NAT 2.5

எங்கள் உள்ளம் உன்னை நோக்கியே ஓடுகிறது

518 வெள்ளைநுண்மணல்கொண்டு சிற்றில்விசித்திரப்பட * வீதிவாய்த்
தெள்ளிநாங்களிழைத்தகோலம் அழித்தியாகிலும் உன்தன்மேல் *
உள்ளமோடியுருகலல்லால் உரோடமொன்றுமிலோங்கண்டாய் *
கள்ளமாதவா! கேசவா! உன்முகத்தனகண்களல்லவே.
518 vĕl̤l̤ai nuṇ maṇal kŏṇṭu * ciṟṟil vicittirap paṭa * vīti vāyt
tĕl̤l̤i nāṅkal̤ izhaitta kolam * azhittiyākilum uṉ taṉ mel **
ul̤l̤am oṭi urukalallāl * uroṭam ŏṉṟum ilom kaṇṭāy *
kal̤l̤a mātavā! kecavā ! * uṉ mukattaṉa kaṇkal̤ allave (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

518. We made our sand houses with soft white sand and to the amazement of everyone, we drew kolams but you came and destroyed them. Even so we aren’t angry at you. Our hearts melt for your love. You are a thief, Madhavan, Kesavan. Don't you have eyes on your face? Don’t come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள்ள கள்ளத்தனமுள்ள; மாதவா! மாதவனே!; கேசவா! கேசவனே!; வெள்ளை வெளுத்து; நுண் மணல் சிறுத்த மணலால்; வீதிவாய் தெருவிலே; தெள்ளி தெளிந்து அனைவரும்; விசித்திரப் பட வியந்திடும்படி; நாங்கள் இழைத்த நாங்கள் போட்ட; சிற்றில் கோலம் சிறிய கோலத்தை; அழித்தியாகிலும் நீ அழித்தாலும் கூட; உன்தன் மேல் உன் மேல்; உள்ளம் ஓடி உள்ளம்; உருகலல்லால் உருகுமே தவிர; உரோடம் ஒன்றும் கோபம் துளியும்; இலோம் கண்டாய் இல்லை; உன் முகத்தன உன் முகத்திலுள்ள; கண்கள் கண்கள் வெறும் கண்களல்ல; அல்லவே! இரக்கம் பொருந்தியவை!

Detailed WBW explanation

O Mādhava, whose activities are enshrouded in divine mystery! O Keśava! We have constructed these delicate and splendid abodes of fine, white sand along the street, crafted so exquisitely that all who behold them stand in awe. Should you choose to undo them, it is only our hearts that would shatter and dissolve in devotion, yet not even the slightest trace of anger shall arise towards You. Do not the eyes on Your sacred visage witness this truth? Behold with those divine eyes.