Chapter 4

Nammāzhvār speaks of the Lord's victorious deeds - (ஆழி எழ)

எம்பெருமானது வெற்றிச் செயல்களைப் பேசுதல்
Parānkusa nāyaki was powerless to reach ‘ThiruppErNagar’. Bhagavān wanted to show all His astonishing deeds and victories to Āzhvār to strengthen him. “O Devotee! Enrich yourself by chanting my victorious deeds” says Bhagavān. Āzhvār expounds on each glorious act of emperumAn in these hymns.
பராங்குசநாயகி திருப்பேர்நகருக்குச் செல்லமுடியாமல் வலிமையற்றிருந்தார். பகவான் தன் செயல்களை எல்லாம் காட்டி வெற்றிகளைக் கூறி அவருக்கு வலிமையுண்டாக்க எண்ணினான். “பக்தா! என் வெற்றிச் செயல்களைச் சொல்லிக் கொண்டு தரித்து இரு” என்றான். எம்பெருமான் செய்த செயல்களை ஆழ்வார் ஒவ்வொன்றாக ஈண்டுக் கூறுகிறார்.
Verses: 3486 to 3496
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: காந்தாரம்
Timing: 7.13 - 8.24 AM
Recital benefits: will be successful in all their endeavors
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 7.4.1

3486 ஆழியெழச் சங்கும்வில்லுமெழ * திசை
வாழியெழத் தண்டும்வாளுமெழ * அண்டம்
மோழையெழ முடிபாதமெழ * அப்பன்
ஊழியெழ உலகங்கொண்டவாறே. (2)
3486 ## ஆழி எழச் * சங்கும் வில்லும் எழ * திசை
வாழி எழத் * தண்டும் வாளும் எழ ** அண்டம்
மோழை எழ * முடி பாதம் எழ * அப்பன்
ஊழி எழ * உலகம் கொண்டவாறே (1)
3486 ## āzhi ĕzhac * caṅkum villum ĕzha * ticai
vāzhi ĕzhat * taṇṭum vāl̤um ĕzha ** aṇṭam
mozhai ĕzha * muṭi pātam ĕzha * appaṉ
ūzhi ĕzha * ulakam kŏṇṭavāṟe (1)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Oh, how wonderful! The way the great Benefactor spanned the worlds, with the discus growing tall like the Lord, followed by the conch, bow, mace, and sword. Benedictory shouts from all directions went up as the massive globe got pierced, and bubbling waters emerged from the peripheral waters, with the Lord's crown and feet moving up, showing good days for the Devas.

Explanatory Notes

The breath-taking expansion of the Lord as Trivikrama, spanning the entire Universe, up and below, is mentioned first. When the King embarks on a mighty undertaking, his immediate attendants vie with each other in exhibiting their eagerness to ensure its successful achievement. When Rāma set out on exile, Lakṣmaṇa was the first to step forward to accompany Him. Likewise, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழி எழ உலகு அளக்க வளர்ந்த போது சக்கரம் தோன்றவும்; சங்கும் வில்லும் எழ சங்கும் வில்லும் தோன்றவும்; திசை எல்லா திசைகளிலிருந்து; வாழி எழ மங்களாசாஸன ஒலி தோன்றவும்; தண்டும் வாளும் எழ கதையும் வாளும் தோன்றவும்; அண்டம் அண்டகபாலம் பிளந்து; மோழை எழ ஆவரணஜலம் தோன்றவும்; முடி பாதம் திருமுடியும் திவடிகளும் ஒருசேர; எழ எழும்படியாக; ஊழி எழ நல்ல காலம் தோன்றும்படி; அப்பன் திரிவிக்கிரமனாய்; உலகம் உலகங்களை; கொண்டவாறே! அளந்த ஆச்சர்யம் தான் என்னே!
sangum ṣrī pānchajanya (conch); villum ṣrī ṣārnga (bow); thaṇdum the maśe; vāl̤um the sword; ezha as they all appear; thisai present in every direction; vāzhi the tumultuous sound of mangal̤āṣāsanam (wishing well by dhĕvas, manushyas etc); ezha to rise; aṇdam breaking the top portion of the oval shaped universe; mŏzhai bubble; ezha to rise; mudi the divine crown; pādham the risen, divine feet; ezha to rise together; ūzhi distinguished times; ezha to commence; appan sarvĕṣvaran, who is the lord of all; ulagam the world; koṇda measured and accepted; āṛu method; ĕ this is how [amaśing] it was!; appan sarvĕṣvara, the great benefactor; sāṛu great festivity

TVM 7.4.2

3487 ஆறுமலைக்கு எதிர்ந்தோடுமொலி * அர
வூறுசுலாய் மலைதேய்க்குமொலி * கடல்
மாறுசுழன்று அழைக்கின்றவொலி * அப்பன்
சாறுபட அமுதங்கொண்டநான்றே.
3487 ஆறு மலைக்கு * எதிர்ந்து ஓடும் ஒலி * அரவு
ஊறு சுலாய் * மலை தேய்க்கும் ஒலி ** கடல்
மாறு சுழன்று * அழைக்கின்ற ஒலி * அப்பன்
சாறுபட * அமுதம் கொண்ட நான்றே (2)
3487 āṟu malaikku * ĕtirntu oṭum ŏli * aravu
ūṟu culāy * malai teykkum ŏli ** kaṭal
māṟu cuzhaṉṟu * azhaikkiṉṟa ŏli * appaṉ
cāṟupaṭa * amutam kŏṇṭa nāṉṟe (2)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Divya Desam

Simple Translation

During the festive days when the great Sire gave the nectar from the ocean churned for the Devas, there was a great noise. Rivers bound for the ocean ran back to the mountains, the mighty snake rustled around the gigantic mountain, and the oceanic water whirled round and round.

Explanatory Notes

When the momentous churning of the Milk-ocean took place, so great was the upheaval of the ocean that the rivers bound for the ocean were repulsed so fast that they had to swirl back to the mountains whence they sprang. And then, there was the mighty serpent, Vāsukī functioning as the rope churning the great mountain, making all the noise that the tremendous friction could + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அப்பன் எம்பெருமான்; சாறு பட தேவர்களுக்கு திருவிழா உண்டாகும்படி; அமுதம் கொண்ட பாற்கடல் கடைந்து அமுதம் கொண்ட; நான்று காலத்தில் கடைந்த வேகத்தால்; ஆறு ஆறுகள் தாம் பிறந்து வந்த ஆறுகள்; மலைக்கு மலைகளை நோக்கி; எதிர்ந்து ஓடும் ஒலி எதிர்த்து ஓடும் ஒலியும்; அரஊறு வாசுகி என்னும் பாம்பின் உடலை; சுலாய் மலை மந்தர மலையில் சுற்றிக் கடைந்ததால்; தேய்க்கும் ஒலி தேய்கின்ற ஒலியும்; கடல் பாற்கடல்; மாறு சுழன்று இடம் வலமாக மாறிச் சுழன்று; அழைக்கின்ற ஒலி கூப்பிடும் ஒலியும் உண்டாயின
pada to occur; amudham amrutha (nectar); koṇda obtained; nānṛu day; āṛu rivers; malaikku towards the mountain (which is the origin for them); edhirndhu in the opposite direction; ŏdum flowing; oli sound; aravu vāsuki, the serpent, its; ūṛu body; sulāy coiled; malai on manthara (a celestial mountain); thĕykkum rubbing; oli sound; kadal ocean; māṛu turning around; suzhanṛu whirling; azhaikkinṛa calling; oli sound (occurred); appan the great benefactor (who transformed himself as a wild boar which does not shy away from [muddy] water); ūnṛi pushed it into the shell of universe

TVM 7.4.3

3488 நான்றில ஏழ்மண்ணும்தானத்தவே * பின்னும்
நான்றில ஏழ்மலைதானத்தவே * பின்னும்
நான்றில ஏழ்கடல்தானத்தவே * அப்பன்
ஊன்றியிடந்து எயிற்றில்கொண்டநாளே.
3488 நான்றில * ஏழ் மண்ணும் தானத்தவே * பின்னும்
நான்றில ஏழ் * மலை தானத்தவே ** பின்னும்
நான்றில ஏழ் * கடல் தானத்தவே * அப்பன்
ஊன்றி இடந்து * எயிற்றில் கொண்ட நாளே (3)
3488 nāṉṟila * ezh maṇṇum tāṉattave * piṉṉum
nāṉṟila ezh * malai tāṉattave ** piṉṉum
nāṉṟila ezh * kaṭal tāṉattave * appaṉ
ūṉṟi iṭantu * ĕyiṟṟil kŏṇṭa nāl̤e (3)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Oh, what a wonder! When the Lord pulled the Earth out with His unique tooth from under the deep waters, the seven islands did not slip from their positions, the seven mountains remained as they had been without tilting, and the seven oceans did not burst and remained intact.

Explanatory Notes

The Lord incarnated as the Great Boar, slew the demon Hiraṇyākṣa (the golden-eyed) in a pitched battle, and forked the Earth, hidden by him under the waters, with His unique tooth, long and portruding. When the Lord put the Earth back in position, all its contents, namely, the seven islands, the seven mountains and seven oceans were quite in tact, without undergoing any + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அப்பன் எம்பெருமான்; ஊன்றி வராக அதாரம் செய்து பூமியை; இடந்து குத்தி எடுத்து; எயிற்றில் எயிற்றின் மேலே; கொண்ட நாளே கொண்ட காலத்தில்; ஏழ் மண்ணும் ஏழு தீவுகளும்; நான்றில இடம் மாறாமல்; தானத்தவே தங்கள் இடங்களிலேயே இருந்தன; பின்னும் ஏழ் மலை மேலும் ஏழு மலைகளும்; நான்றில ஒன்றும் குலையாதபடி; தானத்தவே தங்கள் இடங்களிலேயே இருந்தன; பின்னும் ஏழ் கடல் மேலும் ஏழு கடல்களும்; நான்றில உடைந்து ஓடாமல் தங்கள்; தானத்தவே இடங்களிலேயே இருந்தன என்னே ஆச்சர்யம்!
idandhu dug it; eyiṝil on the tusk; koṇda kept; nāl̤ at that time; ĕzh in the form of seven islands; maṇṇum different regions of land; nānṛila without slipping; thānaththa became established in their original locations;; pinnum further; ĕzh malai the seven main mountains; nānṛila without shaking; thānaththa became rooted in their original locations;; pinnum further; ĕzh kadal the seven oceans; nānṛila without breaching their shores; thānaththa became situated in their original locations.; nāl̤um the division between day and night; ezha to be subdued

TVM 7.4.4

3489 நாளுமெழ நிலநீருமெழ * விண்ணும்
கோளுமெழே எரிகாலுமெழ * மலை
தாளுமெழச் சுடர்தானுமெழ * அப்பன்
ஊளியெழ உலகமுண்டவூணே.
3489 நாளும் எழ * நிலம் நீரும் எழ * விண்ணும்
கோளும் எழ * எரி காலும் எழ ** மலை
தாளும் எழச் * சுடர் தானும் எழ * அப்பன்
ஊளி எழ * உலகம் உண்ட ஊணே (4)
3489 nāl̤um ĕzha * nilam nīrum ĕzha * viṇṇum
kol̤um ĕzha * ĕri kālum ĕzha ** malai
tāl̤um ĕzhac * cuṭar tāṉum ĕzha * appaṉ
ūl̤i ĕzha * ulakam uṇṭa ūṇe (4)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Oh, how wonderful! The Lord sustained during the deluge in His stomach, which sucked in with great noise the seven worlds, the sky, and the tumbling planets. Land and water were uprooted, and Time ceased to function. The wind and fire, the seven mountains, the stars, and other luminaries fell from their positions.

Explanatory Notes

This song brings out the extraordinary situation that prevailed at the time of the deluge when all the elements, Sky and Earth, the Sun, Stars and other luminous bodies fell from their respective positions and moved into the Lord’s stomach, literally sucked in, to avoid being swept off. When the Sun, the chief indicater of time and its numerous components got dislodged, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அப்பன் எம்பெருமான்; ஊளி எழ பிரளய காலத்தில்; உலகம் உலகங்களை எல்லாம் ஆரவாரம் எழ; உண்ட ஊணே உண்டு தன் வயிற்றில் வைத்தபோது; நாளும் நாள்கள் மாதங்கள் முதலிய காலங்கள்; எழ நிலை குலைந்து போகவும்; நிலம் நீரும் நிலமும் நீரும்; எழ நிலை குலைந்து போகவும்; விண்ணும் கோளும் ஆகாசமும் கிரகங்களும்; எழ நிலை குலைந்து போகவும்; எரி காலும் நெருப்பும் காற்றும்; எழ நிலை குலைந்து போகவும்; மலை மலைகள் வேரோடு; தாளும் எழ அடிபெயர்ந்து போகவும்; சுடர் தானும் சூரிய சந்திரர்களும் நக்ஷத்திரங்களும்; எழ குலையவும் அனைத்தும் அவனுக்கு உணவாயின
nila nīrum land and water; ezha to be subdued; viṇṇum sky; kŏl̤um planets; ezha to be subdued; eri kālum fire and air; ezha to be subdued; malai mountains; thāl̤ base; ezhavum to be subdued; sudar thānum radiant objects such as stars; ezha to be subdued; appan the great benefactor who helps during deluge; ūl̤i ezha as said in -he ate with great hunger- [making sound will eating]; ulagam world; uṇda consumed; ĕ how amaśing it was!; appan krishṇa who is partial towards his followers; kāṇudai attractive

TVM 7.4.5

3490 ஊணுடைமல்லர் ததர்ந்தவொலி * மன்னர்
ஆணுடைச்சேனை நடுங்குமொலி * விண்ணுள்
ஏணுடைத்தேவர் வெளிப்பட்டவொலி * அப்பன்
காணுடைப்பாரதம் கையறைபோழ்தே.
3490 ஊணுடை மல்லர் * ததர்ந்த ஒலி * மன்னர்
ஆண் உடைச் சேனை * நடுங்கும் ஒலி ** விண்ணுள்
ஏண் உடைத் தேவர் * வெளிப்பட்ட ஒலி * அப்பன்
காணுடைப் பாரதம் * கை அறை போழ்தே (5)
3490 ūṇuṭai mallar * tatarnta ŏli * maṉṉar
āṇ uṭaic ceṉai * naṭuṅkum ŏli ** viṇṇul̤
eṇ uṭait tevar * vĕl̤ippaṭṭa ŏli * appaṉ
kāṇuṭaip pāratam * kai aṟai pozhte (5)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

When my Sire, Krishna, assembled the armies for the wondrous battle of Bhārata, where kings, great warriors, and strong wrestlers fell, screaming and trembling, amidst great noise and exalted Nithyasuris gathered in outer space, bubbling with great wonder.

Explanatory Notes

On seeing Lord Kṛṣṇa, the Divine Charioteer, ranged on the side of the Pāṇḍavas, Kings and Warriors of great prowess, arrayed opposite, screamed and trembled. The exalted Celestials came in their strength and watched from above, bubbling with reverent admiration, the wondrous battle down below, whose strategy was directed by the Lord at every turn, culminating in the victory of the Pāṇḍavas.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அப்பன் எம்பெருமான்; காண் உடை ஆச்சரியமான; பாரதம் பாரத யுத்தத்தை; கை அறை அணிவகுத்து; போழ்தே போர் புரிந்த போது; ஊண் உடை சிறந்த உணவுகளை உண்டு வளர்ந்த; மல்லர் மல்லர்கள் நெரிந்து; ததைந்த ஒலி விழுகிற ஓசையும்; மன்னர் ஆண் அரசர்களின் ஆண்மை; உடைச் சேனை மிகுந்த சேனையின்; நடுங்கும் ஒலி நடுங்கும் ஒலியும்; விண்ணுள் ஆகாயத்தில்; ஏண் உடை பெருமை மிகுந்த; தேவர் தேவர்கள்; வெளிப்பட்ட வெளிப்பட்டுத் துதிக்கும்; ஒலி ஒலியும் கேட்டது
bhāratham mahābhāratha war; kai joining his hands; aṛai clapped [to stimulate the war]; pŏzhdhu at that time; ūn muscles which give strength; udai having; mallar great wrestlers; thadharndha banging at each other and falling; oli sound; mannar kings-; āl̤ brave soldiers; udai having; sĕnai armies; nadungum trembling; oli sound; viṇ ul̤ on the sky; ĕṇ their respective positions; udai having; dhĕvar prime dhĕvathās; vel̤ippatta appearing and celebrating; oli sound (occurred); pŏzhdhu day; melindha when ended

TVM 7.4.6

3491 போழ்துமெலிந்த புன்செக்கரில் * வான்திசை
சூழுமெழுந்து உதிரப்புனலா * மலை
கீழ்துபிளந்த சிங்கமொத்ததால் * அப்பன்
ஆழ்துயர்செய்து அசுரரைக்கொல்லுமாறே.
3491 போழ்து மெலிந்த * புன் செக்கரில் * வான் திசை
சூழும் எழுந்து * உதிரப் புனலா ** மலை
கீழ்து பிளந்த * சிங்கம் ஒத்ததால் * அப்பன்
ஆழ் துயர் செய்து * அசுரரைக் கொல்லுமாறே (6)
3491 pozhtu mĕlinta * puṉ cĕkkaril * vāṉ ticai
cūzhum ĕzhuntu * utirap puṉalā ** malai
kīzhtu pil̤anta * ciṅkam ŏttatāl * appaṉ
āzh tuyar cĕytu * acuraraik kŏllumāṟe (6)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Oh, what a wonder! the way the demon Hiraṇya was slain by my Sire. Right at dusk, like a lion standing over a mountain, cleaving it and splashing blood in all directions, turning the sky crimson.

Explanatory Notes

Oh, what a thrilling spectacle it was, the way Narasiṃham slew Hiraṇya, like unto one mountain cleaving another lain, down below, blood flooding all over, high and low! Isn’t it strange that the blood should flow, in all directions, including the sky, like water flooding low-lying areas?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போழ்து பகற்காலம் கழிந்த; மெலிந்த அந்திப் பொழுதான; புன் செக்கரில் மாலையிலே; வான் திசை ஆகாசமும் திக்குகளும்; சூழும் எழுந்து சூழக் கிளம்பி எழுந்து; உதிரப் புனலா ரத்த வெள்ளமாகும்படி; அப்பன் நரசிம்ம மூர்த்தியான பெருமான்; ஆழ் துயர் அளவிறந்த துன்பத்தை; செய்து விளைவித்த; அசுரரை இரணியனை; கொல்லுமாறே! கொன்ற விதம்; மலை கீழ்து மலை கீழே இருக்கும்படி தான்; பிளந்த மேலே இருந்துகொண்டு மலையைப் பிளந்த; சிங்கம் சிங்கத்தின் செயலை; ஒத்ததால் ஒத்திருந்தது
pun young; sekkaril reddish, during dusk; vān sky; thisai directions; sūzhum surrounded; ezhundhu rise; udhirap punal pool of blood; ā to create; appan emperumān in the form of narasimha, who helps his followers; āzh thuyar great sorrow; seydhu caused; asurarai hiraṇya, the demon; kollum killing; āṛu method; malai mountain; kīzhdhu to put down; pil̤andha tore; singam lion; oththadhu similar; māṛu facing each other; niraiththu being organised

TVM 7.4.7

3492 மாறுநிரைத்து இரைக்கும்சரங்கள் * இன
நூறுபிணம் மலைபோல்புரள * கடல்
ஆறுமடுத்து உதிரப்புனலா * அப்பன்
நீறுபட இலங்கைசெற்றநேரே.
3492 மாறு நிரைத்து * இரைக்கும் சரங்கள் * இன
நூறு பிணம் * மலைபோல் புரள ** கடல்
ஆறு மடுத்து * உதிரப் புனலா * அப்பன்
நீறு பட * இலங்கை செற்ற நேரே (7)
3492 māṟu niraittu * iraikkum caraṅkal̤ * iṉa
nūṟu piṇam * malaipol pural̤a ** kaṭal
āṟu maṭuttu * utirap puṉalā * appaṉ
nīṟu paṭa * ilaṅkai cĕṟṟa nere (7)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Hundreds of corpses of the Rākṣasas were felled down like huge mountains by noisy arrows darting in succession. The ocean filled with blood, overflowing into the rivers, this is how the great Sire Rāma burned down Laṅkā.

Explanatory Notes

Oh, what a grand imagery! The blood of the Rākṣasas, rolling down dead in large numbers, fills the ocean and overflows into the rivers pushing the waters back. Lord Rāma’s arrows reduced Rāvaṇa’s Laṅka to ashes, a veritable grave-yard. The arrows sped in different directions, clashing with each other, roaring like the sea.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அப்பன் ஸ்வாமியான ராமபிரான்; இலங்கை நீறு பட இலங்கை சாம்பலாகும்படி; செற்ற நேரே அழித்த நேர்மை; மாறு நிரைத்து எதிர் எதிராக மோதி; இரைக்கும் சரங்கள் ஒலிக்கும் பாணங்களாலே; இன நூறு இனம் இனமாக நூற்றுக்கணக்கான; பிணம் பிணங்கள்; மலை போல் புரள மலைகள்போல் புரண்டு விழவும்; கடல் கடல் ரத்தத்தால் நிறைந்து ஆறுகளில் புக; ஆறு மடுத்து அதனால் ஆறுகள்; உதிரப் புனலா ரத்த வெள்ளமாயின
iraikkum making sound; sarangal̤ by the arrows; inam in groups; nūṛu hundreds and hundreds of; piṇam dead bodies of the rākshasas; malai pŏl like a mountain; pural̤a to fall; āṛu through the rivers; maduththu being filled; kadal ocean; udhirap punal flood of blood; ā to become; appan chakravarthith thirumagan (ṣrī rāma, divine son of the emperor dhaṣaratha), who is the benefactor of his followers; ilangai lankā; nīṛu pada to become ashes; seṝa fought; nĕr honesty; appan krishṇa who helped anirudhdha [krishṇa-s grandson]; nĕr sari sided

TVM 7.4.8

3493 நேர்சரிந்தான் கொடிக்கோழிகொண்டான் * பின்னும்
நேர்சரிந்தான் எரியுமனலோன் * பின்னும்
நேர்சரிந்தான் முக்கண்மூர்த்திகண்டீர் * அப்பன்
நேர்சரிவாணன் திண்தோள்கொண்டவன்றே.
3493 நேர்சரிந்தான் * கொடிக் கோழி கொண்டான் * பின்னும்
நேர்சரிந்தான் * எரியும் அனலோன் ** பின்னும்
நேர்சரிந்தான் * முக்கண் மூர்த்தி கண்டீர் * அப்பன்
நேர்சரி வாணன் * திண்தோள் கொண்ட அன்றே (8)
3493 nercarintāṉ * kŏṭik kozhi kŏṇṭāṉ * piṉṉum
nercarintāṉ * ĕriyum aṉaloṉ ** piṉṉum
nercarintāṉ * mukkaṇ mūrtti kaṇṭīr * appaṉ
nercari vāṇaṉ * tiṇtol̤ kŏṇṭa aṉṟe (8)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

When my Sire, Krishna, chopped off the mighty arms of the retreating vāṇaṉ with the peacock banner, he had to give way, as did the radiant one (Agni). The triple-eyed Rudra also beat a retreat in a similar manner.

Explanatory Notes

Kṛṣṇa’s encounter with Vāṇaṉ (Bāṇāsura) and his allies has already been set out, in detail, in the notes under III-10-4. Subrahmaṇya, Son of Śiva, is referred to here as the one with peacock banner. Agni, the fire-god, flaunted all his forty-nine facets, in vain; he had to cut a sorry figure, like his compatriots, before Lord Kṛṣṇā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அப்பன் என் தந்தையான கண்ணன்; நேர்சரி எதிரிட்டு வந்து தோற்ற; வாணன் பாணாசுரனின்; திண்தோள் கொண்ட வலிய தோள்களை அழித்த; அன்றே! அன்றே; கோழி கொடி மயில் கொடி உடைய; கொண்டான் முருகன்; நேர்சரிந்தான் தோற்று ஓடினான்; பின்னும் மேலும்; எரியும் எரிகின்ற; அனலோன் அக்னி தேவனும்; நேர்சரிந்தான் தோற்றான்; பின்னும் மேலும்; முக்கண் மூர்த்தி முக்கண்ணனான சிவனும்; நேர்சரிந்தான் கண்டீர் தோற்றான் என்றபடி
vāṇan bāṇa-s; thiṇ strong as a result of the boon etc; thŏl̤ shoulders; koṇda won over; aṇru on that day; kŏzhi peacock; kodi as flag; koṇdān subrahmaṇya, who has; nĕr sarindhān fell down, unable to resist;; pinnum further,; eriyum with rising flame (having the cruelty of rudhra); analŏn agni (fire); nĕr sarindhān fell down, unable to resist;; pinnum further,; mukkaṇ having great power due to having three eyes; mūrththi rudhra, the chief among dhĕvathās; nĕr serindhān ran away from the battlefield;; kaṇdīr see [it is well known]!; appan the great benefactor, who is the creator of the universe; mudhal initially

TVM 7.4.9

3494 அன்றுமண்நீரெரிகால் விண்மலைமுதல் *
அன்றுசுடர்இரண்டும்பிறவும் * பின்னும்
அன்றுமழையுயிர்தேவும்மற்றும் * அப்பன்
அன்றுமுதல் உலகம்செய்ததுமே.
3494 அன்று மண் நீர் எரி கால் * விண் மலை முதல் *
அன்று சுடர் * இரண்டு பிறவும் ** பின்னும்
அன்று மழை * உயிர் தேவும் மற்றும் * அப்பன்
அன்று முதல் * உலகம் செய்ததுமே (9)
3494 aṉṟu maṇ nīr ĕri kāl * viṇ malai mutal *
aṉṟu cuṭar * iraṇṭu piṟavum ** piṉṉum
aṉṟu mazhai * uyir tevum maṟṟum * appaṉ
aṉṟu mutal * ulakam cĕytatume (9)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

When the Lord first created the worlds, the five elements, the mountains, and other things were brought forth. At the same moment, the Sun, Moon, and Stars appeared. The clouds that shower rain and sustain life, along with all things still and mobile, and the minor deities, came into existence. Oh, what a marvel!

Explanatory Notes

This song could refer either to the initial creation of the worlds with their diverse contents as one of His great achievements or be treated as a follow-up of the preceding song, dealing with the subjugation of Bāṇāsura by Lord Kṛṣṇa. The Lord’s creation became worth its while, only when He subdued Bāṇāsura and quelled his hauteur galore, cropprotection does indeed form an integral part of crop-cultivation.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அப்பன் எம்பெருமான்; அன்று படைப்பு காலத்தில்; மண் நீர் எரி பூமியும் நீரும் நெருப்பும்; கால் விண் காற்றும் ஆகாயமும்; மலை முதல் மலைகள் முதலானவற்றையும்; செய்ததுமே! படைத்ததுமே; அன்று சுடர் இரண்டும் சந்திரன் சூர்யர்களையும்; பிறவும் மற்றுமுள்ள நக்ஷத்திரங்களையும்; பின்னும் அக்காலத்திலேயே படைத்தான்; அன்று மழை மழையையும்; உயிர் உயிரினங்களையும்; தேவும் தேவர்களையும் மற்றுமுள்ள; மற்றும் அனைத்துப் பொருள்களையும் படைத்தான்
ulagam universe; seydhadhum created; anṛu during that initial creation; maṇ nīr eri kāl viṇ the five elements starting with earth etc which are the causes; malai mudhal the mountains etc which are worldly objects; seydhadhum created; anṛu during that time; sudar moon and sun; iraṇdu both; piṛavum other radiant objects; seydhadhum created; anṛu during that time; pinnum further; mazhai rain; uyir creatures which depend on the rain; dhĕvum the dhĕvas who grant the rain; maṝum other creatures; seydhadhum created; anṛu during that time; mĕy graśing; nirai cows

TVM 7.4.10

3495 மேய்நிரைகீழ்புக மாபுரள * சுனை
வாய்நிறைநீர் பிளிறிச்சொரிய * இன
ஆநிரைபாடி அங்கேயொடுங்க * அப்பன்
தீமழைகாத்துக் குன்றமெடுத்தானே.
3495 மேய் நிரை கீழ் புக * மா புரள * சுனை
வாய் நிறை நீர் * பிளிறிச் சொரிய ** இன
ஆ நிரைபாடி * அங்கே ஒடுங்க * அப்பன்
தீ மழை காத்துக் * குன்றம் எடுத்தானே (10)
3495 mey nirai kīzh puka * mā pural̤a * cuṉai
vāy niṟai nīr * pil̤iṟic cŏriya ** iṉa
ā niraipāṭi * aṅke ŏṭuṅka * appaṉ
tī mazhai kāttuk * kuṉṟam ĕṭuttāṉe (10)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

When my Sire, Krishna, held up the mountain like an umbrella and warded off Indra's destructive rain, the entire fertile town of Āyppāṭi remained protected. The grazing cattle simply moved aside and continued, the beasts tumbled as the mountain was held upside down, and water from the tanks, full to the brim, came gushing down.

Explanatory Notes

Here is a short and sweet picture, graphic enough, of Lord Kṛṣṇa’s mountain-lifting to protect a whole township and its cattle from the fury of Indra, which visited on them through a heavy down-pour of revengeful rains for a whole week. While the cattle grazed on undisturbed, moving a little down on the mountain slopes, the wild animals, caught unawares, tumbled down, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேய் நிரை மேய்கிற பசுக்கள்; கீழ் புக மலையின் கீழே ஒதுங்கின; மா கீழது மேலதாக மலையைப் பிடிக்க; புரள விலங்குகள் புரண்டு விழுந்தன; சுனைவாய் சுனைகளின் வாயளவு; நிறை நீர் நிறைந்த நீரானது; பிளிறி சொரிய பெரிய ஆரவாரத்தோடு சொரிய; இன ஆ நிரை பாடி ஆயர்ப்பாடியானது; அங்கே ஒடுங்க அங்கே ஒடுங்க வசதியாக இருந்தது; அப்பன் எம்பெருமான்; தீ மழை கொடிய மழையிலிருந்து; காத்து பசுக்களையும் மக்களையும் காக்க; குன்றம் கோவர்த்தன மலையை; எடுத்தானே! குடையாக எடுத்த எம்பெருமானே!
kīzh underneath; puga to take shelter; the animals residing on the hill; pural̤a to roll down and fall; sunai ponds-; vāy up to the top; niṛai filled; nīr water; pil̤iṛi with tumultuous sound; soriya to pour; inam groups of; āy nirai having cowherds and cows; pādi thiruvāyppādi (gŏkulam); angĕ there; odunga to take shelter; appan krishṇa, who eliminates danger; thī causing disaster; mazhai rain; kāththu stopped; kunṛam gŏvardhana hill; eduththān lifted up; kunṛam eduththa one who lifted gŏvardhana; pirān for krishṇa, the great benefactor

TVM 7.4.11

3496 குன்றமெடுத்தபிரான் அடியாரொடும் *
ஒன்றிநின்ற சடகோபனுரைசெயல் *
நன்றிபுனைந்த ஓராயிரத்துள்ளிவை *
வென்றிதரும்பத்தும் மேவிக்கற்பார்க்கே. (2)
3496 ## குன்றம் எடுத்த பிரான் * அடியாரொடும் *
ஒன்றி நின்ற * சடகோபன் உரைசெயல் **
நன்றி புனைந்த * ஓர் ஆயிரத்துள் இவை *
வென்றி தரும் பத்தும் * மேவிக் கற்பார்க்கே (11)
3496 ## kuṉṟam ĕṭutta pirāṉ * aṭiyārŏṭum *
ŏṉṟi niṉṟa * caṭakopaṉ uraicĕyal **
naṉṟi puṉainta * or āyirattul̤ ivai *
vĕṉṟi tarum pattum * mevik kaṟpārkke (11)

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Success in many ways will these ten beneficent songs confer on those who learn them, out of the thousand composed by Caṭakōpaṉ, who adhered to the devotees of the great Benefactor, the One who held Mount Govardhan aloft.

Explanatory Notes

The Āzhvār feels as if he is one of those who took shelter under mount Govardan, when Lord Kṛṣṇa held it aloft. It could also be interpreted as his joining the rank and file of the Śrī Vaiṣṇavas, who have sought refuge at the Lord’s feet, scared of the worldly life, like unto those in the pastoral village, who took shelter under Govardan. As Nampiḷḷai puts it, the Āzhvār + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குன்றம் கோவர்த்தன மலையை; எடுத்த குடையாக எடுத்த; பிரான் கண்ணனின் குணங்களில் ஈடுபட்டிருந்த; அடியாரொடும் அடியார்களோடு; ஒன்றி நின்ற கூடி நின்று; சடகோபன் நம்மாழ்வாராலே; நன்றி எம்பெருமானின் பெருமைகளை; புனைந்த ஒப்பற்ற பாடல்களாக; உரை செயல் அருளிச்செய்யப்பட்ட; ஓர் ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; இவை பத்தும் இவை பத்தும்; மேவி கற்பார்க்கே விரும்பிக் கற்பவர்களுக்கு; வென்றி தரும் வெற்றியைக் கொடுக்கும்
adiyārodum bhāgavathas who are distinguished servitors; onṛi united; ninṛa having the nature; satakŏpan āzhvār-s; urai seyal the act through speech; ŏr unique; āyiraththul̤ among the thousand pāsurams; nanṛi the goodness of revealing the victories of sarvĕṣvaran; punaindha having; ivai paththum this decad; mĕvi with the meanings; kaṛpārkku those who practice; venṛi victory in every aspect; tharum will grant.; sprouted and spread; pul grass