Chapter 9
The supremacy of praising the Lord instead of the wordly people - (சொன்னால் விரோதம்)
மானிடரைப் பாடாது மாதவனை ஏத்தும் எனல்
“One should praise Bhagavān alone. One should sing His praises alone. Instead of doing so, would anyone praise a mortal being? What is the use of doing this? Shouldn’t one exercise Bhagavān’s benevolence of bestowing us with knowledge, the ability to be articulate etcetera in servitude to Him?” says a puzzled Āzhvār.
பகவானையே புகழவேண்டும் அவனுடைய குணங்களையே கூறவேண்டும். இவற்றை விட்டு மனிதனைப் பாடுவார்களா? இவ்வாறு செய்வதால் என்ன பயன்? பகவான் கொடுத்த ஞானம், நாவன்மை ஆகியவற்றை அவனுக்கே பயன்படுத்த வேண்டாமா? என்கிறார் ஆழ்வார்.
மூன்றாம் பத்து -ஒன்பதாம் திருவாய்மொழி – ‘சொன்னால் விரோதம்’-பிரவேசம் –
இப்படித் + Read more
Verses: 3101 to 3111
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: முதிர்ந்த குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: will not be born again in this world
- TVM 3.9.1
3101 ## சொன்னால் விரோதம் இது * ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ *
என் நாவில் இன் கவி * யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன் **
தென்னா தெனா என்று * வண்டு முரல் திருவேங்கடத்து *
என் ஆனை என் அப்பன் * எம் பெருமான் உளனாகவே (1) - TVM 3.9.2
3102 உளனாகவே எண்ணித் * தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை *
வளனா மதிக்கும் * இம் மானிடத்தைக் கவி பாடி என் **
குளன் ஆர் கழனி சூழ் * கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே *
உளனாய எந்தையை * எந்தை பெம்மானை ஒழியவே? (2) - TVM 3.9.3
3103 ஒழிவு ஒன்று இல்லாத * பல் ஊழிதோறு ஊழி நிலாவப் * போம்
வழியைத் தரும் * நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய் **
கழிய மிக நல்லவான் * கவி கொண்டு புலவீர்காள்! *
இழியக் கருதி * ஓர் மானிடம் பாடல் என் ஆவதே? (3) - TVM 3.9.4
3104 என் ஆவது? எத்தனை நாளைக்குப் போதும் * புலவீர்காள்! *
மன்னா மனிசரைப் * பாடிப் படைக்கும் பெரும் பொருள்? **
மின் ஆர் மணி முடி * விண்ணவர் தாதையைப் பாடினால் *
தன்னாகவே கொண்டு * சன்மம் செய்யாமை(யும்) கொள்ளுமே (4) - TVM 3.9.5
3105 கொள்ளும் பயன் இல்லைக் * குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை *
வள்ளல் புகழ்ந்து * நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்! **
கொள்ளக் குறைவு * இலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோது இல் **
என் வள்ளல் மணிவண்ணன் தன்னைக் * கவி சொல்ல வம்மினோ (5) - TVM 3.9.6
3106 வம்மின் புலவீர்! * நும் மெய் வருத்திக் கைசெய்து உய்ம்மினோ *
இம் மன் உலகினில் * செல்வர் இப்போது இல்லை நோக்கினோம் **
நும் இன் கவி கொண்டு * நும் நும் இட்டா தெய்வம் ஏத்தினால் *
செம் மின் சுடர் முடி * என் திருமாலுக்குச் சேருமே (6) - TVM 3.9.7
3107 சேரும் கொடை புகழ் * எல்லை இலானை * ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால் * மற்று யான் கிலேன் **
மாரி அனைய கை * மால் வரை ஒக்கும் திண் தோள் என்று *
பாரில் ஓர் பற்றையைப் * பச்சைப் பசும் பொய்கள் பேசவே (7) - TVM 3.9.8
3108 வேயின் மலிபுரை * தோளி பின்னைக்கு மணாளனை *
ஆய பெரும் புகழ் * எல்லை இலாதன பாடிப்போய் **
காயம் கழித்து * அவன் தாள் இணைக்கீழ்ப் புகும் காதலன் *
மாய மனிசரை * என் சொல்ல வல்லேன் என் வாய்கொண்டே? (8) - TVM 3.9.9
3109 வாய்கொண்டு மானிடம் பாட வந்த * கவியேன் அல்லேன் *
ஆய்கொண்ட சீர் வள்ளல் * ஆழிப் பிரான் எனக்கே உளன் **
சாய் கொண்ட இம்மையும் சாதித்து * வானவர் நாட்டையும் *
நீ கண்டுகொள் என்று * வீடும் தரும் நின்றுநின்றே (9) - TVM 3.9.10
3110 நின்றுநின்று பல நாள் உய்க்கும் * இவ் உடல் நீங்கிப்போய் *
சென்று சென்று ஆகிலும் கண்டு * சன்மம் கழிப்பான் எண்ணி **
ஒன்றிஒன்றி உலகம் படைத்தான் * கவி ஆயினேற்கு *
என்றும் என்றும் இனி * மற்றொருவர் கவி ஏற்குமே? (10) - TVM 3.9.11
3111 ## ஏற்கும் பெரும் புகழ் * வானவர் ஈசன் கண்ணன் தனக்கு *
ஏற்கும் பெரும் புகழ் * வண் குருகூர்ச் சடகோபன் சொல் **
ஏற்கும் பெரும் புகழ் * ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து *
ஏற்கும் பெரும் புகழ் * சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே (11)