உம்மைப் போல் நாங்கள் வேறே ஒன்றை அறியாமல் இருக்க விரோதிகளைப் போக்கி அநுக்ரஹிப்பானோ தங்கள் நிகர்ஷம் சொல்லிக் கொள்வதே அதிகாரம் – தம்முடைய வை லக்ஷண்ய அனுசந்தானத்தாலும் மகிழ்ந்து ஆப்த வாக்கியமாக அவனது ஸுலப்ய குணம் அநுஸந்தித்து உங்களையும் அநுக்ரஹிப்பான் அவனை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் -என்கிறார் –
தம்மை அவர்கள் ஆப்தராக நினைத்து இருக்கிறபடியால் தாம் சொல்லிற்று கேட்பார்கள் -என்று