PT 7.9.6

இப்பரமனைத் தொழுவார்க்குத் துயரமே வராது

1633 முழுநீலமும்மலராம்பலும் அரவிந்தமும்விரவி *
கழுநீரொடுமடவாரவர் கண்வாய்முகம்மலரும் *
செழுநீர்வயல்தழுவும் சிறுபுலியூர்ச்சலசயனம் *
தொழுநீர்மையதுடையார் அடிதொழுவார்துயரிலரே.
1633 muzhu nīlamum malar āmpalum * aravintamum viravi *
kazhunīrŏṭu maṭavār-avar * kaṇ vāy mukam malarum **
cĕzhu nīr vayal tazhuvum * ciṟupuliyūrc calacayaṉam *
tŏzhu nīrmai-atu uṭaiyār * aṭi tŏzhuvār tuyar ilare-6

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1633. He stays in the temple Salasayanam in Chirupuliyur surrounded with flourishing fields where dark neelam, ambal and lotus flowers bloom with kazhyneer flowers like the beautiful eyes, mouths and faces of lovely women. If devotees worship the god and bow to his divine feet they will not know trouble.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முழு நீலமும் முழு நீலமாயிருக்கும் பூவும்; மலர் ஆம்பலும் ஆம்பல் மலர்களும்; அரவிந்தமும் தாமரைகளும்; கழுநீரொடு செங்கழுநீர்ப் பூக்களும்; விரவி மடவார் சேர்ந்து அங்குள்ள பெண்களின்; அவர் கண் கண்கள் போல்; வாய் அதரம் போலவும்; முகம் மலரும் முகம் போலவும் மலரும்; செழு நீர் செழித்த நீர்; வயல் தழுவும் நிறைந்த வயல்களினால் சூழ்ந்த; சிறுபுலியூர் சிறுபுலியூர்; சலசயனம் ஜல சயனத்திலிருப்பவனை; தொழும் வணங்குவதை; நீர்மை ஸ்வபாவமாக உடையவர்களுடைய; அது உடையார் திருவடிகளை; அடி தொழுவார் தொழுபவர்கள்; துயர் இலரே துக்கமற்றவர்கள் ஆவர்