Chapter 2

Second Prakaraṇam

Bāshyam
Translation

verse 93

இதுக்கு மூலம் \- யான் நீ என்று மறுதலைத்து வானத்து மண்மிசை மாறும் நிகருமின்றி நிலையிடம் தெரியாதே தெய்வத்தின மொருவகைக் கொப்பாக இனத்தலைவன் அந்தாமத்தன்பு செய்யச் சேர்ந்தமைக் கடையாளமுளவாக உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து நாட்டியல் வொழிந்து சடரையோட்டி மதாவலிப்தர்க்கு அங்குசமிட்டு நடாவிய கூற்றமாய்த் தீயனமருங்கு வாராமல் கலியுகம் நீங்கிக் கிதயுகம் பற்றிப் பட்டெழு போதறியாதிருந்த ப்ரபாவம்.

verse 94

இதுக்கு ஹேது ஊழிதோறும் சோம்பாது ஒன்றிப் பொருளென்றளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று நூலுரைத்து யோகு புணர்ந்து கண்கான வந்து ஆள்பார்க்கிறவன் உலகினதியல்வை நல்வீடு செய்ய இணக்குப் பார்வை தேடிக் கழலலர் ஞானமுருவின் முழுதுமோட்டின பெருங்கண் எங்குமிலக்கற்று அன்போடு நோக்கான திசையிலே ஆக்கையில் புக்குழன்று மாறிப்படிந்து துளங்குகிறவர் மேலேபடப் பக்க நோக்கறப் பண்ணின விசேஷ கடாக்ஷம்.

verse 99

ஜந்மாந்தர ஸஹஸ்ர நல் தவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து எழுதி வாசித்து தத்வஜ்ஞராய்க் குளித்து ஓதி உருவெண்ணு மந்தி ஐவேள்வி அறுதொழில்களால் மிக்கு ஊன்வாடப் பொருப்பிடைத் தாம் வருந்தித் துன்ப வினைகளை விடுத்து விவேக சமாதிகள் வளர எட்டு நீக்கி எட்டுமிட்டு எட்டினாய பேதப்பூவில் சாந்தொடு தேவகார்யம் செய்து உள்ளம் தூயராய் வாரிப் புன்புலவகத்தினுள் இளைப்பினையடைவே விளக்கினைக் கண்டு யோகநீதி நண்ணி அறம் திகழுமறையோர் மனந்தன்னுள் அமர்ந்துறையும் அரும்பெரும் சுடரைக் கண்கள் சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய் கனவில் மிக்க தர்சந ஸமமாய் ஆகத்துப் புல்கு மத்யர்த்த ப்ரியமாய் வைகும் சிறப்பு விட்டுக் குற்றேவலென்னாத அநந்ய ப்ரயோஜநமாய் வேதநோபாஸந ஸேவாத்யாநாதிகளென்று சொல்லுமது ஸாத்ய ஸாதந பக்தியாக சாஸ்த்ர ஸித்தம்.

verse 104

பெரும்பாழில் சேஷத்ரஜ்ஞன் பெரும்செய் கலியாரேவ ஆளும் வன்குறும்பர் குடியேறிப் பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாக்கிப் படிந்துண்ணும் போகத்தே தூராதே பொறுக்கொணாப் போகத்துக்குக் காவல் செய்து குமைத்துத் திரித்து வீழ்த்தி வலித்தெற்றி அருவி யறுத்துக் கடனாயின இறுப்பிக்கப் பாழ்த்த விதியானவாறே தன்பால் மனம் வைப்பிப்பதாகத் தேய்ந்தற மன்னி ஒள்வாளுருவி வினைத்தூற்றை வேரறுவித்துத் தீக்கொளீஇக் கவ்வை யெருவிட்டு அமுதவாறுதலைப் பற்றி ஈரியாய்க் கசிந்ததிலே ஈரநெல் வித்தி எழு நாற்றுக்களையையும் வேர் முதல் மாய்த்துப் பட்டிச்சேவதக்கி மீது கொள்ளாமல் குறிக்கொள்வித்துக் கடல் புரைய விளைந்து தலைவணக்கினவாறே நாளுநாள் கோட்குறையாக நின்றாரறியாமல் குந்தங்கொண்டு ஆராமை யுண்டு காலக்கழிவாலே நிலத்துகாமல் பற்றறுத்துத் தண்டாலடித்துப் பதரறுத்துப் போர்த்த தோல்

விடுத்து ஸூக்ஷ்ம வொட்டும் நீரிலே கழுவி வேறோர் கலத்திட்டுப் பைந்தொடி மடந்தையரைக் கொண்டு ஷட்குண ரஸாந்நமாக்கி வானோர்க்கு ஆராவமுதானவாறே முற்றுமுண்ண முன்னம் பாரித்து உழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பத்தியுழவன் க்ருஷி பலமிறே.

verse 121

வித்யை தாயாகப் பெற்றுப் பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள்போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப் பேச்சுப்படாமல் விச்வபதி லோகபர்த்தா வென்னும் மணவாளரை நாலிரண்டிழை கொண்டு முப்பிரியான ப்ரஹ்ம ஸூத்ர பந்தத்தோடே வரிப்பிக்க, பரம்புருடன் கைக் கொண்டபின் சதுர்த்தி யுள்புக்கு இடையீடு

நடுக்கிடக்கும் நாள் கழித்து ஐந்மபூமியை விட்டகன்று சூழ்விசும்பிற்படியே உடன் சென்று குடைந்து நீராடி வியன் துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன் கொண்டு நோக்கியர் அலங்கரித்துப் பல்லாண்டிசைத்துக் கவரி செய்ய நிறைகுட விளக்கமேந்தி இளமங்கைய ரெதிர் கொள்ள வைகுந்தம் புக்கிருந்து வாய்மடுத்துப் பெருங்களிச்சியாக வானவர் போகமுண்டு கோப்புடைய கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து பரதா க்ரூர மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணிமிகு மார்பிலே குருமாமணியா யணையும் வஸ்துவுக்கு மணிவல்லிப்பேச்சு வந்தேறியன்று.

verse 123

உண்ணாது கிடந்தோர் மாயையினா லென்னும் வீறுடைய முடிக்குரியாரோடு இத்திரு மண்ணேரன்ன வொண்ணுதல் பின்னைகொல் என்கிற ஒப்பு, தென்பால் நெடுமாடம் கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறெழவெரித்த பெருந்தோற்றத்தாருயிர் காகுத்தன் ஆதியங்காலம் மண்புரை பொன்மாதின் துகளாடி எருதேழ் தழீஇச் சறையினாரென்னு மவற்றிலே தோன்றும்.

verse 124

இவர்கள் தேடிநிற்கப் பொய்கை முதுமணல் முல்லைப்பந்தல் முற்றம் மச்சொடு மாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்பு செய்து அல்லல் விளைத்துக் கவருமுகக்கு நல்லவர் முழுசி ஆவரென்னும் தேன்மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகரஸ்த்ரீகள், நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிர மெண்ணிறந்தார் பாவம் \- கடல் ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முனிந்து மற்பொரு விறல் கஞ்சனை மங்கநூற்ற வாயும் தீர்ப்பரென்னு மவற்றிலே தோன்றும்.

verse 127

அழுந்தொழும் ஸ்நேஹபாஷ்பாஞ்ஜலியோடே ருசிரஸாநுக்களில் கூவிக்கொள்ளும் பிரியாவடிமைக்குச் சரணே சரணென்று வாளும் வில்லுங்கொண்டு பந்துவும் பிதாவுமவரே யென்கையும், அன்னையென் செய்யிலென் ராஜ்யமும் யானேயென்று பெருஞ்செல்வமு மிச்சியாமல் வேண்டிச் சென்று திருவடியே சுமந்து விரைந்து வருமளவும் கண்ணநீர் பங்கமாக நிலம் துழாவிக் குடிக்கிடந்த கையறவும், கோதிலடிமை உறுமோ வென்பித்த புலன்கொள் நித்ய சத்ரு விசிந்தநமுமான ப்ராதாக்கள், அப்பொழுதைக்கப்பொழுது போனாயென்னும் மாதாபிதாக்கள், செந்தீத் தண்காற்று இளநாகம் முதலான பகையறச் சிந்தை செய்து எங்குமுள னென்னும் பள்ளிப்பிள்ளை, முற்றவிட்டு மற்றிலே னென்னும் தர்மாத்மா, வாளி பொழிந்த நிர்க்குண விச்வாத்மா உள்ளேயுறைய வீரசரிதம் ஊணாகக் கற்பார் பாவம் மற்றிலேனென்னும் ராமதாஸன், பலவகையும் கண்டு வெண் சங்கேந்தின ரூபபரனான ச்வேதன் முதலானார் படிகளும் காணலாம்.

verse 134

ஸகி வெறிவிலக்கி ஆசையறுத்து அறத்தொடு நின்ற மூன்றில் அநந்யார்ஹத்வமும், வாடி மெலிந்து பித்தேறி ஏறப் பேசிக் கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ வென்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யவஸாயமும், புத்ரி பலகால் ஆள்விட்டு ஆற்றாமை சொல்லிக் கவராதவை விட்டு இரைக்க மடலெடுத்துக் கண் புதையப் போக்கற்று உருநெஞ்சுள்ளெழக் கூடுநாள் தேடித் தாழ்த்ததுக்கு ஊடி

உசாத்துணையற்றுச் சூழவும் பகைமுகஞ் செய்யத் தடைநில்லாதே புயக்கற்று மாலையும் காலையும் பூசலிடுகிற பதினேழில் த்வரையும் தெரியும்.

verse 149

பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் சாந்தம் பூணகில் சிற்றில் தூதை முதலாவன குணத்ரய விசித்ர கர்மஸூத்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும் சுழன்றுழன்றும் பறிபட்டும் அற்பசாரமா மவையுமாய் மதீயமென்னில் விட்டகலவும் ததீயமென்னில் இகழ்வறவும் முனிவதுமிக்கால மீதோ வென்னப்படும் பொங்கைம்புலனில் போக்யாதி ஸமூஹம்.

Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo