PT 7.9.5

அருள்மாகடலே! அருள் செய்

1632 நந்தாநெடுநரகத்திடை நணுகாவகை * நாளும்
எந்தாய்! என இமையோர்தொழுதேத்தும்இடம் * எறிநீர்ச்
செந்தாமரைமலரும் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
அந்தாமரையடியாய்! உன தடியேற்குஅருள்புரியே.
1632 nantā nĕṭu narakattiṭai * naṇukā vakai * nāl̤um
ĕntāy ĕṉa * imaiyor tŏzhutu ettum iṭam ** ĕṟi nīrc
cĕntāmarai malarum * ciṟupuliyūrc calacayaṉattu *
am tāmarai aṭiyāy * uṉatu aṭiyeṟku arul̤puriye-5

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1632. The place where the gods in the sky come to pray and say, “Our father, give us your grace so we will not reach cruel hell” is the temple of Salasayanam in Chirupuliyur where lovely lotuses bloom in rolling waters. O lord with lovely lotus feet, give me, your slave, your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இமையோர் நாளும் தேவர்கள் நாள்தோறும்; எந்தாய்! என எம்பெருமானே! என்று சொல்லி; தொழுது அடிபணிந்து; ஏத்தும் இடம் தொழுது துதிக்குமிடம்; எறி நீர் அலைமோதும் நீர் நிலைகளிலே; செந்தாமரை மலரும் செந்தாமரை மலரும்; சிறுபுலியூர் சிறுபுலியூர்; சலசயனத்து ஜல சயனத்தில்; அந் தாமரை அழகிய தாமரை போல; அடியாய்! திருவடிகளை உடைய; நந்தா அழிவில்லாத; நெடு நரகத்திடை பெரிய ஸம்ஸாரமான நரகத்திலே; நணுகாவகை நான் சேராதபடி; உனது அடியேற்கு உன் அடியேனான எனக்கு; அருள் புரியே அருள் புரிய வேண்டும்