PT 7.9.3

அருள்மாகடலின் அடிகளையே நான் அறிவேன்

1630 பறையும்வினைதொழுதுஉய்ம்மினீர் பணியும்சிறுதொண்டீர் *
அறையும்புனல்ஒருபால் வயல்ஒருபால் பொழில்ஒருபால் *
சிறைவண்டினமறையும் சிறுபுலியூர்ச்சலசயனத்து
உறையும் * இறையடியல்லது ஒன்றுஇறையும்அறியேனே.
1630 paṟaiyum viṉai tŏzhutu uymmiṉ nīr * paṇiyum ciṟu tŏṇṭīr *
aṟaiyum puṉal ŏrupāl vayal * ŏrupāl pŏzhil ŏrupāl **
ciṟai vaṇṭu iṉam aṟaiyum * ciṟupuliyūrc calacayaṉattu
uṟaiyum * iṟai aṭi allatu * ŏṉṟu iṟaiyum aṟiyeṉe-3

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1630. O devotees, worship the lord and he will remove your bad karmā. I think of nothing even for moment except the feet of the god of Salasayanam temple in Chirupuliyur surrounded with water, fields, and groves where winged bees swarm.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பணியும் சிறு சிற்றின்பங்களில் ஈடுபட்டுள்ள; தொண்டீர்! தொண்டர்களே!; நீர் தொழுது நீங்கள் பெருமானைத் தொழுது; உய்ம்மின் உய்யுங்கள்; வினை பறையும் பாவங்கள் தொலையும்; புனல் ஒரு பால் ஒருபக்கம்; அறையும் ஒலிக்கின்ற நீரும்; வயல் ஒரு பால் ஒருபக்கம் வயல்களும்; பொழில் ஒருபால் ஒருபக்கம் சோலைகளில்; சிறை வண்டு சிறகுகளையுடைய வண்டுகள்; இனம் அறையும் ரீ்ங்காரஞ் செய்யும்; சிறுபுலியூர் சிறுபுலியூர்ச்; சலசயனத்து ஜல சயனத்தில்; உறையும் இறை இருக்கும் பெருமானின்; அடி அல்லது திருவடிகளைத் தவிர நான்; ஒன்று இறையும் வேறொன்றை சிறிதும்; அறியேனே அறியேனே