Chapter 4
Nammāzhvār speaks of the Lord's victorious deeds - (ஆழி எழ)**
எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்
Parānkusa nāyaki was powerless to reach ‘ThiruppErNagar’. Bhagavān wanted to show all His astonishing deeds and victories to Āzhvār to strengthen him. “O Devotee! Enrich yourself by chanting my victorious deeds” says Bhagavān. Āzhvār expounds on each glorious act of emperumAn in these hymns.
பராங்குசநாயகி திருப்பேர்நகருக்குச் செல்லமுடியாமல் வலிமையற்றிருந்தார். பகவான் தன் செயல்களை எல்லாம் காட்டி வெற்றிகளைக் கூறி அவருக்கு வலிமையுண்டாக்க எண்ணினான். “பக்தா! என் வெற்றிச் செயல்களைச் சொல்லிக் கொண்டு தரித்து இரு” என்றான். எம்பெருமான் செய்த செயல்களை ஆழ்வார் ஒவ்வொன்றாக ஈண்டுக் + Read more
Verses: 3486 to 3496
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: காந்தாரம்
Timing: 7.13 - 8.24 AM
Recital benefits: will be successful in all their endeavors
- TVM 7.4.1
3486 ## ஆழி எழச் * சங்கும் வில்லும் எழ * திசை
வாழி எழத் * தண்டும் வாளும் எழ ** அண்டம்
மோழை எழ * முடி பாதம் எழ * அப்பன்
ஊழி எழ * உலகம் கொண்டவாறே (1) - TVM 7.4.2
3487 ஆறு மலைக்கு * எதிர்ந்து ஓடும் ஒலி * அரவு
ஊறு சுலாய் * மலை தேய்க்கும் ஒலி ** கடல்
மாறு சுழன்று * அழைக்கின்ற ஒலி * அப்பன்
சாறுபட * அமுதம் கொண்ட நான்றே (2) - TVM 7.4.3
3488 நான்றில * ஏழ் மண்ணும் தானத்தவே * பின்னும்
நான்றில ஏழ் * மலை தானத்தவே ** பின்னும்
நான்றில ஏழ் * கடல் தானத்தவே * அப்பன்
ஊன்றி இடந்து * எயிற்றில் கொண்ட நாளே (3) - TVM 7.4.4
3489 நாளும் எழ * நிலம் நீரும் எழ * விண்ணும்
கோளும் எழ * எரி காலும் எழ ** மலை
தாளும் எழச் * சுடர் தானும் எழ * அப்பன்
ஊளி எழ * உலகம் உண்ட ஊணே (4) - TVM 7.4.5
3490 ஊணுடை மல்லர் * ததர்ந்த ஒலி * மன்னர்
ஆண் உடைச் சேனை * நடுங்கும் ஒலி ** விண்ணுள்
ஏண் உடைத் தேவர் * வெளிப்பட்ட ஒலி * அப்பன்
காணுடைப் பாரதம் * கை அறை போழ்தே (5) - TVM 7.4.6
3491 போழ்து மெலிந்த * புன் செக்கரில் * வான் திசை
சூழும் எழுந்து * உதிரப் புனலா ** மலை
கீழ்து பிளந்த * சிங்கம் ஒத்ததால் * அப்பன்
ஆழ் துயர் செய்து * அசுரரைக் கொல்லுமாறே (6) - TVM 7.4.7
3492 மாறு நிரைத்து * இரைக்கும் சரங்கள் * இன
நூறு பிணம் * மலைபோல் புரள ** கடல்
ஆறு மடுத்து * உதிரப் புனலா * அப்பன்
நீறு பட * இலங்கை செற்ற நேரே (7) - TVM 7.4.8
3493 நேர்சரிந்தான் * கொடிக் கோழி கொண்டான் * பின்னும்
நேர்சரிந்தான் * எரியும் அனலோன் ** பின்னும்
நேர்சரிந்தான் * முக்கண் மூர்த்தி கண்டீர் * அப்பன்
நேர்சரி வாணன் * திண்தோள் கொண்ட அன்றே (8) - TVM 7.4.9
3494 அன்று மண் நீர் எரி கால் * விண் மலை முதல் *
அன்று சுடர் * இரண்டு பிறவும் ** பின்னும்
அன்று மழை * உயிர் தேவும் மற்றும் * அப்பன்
அன்று முதல் * உலகம் செய்ததுமே (9) - TVM 7.4.10
3495 மேய் நிரை கீழ் புக * மா புரள * சுனை
வாய் நிறை நீர் * பிளிறிச் சொரிய ** இன
ஆ நிரைபாடி * அங்கே ஒடுங்க * அப்பன்
தீ மழை காத்துக் * குன்றம் எடுத்தானே (10) - TVM 7.4.11
3496 ## குன்றம் எடுத்த பிரான் * அடியாரொடும் *
ஒன்றி நின்ற * சடகோபன் உரைசெயல் **
நன்றி புனைந்த * ஓர் ஆயிரத்துள் இவை *
வென்றி தரும் பத்தும் * மேவிக் கற்பார்க்கே (11)