NAT 2.2

எங்கள்மீது ஏன் இரக்கம் உண்டாகவில்லை?

515 இன்றுமுற்றும்முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை *
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய் *
அன்றுபாலகனாகி ஆலிலைமேல்துயின்றஎம்மாதியாய்! *
என்றுமுன்றனக்கெங்கள்மேல் இரக்கம்மெழாததெம்பாவமே.
515 iṉṟu muṟṟum mutuku nova * iruntu izhaitta icciṟṟilai *
naṉṟum kaṇ uṟa nokki * nām kŏl̤um ārvantaṉṉait taṇikiṭāy **
aṉṟu pālakaṉ āki * ālilai mel tuyiṉṟa ĕm ātiyāy ! *
ĕṉṟum uṉ taṉakku ĕṅkal̤ mel * irakkam ĕzhātatu ĕm pāvame (2)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

515. We worked all day to build these sand houses and our backs hurt. Look at our sand houses. They make us happy. O ancient one who slept on a banyan leaf as a baby, it is a pity that you are not kind to us. Do not come and destroy our little sand houses.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
இன்று இன்றைய தினம்; முற்றும் முழுவதும்; முதுகு நோவ முதுகு நோகும்படி; இருந்து இருந்து; இழைத்த உருவாக்கிய; இச் சிற்றிலை இந்தச் சிறு வீட்டை; நன்றும் கண் நன்றாக; உற நோக்கி ஆர்வத்துடன் பார்த்து; நாம் கொளும் நாங்கள் கொண்டுள்ள; ஆர்வம் தன்னை ஆசையை; தணிகிடாய் தணித்திடுவாய்; அன்று ஒரு காலத்தில்; பாலகன் ஆகி சிறு குழந்தையாய்; ஆலிலை மேல் ஆலிலை மேல்; துயின்ற துயின்ற; எம் ஆதியாய்! எங்கள் ஆதியானவனே!; என்றும் உன் தனக்கு எந்நாளும் உமக்கு; எங்கள் மேல் இரக்கம் எங்கள் மீது தயவு; எழாதது ஏற்படாமலிருப்பது; எம் பாவமே எங்கள் பாவத்தாலே!
muṟṟum throughout; iṉṟu today; mutuku nova to the point our back ached; iruntu we worked; iḻaitta and created; ic ciṟṟilai this small house; naṉṟum kaṇ have a good; uṟa nokki look at it with interest; taṇikiṭāy and please fulfill; nām kŏl̤um our; ārvam taṉṉai desire; tuyiṉṟa You slept; aṉṟu once; pālakaṉ āki as a little child; ālilai mel on a banyan leaf; ĕm ātiyāy! o our primordial Lord!; ĕṉṟum uṉ taṉakku always, your; ĕṅkal̤ mel irakkam mercy on us; ĕḻātatu is not arising; ĕm pāvame because of our sins!

Detailed WBW explanation

Oh Supreme One, who reposed gracefully as an infant upon the delicate banyan leaf during the great deluge, and who stands as the causative factor of our very existence! We humbly beseech You to fulfill our earnest desire to cherish the modest abode we have constructed. We have labored tirelessly, to the point of physical exhaustion, to establish this dwelling, and we seek

+ Read more