓன்று அறியாத ஏதும் அறியாத; பிள்ளைகளோமை சிறிய பெண்களான எங்களை; நீ நலிந்து நீ நலிந்திடச் செய்வதால்; என் பயன்? என்ன பயன்?; ஓத மா ஓசைப் படுத்தும் பெரிய; கடல் கடலை ஒத்த; வண்ணா! நிறமுடையபிரானே!; சேது பந்தம் கடலில் அணை; திருத்தினாய்! கட்டினவனே!; உன் உன்; மணவாட்டிமாரொடு மனைவியர் மீது; சூழறும் ஆணை; எங்கள் சிற்றில் எங்களின் சிறுவீடுகளை; வந்து சிதையேலே சிதைத்திடாதே!
peciṉāl if You converse; ivai these words; aṟivārkal̤oṭu with someone who understands; naṉku well; petam the contradiction in your words; pĕritu it would be very; iṉ cuvai good; pil̤l̤aikal̤omai we are young girls; yātum oṉṟu aṟiyāta who know nothing; nī nalintu if you make us suffer; ĕṉ payaṉ? what is the use?; vaṇṇā! o Lord of deep hue!; kaṭal like the sea; ota mā that roars; tiruttiṉāy! the One who built; cetu pantam a bridge in the sea!; cūḻaṟum we command; uṉ upon Your; maṇavāṭṭimārŏṭu wives; vantu citaiyele please do not destroy; ĕṅkal̤ ciṟṟil our small houses

NAT 2.8

521 வட்டவாய்ச்சிறு தூதையோடு சிறுசுளகும்மண லுங்கொண்டு *
இட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்? *
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரம்கையிலேந்தினாய்! *
கட்டியும்கைத்தால் இன்னாமையறிதியேகடல்வண்ணனே.
521 வட்ட வாய்ச் சிறுதூதையோடு * சிறுசுளகும் மணலும் கொண்டு *
இட்டமா விளையாடுவோங்களைச் * சிற்றில் ஈடழித்து என் பயன்? **
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் * சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய் ! *
கட்டியும் கைத்தால் இன்னாமை * அறிதியே கடல்வண்ணனே! (8)
521 vaṭṭa vāyc ciṟutūtaiyoṭu * ciṟucul̤akum maṇalum kŏṇṭu *
iṭṭamā vil̤aiyāṭuvoṅkal̤aic * ciṟṟil īṭazhittu ĕṉ payaṉ? **
tŏṭṭu utaittu naliyel kaṇṭāy * cuṭarc cakkaram kaiyil entiṉāy ! *
kaṭṭiyum kaittāl iṉṉāmai * aṟitiye kaṭalvaṇṇaṉe! (8)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

521. We brought a pot, a winnowing fan and sand, built sand houses and are playing as we like. What is the use of destroying our sand houses? What do you get if you come and kick them down and give us trouble? Ocean-colored wone with a shining discus(chakra) in your hand, Even jaggery will not be sweet if your mind is bitter! Don't you know this? Don’t come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
சுடர் ஒளியுடைய; சக்கரம் சக்கரத்தை; கையில் கையில்; ஏந்தினாய்! உடையவனே!; கடல் வண்ணனே! கடல் நிறத்தனே!; வட்ட வாய் வட்டமான வாயையுடைய; சிறு தூதையோடு சிறிய பானையோடு; சிறுசுளகும் சிறிய முறமும்; மணலும் கொண்டு மணலும் கொண்டு; இட்டமா இஷ்டப்படி; விளையாடும் விளையாடுகிற; எங்களை எங்களுடைய; சிற்றில் சிறு வீட்டை; ஈடழித்து அழிப்பதனால்; என் பயன்? என்ன பயன்?; தொட்டு தொட்டும்; உதைத்து காலால் உதைத்தும்; நலியேல் கண்டாய் துன்ப படுத்துகிறாயே; கைத்தால் நெஞ்சு கசந்து போனால்; கட்டியும் கரும்புக் கட்டியும்; இன்னாமை இனிக்காது என்பதை; அறிதியே? அறிவாயன்றோ?
entiṉāy! o Bearer of; cakkaram the discuss; cuṭar that possess radiance; kaiyil in the hand; kaṭal vaṇṇaṉe! the One with the color of the sea!; vil̤aiyāṭum we play; iṭṭamā as we please with; ciṟu tūtaiyoṭu a small pot; vaṭṭa vāy with a round mouth,; ciṟucul̤akum a small scoop,; maṇalum kŏṇṭu and sand; ĕṉ payaṉ? what is the use?; īṭaḻittu of destroying; ĕṅkal̤ai our; ciṟṟil small sand homes; tŏṭṭu by touching; utaittu and by kicking with Your feet; naliyel kaṇṭāy You cause suffering; kaittāl when the heart hurts; kaṭṭiyum even jaggery; iṉṉāmai will not taste sweet; aṟitiye? don’t you know that?

NAT 2.9

522 முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து *
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா *
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய் * எம்மைப்
பற்றிமெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப்பக்கம்நின்றவரெஞ்சொல்லார்?
522 முற்றத்து ஊடு புகுந்து * நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து *
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் * சிதைக்கக் கடவையோ? கோவிந்தா **
முற்ற மண்ணிடம் தாவி * விண் உற நீண்டு அளந்து கொண்டாய் * எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால் * இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்? (9)
522 muṟṟattu ūṭu pukuntu * niṉ mukam kāṭṭip puṉmuṟuval cĕytu *
ciṟṟiloṭu ĕṅkal̤ cintaiyum * citaikkak kaṭavaiyo? kovintā **
muṟṟa maṇṇiṭam tāvi * viṇ uṟa nīṇṭu al̤antu kŏṇṭāy * ĕmmaip
paṟṟi mĕyppiṇakku iṭṭakkāl * intap pakkam niṉṟavar ĕṉ cŏllār? (9)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

522. O Govinda, you enter our yard with a smile and destroy not only our little sand houses, but our hearts as well. You measured the earth, grew tall and measured the sky. What will those standing near us say if you come and embrace us? Do not come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கோவிந்தா! கண்ணபிரானே!; முற்ற பூ மண்டலம்; மண்ணிடம் முழுவதையும்; தாவி தாவி அளந்து; விண் உற பரமபதத்தளவு; நீண்டு ஓங்கி வளர்ந்து; அளந்து அளந்து; கொண்டாய்! கொண்டவனே!; ஊடு விளையாடுகிற; முற்றத்து முற்றத்திலே; புகுந்து நுழைந்து; நின் முகம் உனது முகத்தை; காட்டி காண்பித்து; புன்முறுவல் புன்முறுவல்; செய்து பூத்து; எங்கள் எங்கள்; சிற்றிலோடு சிற்றிலையும்; சிந்தையும் சிதைக்க நெஞ்சையும்; கடவையோ அழிக்கலாமோ?; எம்மைப் பற்றி எங்களைப்பிடித்து; மெய்ப்பிணக்கு அணைத்து; இட்டக்கால் கொண்டால்; இந்தப் பக்கம் இங்கு நின்று; நின்றவர் பார்ப்பவர்கள்; என் என்னதான்; சொல்லார் சொல்ல மாட்டார்கள்
kovintā! o Lord Kannan!; tāvi You leapt and measured; muṟṟa this earth; maṇṇiṭam entirely; kŏṇṭāy! You; nīṇṭu grew tall; viṇ uṟa upto the Sri Vankutam; al̤antu and measured; pukuntu You entered; muṟṟattu the courtyard where; ūṭu we play; kāṭṭi and reveal; niṉ mukam Your divine face; cĕytu with; puṉmuṟuval a gentle smile; kaṭavaiyo would you destroy; ĕṅkal̤ our; ciṟṟiloṭu small houses; cintaiyum citaikka and our hearts; ĕmmaip paṟṟi if You catch us; mĕyppiṇakku and embrance; iṭṭakkāl us; niṉṟavar those who see; intap pakkam while standing here; ĕṉ what; cŏllār would they say

NAT 2.10

523 சீதைவாயமு தமுண்டாய்.எங்கள் சிற்றில்நீசிதை யேல். என்று *
வீதிவாய்விளை யாடுமாயர் சிறுமியர்மழ லைச்சொல்லை *
வேதவாய்த்தொழி லார்கள்வாழ்வில்லி புத்தூர்மன்விட்டு சித்தன்றன் *
கோதைவாய்த்தமிழ் வல்லவர்குறை வின்றிவைகுந்தம் சேர்வரே. (2)
523 ## சீதை வாயமுதம் உண்டாய் * எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று *
வீதிவாய் விளையாடும் * ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை **
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் * வில்லி புத்தூர் மன் விட்டு சித்தன் தன் *
கோதை வாய்த் தமிழ் வல்லவர் * குறைவு இன்றி வைகுந்தம் சேர்வரே (10)
523 ## cītai vāyamutam uṇṭāy * ĕṅkal̤ ciṟṟil nī citaiyel ĕṉṟu *
vītivāy vil̤aiyāṭum * āyar ciṟumiyar mazhalaic cŏllai **
veta vāyt tŏzhilārkal̤ vāzh * villi puttūr maṉ viṭṭu cittaṉ taṉ *
kotai vāyt tamizh vallavar * kuṟaivu iṉṟi vaikuntam cervare (10)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

523. The cowherd girls playing and making little sand houses said to Kannan. O! “You who drank the nectar from Sita's mouth! (as Rāma) do not destroy our little sand houses. ” Vishnuchithan Kodai, the chief of Villiputhur where Vediyars recite the Vedās composed pāsurams about their plea. Those who learn these pāsurams well, will reach Vaikuntam ( the divine abode of God).

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
சீதை சீதையின்; வாயமுதம் வாய் அமிர்தத்தை; உண்டாய்! பருகினவனே!; எங்கள் சிற்றில் எங்கள் எங்களது சிறு வீடுகளை; நீ சிதையேல்! என்று நீ அழிக்காதே என்று; வீதி வாய் வீதியில்; விளையாடும் விளையாடும்; ஆயர் சிறுமியர் ஆயர் சிறுமியரின்; மழலைச் சொல்லை மழலைச் சொல்லை; வேத வாய் வேத; தொழிலார்கள் விற்பன்னர்கள்; வாழ் வாழும்; வில்லிபுத்தூர் ஸ்ரீவில்லிபுத்தூர்; மன் தலைவரான; விட்டுசித்தன் தன் பெரியாழ்வாரின்; கோதை மகள் ஆண்டாள்; வாய் அருளிய; தமிழ் தமிழ்ப் பாசுரங்களை; வல்லவர் அனுசந்திப்பவர்கள்; குறைவு இன்றி குறையின்றி; வைகுந்தம் வைகுந்தம்; சேர்வரே அடைவர்
kotai Andal, the daughter of; viṭṭucittaṉ taṉ Periazhwar; maṉ the chieftan; villiputtūr of Sri Villiputhur; tŏḻilārkal̤ where masters of; veta vāy vedas; vāḻ reside; vāy composed; tamiḻ these tamil hymns; maḻalaic cŏllai describing the innocent words; āyar ciṟumiyar the cowherd girls; vil̤aiyāṭum playing on; vīti vāy the streets; nī citaiyel! ĕṉṟu and pleading the Lord; uṇṭāy! who (as Rama) drank!; vāyamutam the mouth nectar of; cītai Sita; ĕṅkal̤ ciṟṟil ĕṅkal̤ not to destroy their small houses; vallavar those who recite these hymns; cervare will attain; vaikuntam Sri Vaikunta; kuṟaivu iṉṟi without fail