Chapter 5

Āzhvār is feeling sorry for people of this world who are missing out on the joy of experiencing the qualities of the Lord through his Avatārs - (கற்பார் இராம)

எம்பெருமானது விபவ அவதார குணங்களை அனுபவித்து ஆளாகாத உலகத்தாரை நோக்கி இரங்குதல்
As Āzhvār enjoys elaborating on the triumphant deeds and some of His sagas, “Instead of being immersed in experiencing Bhagavān’s auspicious traits, people of this world are whiling away their time engrossed in other unwanted things! Is this possible/acceptable?” says an appalled Āzhvār who expresses his melancholy in these hymns.
பகவானின் வெற்றிச் செயல்களையும், மற்றும் சில சரித்திரங்களையும் பேசி அனுபவித்த ஆழ்வார், “பகவானின் கல்யாண குணங்களை அனுபவியாமல் மக்கள் வேறு செயல்களில் மனத்தைச் செலுத்தி வீண்பொழுது போக்குகிறார்களே! இப்படியும் இருக்கலாமா?” என்று வியந்து மனம் நொந்துப் பேசுகிறார் இப்பகுதியில்.

ஏழாம் பத்து + Read more
Verses: 3497 to 3507
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டராகம்
Timing: 12.00- 1.12 PM
Recital benefits: will become devotees with faultless minds
  • TVM 7.5.1
    3497 ## கற்பார் இராம பிரானை அல்லால் * மற்றும் கற்பரோ? *
    புல் பா முதலா * புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே **
    நல் பால் அயோத்தியில் வாழும் * சராசரம் முற்றவும்
    நல் பாலுக்கு உய்த்தனன் * நான்முகனார் பெற்ற நாட்டுளே? (1)
  • TVM 7.5.2
    3498 நாட்டில் பிறந்தவர் * நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ *
    நாட்டில் பிறந்து படாதன பட்டு * மனிசர்க்கா **
    நாட்டை நலியும் அரக்கரை * நாடித் தடிந்திட்டு *
    நாட்டை அளித்து உய்யச் செய்து * நடந்தமை கேட்டுமே? (2)
  • TVM 7.5.3
    3499 கேட்பார்கள் கேசவன் கீர்த்தி அல்லால் * மற்றும் கேட்பரோ *
    கேட்பார் செவி சுடு * கீழ்மை வசைவுகளே வையும் **
    சேண்பால் பழம் பகைவன் * சிசுபாலன் * திருவடி
    தாள் பால் அடைந்த * தன்மை அறிவாரை அறிந்துமே? (3)
  • TVM 7.5.4
    3500 தன்மை அறிபவர் * தாம் அவற்கு ஆள் அன்றி ஆவரோ *
    பன்மைப் படர் பொருள் * ஆதும் இல் பாழ் நெடும் காலத்து **
    நன்மைப் புனல் பண்ணி * நான்முகனைப் பண்ணி தன்னுள்ளே *
    தொன்மை மயக்கிய தோற்றிய * சூழல்கள் சிந்தித்தே? (4)
  • TVM 7.5.5
    3501 சூழல்கள் சிந்திக்கில் * மாயன் கழல் அன்றிச் சூழ்வரோ *
    ஆழப் பெரும் புனல் * தன்னுள் அழுந்திய ஞாலத்தை **
    தாழப் படாமல் * தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்ட *
    கேழல் திரு உரு ஆயிற்றுக் * கேட்டும் உணர்ந்துமே? (5)
  • TVM 7.5.6
    3502 கேட்டும் உணர்ந்தவர் * கேசவற்கு ஆள் அன்றி ஆவரோ *
    வாட்டம் இலா வண் கை * மாவலி வாதிக்க வாதிப்புண்டு **
    ஈட்டம் கொள் தேவர்கள் * சென்று இரந்தார்க்கு இடர் நீக்கிய *
    கோட்டு அங்கை வாமனன் ஆய்ச் * செய்த கூத்துக்கள் கண்டுமே? (6)
  • TVM 7.5.7
    3503 கண்டும் தெளிந்தும் கற்றார் * கண்ணற்கு ஆள் அன்றி ஆவரோ *
    வண்டு உண் மலர்த் தொங்கல் * மார்க்கண்டேயனுக்கு வாழும் நாள் **
    இண்டைச் சடைமுடி * ஈசன் உடன்கொண்டு உசாச் செல்ல *
    கொண்டு அங்குத் தன்னொடும் கொண்டு * உடன் சென்றது உணர்ந்துமே? (7)
  • TVM 7.5.8
    3504 செல்ல உணர்ந்தவர் * செல்வன் தன் சீர் அன்றிக் கற்பரோ *
    எல்லை இலாத பெரும் தவத்தால் * பல செய் மிறை **
    அல்லல் அமரரைச் செய்யும் * இரணியன் ஆகத்தை *
    மல்லல் அரி உரு ஆய்ச் * செய்த மாயம் அறிந்துமே? (8)
  • TVM 7.5.9
    3505 மாயம் அறிபவர் * மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ *
    தாயம் செறும் ஒரு நூற்றுவர் மங்க * ஓர் ஐவர்க்கு ஆய் **
    தேசம் அறிய ஓர் சாரதியாய்ச் சென்று * சேனையை
    நாசம் செய்திட்டு * நடந்த நல் வார்த்தை அறிந்துமே? (9)
  • TVM 7.5.10
    3506 வார்த்தை அறிபவர் * மாயவற்கு ஆள் அன்றி ஆவரோ *
    போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடு * இறப்பு இவை
    பேர்த்து ** பெரும் துன்பம் வேர் அற நீக்கித் * தன் தாளின் கீழ்ச்
    சேர்த்து * அவன் செய்யும் * சேமத்தை எண்ணித் தெளிவுற்றே? (10)
  • TVM 7.5.11
    3507 ## தெளிவுற்று வீவு இன்றி * நின்றவர்க்கு இன்பக் கதி செய்யும் *
    தெளிவுற்ற கண்ணனைத் * தென் குருகூர்ச் சடகோபன் சொல் **
    தெளிவுற்ற ஆயிரத்துள் * இவை பத்தும் வல்லார் அவர் *
    தெளிவுற்ற சிந்தையர் * பா மரு மூவுலகத்துள்ளே (11)