PT 7.9.8

புலியூர்ச் சலசயனத்தானே! அருள் செய்

1635 மையார்வரிநீலம் மலர்க்கண்ணார்மனம்விட்டிட்டு *
உய்வானுனகழலே தொழுதுஎழுவேன் * கிளிமடவார்
செவ்வாய்மொழிபயிலும் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
ஐவாயரவணைமேல் உறையமலா! அருளாயே.
1635 mai ār vari nīlam * malark kaṇṇār maṉam viṭṭiṭṭu *
uyvāṉ uṉa kazhale * tŏzhutu ĕzhuveṉ ** kil̤i maṭavār
cĕvvāy mŏzhi payilum * ciṟupuliyūrc calacayaṉattu *
ai vāy aravu-aṇaimel * uṟai amalā arul̤āye-8

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1635. O lord, you are pure. You rest on five-headed Adishesha on the ocean and in the temple Salasayanam in Chirupuliyur where parrots repeat the words that beautiful girls teach them. I want to control my mind that dwells on women with lined kohl-darkened eyes that are like lovely neelam blossoms and so I come to worship your ankleted feet to escape my desire.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கிளி மடவார் கிளிகள் பெண்களின்; செவ்வாய் சிவந்த வாயிலிருந்து வரும்; மொழி பயிலும் சொற்களை பயிலும்; சிறுபுலியூர் சிறுபுலியூர்; சலசயனத்து ஜல சயனத்தில்; ஐ வாய் ஐந்து வாயையுடைய; அரவு அணைமேல் அதிசேஷன் மேல்; உறை அமலா! சயனித்திருக்கும் அமலனே!; மை ஆர் வரி நீல மலர் கரு நெய்தல் பூ அணிந்த; கண்ணார் பெண்களின் மீது; மனம் விட்டிட்டு ஆசையை விட்டு; உய்வான் உய்வதற்காக; உன கழலே உன் திருவடிகளை; தொழுது எழுவேன் வணங்கித் தொழுகிறேன்; அருளாயே அருள் புரிய வேண்டும்