PT 7.9.10

பாவம் பறந்துவிடும்

1637 சீரார்நெடுமறுகில் சிறுபுலியூர்ச்சலசயனத்து *
ஏரார்முகில்வண்ணன்தனை இமையோர்பெருமானை *
காரார்வயல்மங்கைக்கிறை கலியனொலிமாலை *
பாரார்இவைபரவித்தொழப் பாவம்பயிலாவே. (2)
1637 ## cīr ār nĕṭu maṟukil * ciṟupuliyūrc calacayaṉattu *
er ār mukil vaṇṇaṉ-taṉai * imaiyor pĕrumāṉai **
kār ār vayal maṅkaikku iṟai * kaliyaṉ ŏli mālai *
pārār ivai paravit tŏzhap * pāvam payilāve-10

Ragam

Aparūpa / அபரூப

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1637. Kaliyan the chief of Thirumangai surrounded with flourishing fields composed a Tamil garland of pāsurams with music, praising the dark cloud-colored god of the gods of the Salasayanam temple in Chirupuliyur that has long beautiful streets. If devotees recite these pāsurams and worship the lord the results of their karmā will be removed.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சீர் ஆர் நெடு மறுகில் நீண்ட திருவீதிகளை யுடைய; சிறுபுலியூர் சிறுபுலியூர்; சலசயனத்து ஜல சயனத்திலிருக்கும்; ஏர் ஆர் முகில் அழகிய மேகம் போன்ற; வண்ணன் தனை நிறமுடையவனை; இமையோர் தேவர்களின்; பெருமானை தலைவனைக் குறித்து; கார் ஆர் வயல் கருத்த வயல்களையுடைய; மங்கைக்கு திருமங்கைக்கு; இறை கலியன் தலைவரான திருமங்கை ஆழ்வார்; ஒலி மாலை அருளிச்செய்த பாசுரங்களை; பாரார் இவை பரவி உலகத்தவர்கள் அனுஸந்தித்து; தொழ தொழுமளவில்; பாவம் பயிலாவே பாவம் நில்லாதே