PT 7.9.2

யார் சொல்லையும் கேளாமல் சிறுபுலியூர் சேர்க

1629 தெருவில்திரிசிறுநோன்பியர் செஞ்சோற்றொடுகஞ்சி
மருவி * பிரிந்தவர்வாய்மொழி மதியாதுவந்தடைவீர் *
திருவிற்பொலிமறையோர் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
உருவக்குறளடிகள் அடியுணர்மின்உணர்வீரே.
1629 tĕruvil tiri ciṟu noṉpiyar * cĕñ coṟṟŏṭu kañci
maruvi * pirintavar vāymŏzhi * matiyātu vantu aṭaivīr **
tiruvil pŏli maṟaiyor * ciṟupuliyūrc calacayaṉattu *
uruvak kuṟal̤ aṭikal̤ aṭi * uṇarmiṉ-uṇarvīre-2

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1629. Do not listen to the preaching of the Jains who vow to wander on the streets and beg for rice and porridge. Come and worship the feet of the god, the dwarf who stays in the temple in Salasayanam in Chirupuliyur where renowned Vediyars recite the Vedās and worship his feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெருவில் திரி தெருவில் திரிபவர்களும்; சிறு நோன்பியர் அல்ப விரதத்தை உடையவர்களும்; செஞ் சோற்றொடு அழகிய தயிர் சோற்றையும்; கஞ்சி மருவி கஞ்சியையும் உண்ண விரும்பி; பிரிந்தவர் வைதிக கோஷ்டியில் சேராதவர்களின் ஜைனர்; வாய் மொழி மதியாது பேச்சுகளை திரஸ்கரித்து விட்டு; வந்து அடைவீர் எம்பெருமானை வந்து அடைவீர்; திருவில் பொலி செல்வம் நிறைந்த; மறையோர் வைதிகர்கள் வாழும்; சிறுபுலியூர் சிறுபுலியூர்ச்; சலசயனத்து ஜல சயனத்தில்; உருவக் குறள் அழகிய வாமநனாயிருக்கும்; அடிகள் அடி பெருமானின் திருவடிகளை; உணர்மின் வணங்க விரும்பினீர்களாகில்; உணர்வீரே தியானம் செய்யுங்கள்