Chapter 3

Gopikās beseech Sri Krishna to shirk His shepherding duty - (வேய் மரு)

ஆநிரை மேய்க்கச் செல்லுதலைத் தவிர்க்குமாறு ஆய்ச்சியர் கண்ணனை வேண்டல்
This segment of the Thiruvāymozhi is called ‘kālaip poochal’ meaning suffering/anguish in the morning.

Āzhvār wished to visit and perform servitude to emperumān in Thiruvananthapuram. But, he became distraught when he was unable to do so right that minute. Āzhvār was terrified that emperumān might make him stay put.

Just like how the gopikās + Read more
இத்திருவாய்மொழி காலைப்பூசல்.

ஆழ்வார் திருவனந்தபுரம் சென்று எம்பெருமானுக்கு அடிமை செய்யப் பாரித்தார். ஆனால், அப்போதே அவ்விடம் சென்று அடிமை செய்யமுடியாமையால் கலங்கினார்; எம்பெருமான், தம்மை இங்கேயே இருக்கச் செய்துவிடுவானோ என்று ஐயுற்றார்.

இடைப் பெண்களுக்குக் கண்ணபிரான்மீது ஓர் + Read more
Verses: 3805 to 3815
Grammar: Eṇcīrk Kaḻinediladi Āsiriya Viruththam / எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பஞ்சமம்
Timing: 4.49-6.00 PM
  • TVM 10.3.1
    3805 ## வேய் மரு தோள் இணை மெலியும் ஆலோ! *
    மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக் *
    காமரு குயில்களும் கூவும் ஆலோ! *
    கண மயில் அவை கலந்து ஆலும் ஆலோ! **
    ஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்கு *
    ஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோ! *
    தாமரைக் கண்கள்கொண்டு ஈர்தி ஆலோ! *
    தகவிலை தகவிலையே நீ கண்ணா (1)
  • TVM 10.3.2
    3806 தகவிலை தகவிலையே நீ கண்ணா! *
    தட முலை புணர்தொறும் புணர்ச்சிக்கு ஆரா *
    சுகவெள்ளம் விசும்பு இறந்து அறிவை மூழ்க்கச்
    சூழ்ந்து * அது கனவு என நீங்கி ஆங்கே **
    அக உயிர் அகம் அகம்தோறும் உள் புக்கு *
    ஆவியின் பரம் அல்ல வேட்கை அந்தோ *
    மிக மிக இனி உன்னைப் பிரிவை ஆமால் *
    வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே (2)
  • TVM 10.3.3
    3807 வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு *
    வெவ்வுயிர் கொண்டு எனது ஆவி வேமால் *
    யாவரும் துணை இல்லை யான் இருந்து
    உன் * அஞ்சன மேனியை ஆட்டம் காணேன் **
    போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால் *
    பொரு கயல் கண் இணை நீரும் நில்லா *
    சாவது இவ் ஆய்க்குலத்து ஆய்ச்சியோமாய்ப் * பிறந்த
    இத் தொழுத்தையோம் தனிமை தானே (3)
  • TVM 10.3.4
    3808 தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்
    துயரமும் * நினைகிலை கோவிந்தா * நின்
    தொழுத்தனில் பசுக்களையே விரும்பித் *
    துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி **
    பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம் *
    பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு *
    அழுத்த நின் செங்கனி வாயின் கள்வப் பணிமொழி *
    நினைதொறும் ஆவி வேமால் (4)
  • TVM 10.3.5
    3809 பணிமொழி நினைதொறும் ஆவி வேமால் *
    பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா *
    பிணி அவிழ் மல்லிகை வாடை தூவப் *
    பெரு மத மாலையும் வந்தின்று ஆலோ! **
    மணி மிகு மார்பினில் முல்லைப்போது * என்
    வன முலை கமழ்வித்து உன் வாய் அமுதம் தந்து *
    அணி மிகு தாமரைக் கையை அந்தோ! *
    அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் (5)
  • TVM 10.3.6
    3810 அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய் *
    ஆழி அம் கண்ணா உன் கோலப் பாதம் *
    பிடித்து அது நடுவு உனக்கு அரிவையரும் பலர்
    அது நிற்க எம் பெண்மை ஆற்றோம் **
    வடித்தடம் கண் இணை நீரும் நில்லா *
    மனமும் நில்லா எமக்கு அது தன்னாலே *
    வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு *
    வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே (6)
  • TVM 10.3.7
    3811 வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கு *
    வெள் வளை மேகலை கழன்று வீழ *
    தூ மலர்க் கண் இணை முத்தம் சோரத் *
    துணை முலை பயந்து என தோள்கள் வாட **
    மா மணி வண்ணா உன் செங்கமல வண்ண *
    மெல் மலர் அடி நோவ நீ போய் *
    ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு *
    அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கே? (7)
  • TVM 10.3.8
    3812 அசுரர்கள் தலைப்பெய்யில் எவன்கொல் ஆங்கு? என்று *
    ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகேல் *
    கசிகையும் வேட்கையும் உள்கலந்து *
    கலவியும் நலியும் என் கைகழியேல் **
    வசிசெய் உன் தாமரைக் கண்ணும் வாயும் *
    கைகளும் பீதக உடையும் காட்டி *
    ஒசிசெய் நுண் இடை இள ஆய்ச்சியர் *
    நீ உகக்கும் நல்லவரொடும் உழிதராயே (8)
  • TVM 10.3.9
    3813 உகக்கும் நல்லவரொடும் உழிதந்து *
    உன் தன் திருவுள்ளம் இடர் கெடும்தோறும் * நாங்கள்
    வியக்க இன்புறுதும் எம் பெண்மை ஆற்றோம் *
    எம் பெருமான் பசு மேய்க்கப் போகேல் **
    மிகப் பல அசுரர்கள் வேண்டு உருவம் கொண்டு *
    நின்று உழிதருவர் கஞ்சன் ஏவ *
    அகப்படில் அவரொடும் நின்னொடு ஆங்கே *
    அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ (9)
  • TVM 10.3.10
    3814 அவத்தங்கள் விளையும் என் சொல் கொள் அந்தோ! *
    அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ *
    தவத்தவர் மறுக நின்று உழிதருவர் *
    தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
    உவர்த்தலை ** உடன் திரிகிலையும் என்று என்று
    ஊடுற * என்னுடை ஆவி வேமால் *
    திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி *
    செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே (10)
  • TVM 10.3.11
    3815 ## செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு * அத்
    திருவடி திருவடிமேல் * பொருநல்
    சங்கு அணி துறைவன் வண் தென் குருகூர் *
    வண் சடகோபன் சொல் ஆயிரத்துள் **
    மங்கையர் ஆய்ச்சியர் ஆய்ந்த மாலை *
    அவனொடும் பிரிவதற்கு இரங்கி * தையல்
    அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
    உரைத்தன * இவையும் பத்து அவற்றின் சார்வே (11)