Highlights from Nampiḷḷai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai
ஸ்ரீ ஆறாயிரப்படி –10-3-1-
வேய் மரு தோளிணை மெலியும் ஆலோமெலிவும் என் தனிமையும் யாதும் நோக்காக்காமரு குயில்களும் கூவும் ஆலோகண மயில் அவை கலந்து ஆலும் ஆலோஆ மருவு இன நிரை மேய்க்க நீ போக்குஒரு பகல் ஆயிரம் ஊழி ஆலோதாமரைக் கண்கள் கொண்டு ஈர்தி ஆலோதகவிலை தகவிலையே நீ கண்ணா–10-3-1-
உன்னைப் பிரிகையாலே என்னுடைய தோள்கள் மெலியா நின்றன –இவற்றின் மெலிவும் என் தனிமையும் ஒன்றும் பாராதே