Chapter 3

Third Prakaraṇam

Bāshyam
Translation

verse 151

விவேகமுகராய் நூலுரைத்து அள்ளலில் ரதியின்றி அணங்கின் நடையைப் பின்சென்று குடை நீழலிலே கவரியசையச் சங்கமவை முரல வரிவண்டிசை பாட மாநஸ பத்மாஸநத்திலே யிருந்து விதியினா லிடரி லந்தரமின்றி யின்பம்படக் குடிச்சீர்மையிலேயாதல் பற்றற்ற பரம ஹம்ஸராதலான நயாசலன் மெய்ந்நாவன் நாத யாமுநர் போல்வாரை அன்னமென்னும்.

verse 152

என் பெறுதியென்ன ப்ரமியாது உள்ளத்துளூறிய மதுவ்ரதமாய் தூமது வாய்கள் கொண்டு குழல்வாய் வகுளத்தின் ஸாரம் க்ரஹித்துத் தேதெனவென்று ஆளம் வைத்துச் சிறுகாலெல்லியம்போது குறிஞ்சி மருள் காமரம் கந்தாரம் தலைக்கொள்ளப்பாடித் துன்னிட்டு நெருக்க நீக்கென்று கடந்து புகும் தகைவறப் புக்கு வண்டொத்திருண்ட குழலிலே சங்கையற மருவி அருளாத யாமென்றோடி வந்து வாசமேயூதி வண்டே கரியான தெய்வவண்டோடே சேர்விக்கும் சேமமுடை நாரதன் முனிவாஹநர் தம்பிரான்மார் போல்வரை வண்டு தும்பி யென்னும்.

verse 153

கண்வலைப்படாதே அகவலைப்பட்டு வளர்த்தெடுப்பார் கையிருந்து தயிர் நெய்யமர் பாலமுதுண்டு ஒரு மிடறாய்ப் போற்றியொரு வண்ணந் திருந்த நுவலாததுக்கு என் பிழைக்கும் நீயலையே நல்வளத் துரப்பனென்னு மவற்றுக்கு முகந்து, சொல்லெடுத்துச் சோர்ந்தவாறே கற்பியா வைத்த மாற்றம் கை கூப்பி வணங்கப் பாடி ஆலியா வழையா பராபிமாநத்திலே யொதுங்கின நம்பிக்கன்பர் தலைமீதடிப்பொடி உடையவருடையார் போல்வாரைக் கிளி பூவை குயில் மயிலென்னும்.

verse 154

ஆசறு தூவியென்னும் பாஹ்யாப்யந்தர சுத்தியோடே திரையுகளும் வ்யஸந வ்யதையற்றுத் தாய்வாயி லுண்ணும் பிள்ளைக் கிரைதேடி வைகலுடன் மேய்ந்து நுங்கால் பைங்கானமென்று ப்ரஹ்மரதம் பண்ணிக் கொடுத்தவை கொண்டு நல்ல பதத்தையும் வேண்டே னென்னுந் தனிப்பெரும் பித்தர் நம்முதலிகள் போல்வாரை நாரை கொக்கு குருகென்னும்.

verse 155

பூண்டநாள் சீர்க் கடலையுட் கொண்டு திருமேனி நன்னிற மொத்து உயிரளிப்பான் தீர்த்தகரராய் எங்கும் திரிந்து ஜ்ஞாநஹ்ரதத்தைப் பூரித்துத் தீங்கின்றி வாழ நிதி சொரிந்து கொடுத்தது நினையாதே லஜ்ஜித்து வெளுத்தொளித்துக் கண்டுகந்து பரஸம்ருத்தியே பேறான அன்பு கூருமடியவர் உறையிலிடாதவர் புயற்கை யருள்மாரி குணந்திகழ் கொண்டல் போல்வாரை மேகமென்னும்.

verse 189

மனஞ்செய் எல்லையில் ஞான வின்பத்தை நின்மலமாக வைத்தவர் ஞனப்பிரானை ஞானத்துவைம்மி னென்றவிது, தத்வ விவேக நித்யத்வாநித்யத்வ நியந்த்ருத்வ ஸௌலப்ய ஸாம்யாஹங்காரேந்த்ரிய தோஷ பல மந: ப்ராதாந்ய கரணநியமந ஸுக்ருதி பேத தோவாஸுர விபாக விபூதியோக விச்வரூப தர்சந ஸாங்கபக்தி ப்ரபத்தி த்வைவித்யாதிகளாலே அன்றோதிய கீதா ஸமமென்னும்.

குறிப்பு \- இந்தச் சூர்ணைக்கான வ்யாக்யானத்தில் முதல் பகுதியில் ஸ்ரீகீதையின் விளக்கங்களையும், இரண்டாவது பகுதியில் அந்த விளக்கங்களுக்கு ஏற்ப உள்ள திருவாய்மொழியையும் அருளிச் செய்துள்ளார். ஆனால் இங்கு, அந்தந்த கீதா வ்யாக்யானத்தைத் தொடர்ந்து, அதற்கான திருவாய்மொழி வ்யாக்யானம் உள்ளது போன்று மாற்றி தரப்பட்டுள்ளது. இது படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்று கருதியே இவ்விதம் அமைக்கப்பட்டது.

verse 202

இருத்து மெண்டானாய்ப் பொய் கலவாது அன்பு செய்து பற்றிலனாய் க்ஷுத் த்ருட் பீடித நிர்த்தநரைப் போலே கண்டு கொண்டுண்டு பருகிப் பரிஜநாதிகளோடே தன்னைத் தந்து என்செய்வ னென்றே யிருந்து அகில பரத்தையும் ஸமர்ப்பிக்க அது சுமந்து அல்லு நன்பகலும் போகு என்றாலும் அகல்வானு மல்லனாய் போகே லென்றால் உகப்பையுந் தவிர்ந்து விதி வகையே நடத்துமவனே உபதேச ஸத்பாத்ரம்.

verse 203

நண்ணாதார் மெய்யிலூன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய அமாநித்வாதிகள் விஞ்சின ப்ரணிபாதாபிவாதந பரிப்ரச்ந ஸேவாபரர்க்கு உளங்கொள் பேசுமளவன் றென்னும் அர்த்தத்தை வம்மின் விரோத மீனச்சொல் எவ்வுயிர்க்கு மறியவென்று அடைவுகெட அதபஸ்கர்க்கு உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தங்கண்டு

ஆற்றாமையும் மிக்க க்ருபையுமிறே.

verse 211

மூன்றில் சுருக்கிய ஐந்தையும் உயர் திண்ணணை ஒன்று பயிலேறு கண்கரு வீடு சொன்னால் ஒருக்கொண்ட நோற்ற நாலும் எம்மாவொழிவில் நெடுவேய் என்கிற இருபதிலே விசதமாக்கி எண்பதிலே பரப்புகையாலே ஐந்தையும், அருளினன் வீடு பெற்ற வென்கையாலே ஐந்திலுமிரண்டையும், தொழுது களித்தேன் சொல்லுப் பெற்றேன் பணிசெய் என்கிற முக்த லக்ஷண வ்ருத்தியாலே இரண்டிலொன்றையும் இதுக்கு ப்ரமேயமென்னும்.

verse 214

சாதுசனம் நண்ணா மயர்வற மாசறுக்கும் தெருள் கொள்ளப் பத்தராவர்

அடிமையறவுரிய நோய்களறுக்கும் உடைந்து ஏற்றரும் வானின் தாளின் கீழடிக்கீழ் இன்பக் கதி பயக்கும் ஊடு புக்கு மூவுலகுமுருகா நிற்பரென்னும் ஸாம்யத்தாலே வாச்யன் பத்தினாய தோற்றம் போலே தோற்றங்கள் ஆயிரத்தின் பத்துப்பத்தான விதின் ஆவிர்ப்பாவம்.

verse 218

பரத்வ காரணத்வ வ்யாபகத்வ நியந்த்ருத்வ காருணிகத்வ சரண்யத்வ சக்தத்வ ஸத்யகாமத்வ ஆபத்ஸகத்வ ஆர்த்திஹரத்வ விசிஷ்டன் மயர்வையறுக்க, தத்வ வேதந மறப்பற்று ஜ்ஞப்தி பல முக்தி தலை சேர நிஷ்கர்ஷித்து, மோக்ஷ பல வ்ருத்தி செய்ய அர்த்தித்து, புருஷார்த்த பலாந்யருசியொழிந்து, விரக்தி பலராகம் கழியமிக்கு, ப்ரேமபலோபாயத்தே புகுந்து, ஸாதந பலோபகாரக் கைம்மாறின்றி க்ருதஜ்ஞதா பல ப்ரதி

க்ருதமானத்தை யுணர்ந்து, ஆத்மதர்சந பலப்ராப்தி மரணாவதியாகப் பெற்று, காலாஸத்தி பல கதிக்குத் துணை கூட்டின தம் பேற்றைப் பிறரறியப் பத்துத்தோறும் வெளியிடுகிறார்.

Srimathe Ramanujaya Namah! www.uveda.org | All rights reserved. | Privacy policy | Credits | Help | Contact Us
UVEDAORG — a registered 501(c)(3) nonprofit organization · EIN 41-5031752 · Portland, Oregon, USA · About
Uveda.org logo