PT 7.9.1

யாவரும் அருள்மாகடல் நாயகனைத் தொழுமின்

1628 கள்ளம்மனம்விள்ளும்வகை கருதிக்கழல்தொழுவீர் *
வெள்ளம்முதுபரவைத் திரைவிரிய * கரையெங்கும்
தெள்ளும்மணிதிகழும் சிறுபுலியூர்ச்சலசயனத்
துள்ளும் * எனதுள்ளத்துள்ளும் உறைவாரையுள்ளீரே. (2)
1628 ## kal̤l̤am maṉam vil̤l̤um vakai * karutik kazhal tŏzhuvīr *
vĕl̤l̤am mutu paravait * tirai viriya ** karai ĕṅkum
tĕl̤l̤um maṇi tikazhum * ciṟupuliyūrc calacayaṉattu
ul̤l̤um * ĕṉatu ul̤l̤attul̤l̤um * uṟaivārai ul̤l̤īre-1

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1628. O devotees! Think of removing evil thoughts from your mind and worship the ankleted feet of the lord who stays in your heart and in the temple Salasayanam in Chirupuliyur where the clear waves of the ocean bring shining jewels and spread them on the beaches. Think of him.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கள்ளம் இறைவனின் ஆத்மாவை; மனம் தனது என்று நினைக்கும்; விள்ளும் வகை கருதி எண்ணத்தை நீக்கி; கழல் எம்பெருமானின் திருவடிகளைத்; தொழுவீர்! தொழுபவர்களே; வெள்ளம் முது பரவை அலை கடலின் பிரவாகம்; திரை விரிய கரைகளில்; கரை எங்கும் எங்கும் பரவ; தெள்ளும் அவ்வலைகளினால்; மணி திகழும் தள்ளப்படும் மணிகள்; சிறுபுலியூர் சிறுபுலியூரில்; சலசயனத்து உள்ளும் ஜல சயனத்துள்ளும்; எனது உள்ளத்துள்ளும் எனது உள்ளத்துள்ளும்; உறைவாரை இருக்கும் பெருமானை; உள்ளீரே சிந்தனை செய்யுங்கள்