Chapter 4

Āzhvār describes how his devotion came to fruition - (சார்வே தவநெறிக்கு)

தமது பக்தி பலித்தமையை ஆழ்வார் அருளிச்செய்தல்
“Krishnā! We don’t want you to shepherd the grazing cows” requests the gopikās. Emperumān responds, “If that is the case, then I will forsake this job”. Compassion, an auspicious trait of emperumān, is elaborated in Āzhvār’s hymns.
"கண்ணா! நீ பசு நிரை மேய்க்கப் போகேல்" என்றார்கள் இடைப் பெண்கள். "அப்படியாகில் இனி இத்தொழிலை விட்டேன்" என்றானாம் எம்பெருமான். அப்படிப்பட்ட குணத்தில் ஈடுபட்ட ஆழ்வார் கனிவுடன் பாடியுள்ளார்.

பத்தாம் பத்து -நான்காம் திருவாய் மொழி -சார்வே -பிரவேசம் –

தம்மைப் பிரிய நினைவு இன்றிக்கே + Read more
Verses: 3816 to 3826
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: கொல்லி
Timing: 10.30 PM - 12.00 AM
Recital benefits: will reach Kannan’s ankleted feet
  • TVM 10.4.1
    3816 ## சார்வே தவநெறிக்குத் * தாமோதரன் தாள்கள் *
    கார் மேக வண்ணன் * கமல நயனத்தன் **
    நீர் வானம் மண் எரி கால் ஆய் * நின்ற நேமியான் *
    பேர் வானவர்கள் * பிதற்றும் பெருமையனே (1)
  • TVM 10.4.2
    3817 பெருமையனே வானத்து இமையோர்க்கும் * காண்டற்கு
    அருமையனே * ஆகத்து அணையாதார்க்கு * என்றும்
    திரு மெய் உறைகின்ற * செங்கண் மால் * நாளும்
    இருமை வினை கடிந்து * இங்கு என்னை ஆள்கின்றானே (2)
  • TVM 10.4.3
    3818 ஆள்கின்றான் ஆழியான் * ஆரால் குறைவு உடையம்? *
    மீள்கின்றது இல்லைப் * பிறவித் துயர் கடிந்தோம் **
    வாள் கெண்டை ஒண்கண் * மடப் பின்னை தன் கேள்வன் *
    தாள் கண்டு கொண்டு * என் தலைமேல் புனைந்தேனே (3)
  • TVM 10.4.4
    3819 தலைமேல் புனைந்தேன் * சரணங்கள் * ஆலின்
    இலைமேல் துயின்றான் * இமையோர் வணங்க **
    மலைமேல் தான் நின்று * என் மனத்துள் இருந்தானை *
    நிலை பேர்க்கல் ஆகாமை * நிச்சித்து இருந்தேனே (4)
  • TVM 10.4.5
    3820 நிச்சித்து இருந்தேன் * என் நெஞ்சம் கழியாமை *
    கைச் சக்கரத்து அண்ணல் * கள்வம் பெரிது உடையன் **
    மெச்சப்படான் பிறர்க்கு * மெய் போலும் பொய் வல்லன் *
    நச்சப்படும் நமக்கு * நாகத்து அணையானே (5)
  • TVM 10.4.6
    3821 நாகத்து அணையானை * நாள்தோறும் ஞானத்தால் *
    ஆகத்து அணைப்பார்க்கு * அருள்செய்யும் அம்மானை **
    மாகத்து இள மதியம் * சேரும் சடையானை *
    பாகத்து வைத்தான் தன் * பாதம் பணிந்தேனே (6)
  • TVM 10.4.7
    3822 பணி நெஞ்சே நாளும் * பரம பரம்பரனை *
    பிணி ஒன்றும் சாரா * பிறவி கெடுத்து ஆளும் **
    மணி நின்ற சோதி * மதுசூதன் என் அம்மான் *
    அணி நின்ற செம்பொன் * அடல் ஆழியானே (7)
  • TVM 10.4.8
    3823 ஆழியான் ஆழி * அமரர்க்கும் அப்பாலான் *
    ஊழியான் ஊழி படைத்தான் * நிரை மேய்த்தான் **
    பாழி அம் தோளால் * வரை எடுத்தான் பாதங்கள் *
    வாழி என் நெஞ்சே! * மறவாது வாழ்கண்டாய் (8)
  • TVM 10.4.9
    3824 கண்டேன் கமல மலர்ப் பாதம் * காண்டலுமே *
    விண்டே ஒழிந்த * வினையாயின எல்லாம் **
    தொண்டே செய்து என்றும் * தொழுது வழியொழுக *
    பண்டே பரமன் பணித்த * பணிவகையே (9)
  • TVM 10.4.10
    3825 வகையால் மனம் ஒன்றி * மாதவனை * நாளும்
    புகையால் விளக்கால் * புது மலரால் நீரால் **
    திசைதோறு அமரர்கள் * சென்று இறைஞ்ச நின்ற *
    தகையான் சரணம் * தமர்கட்கு ஓர் பற்றே (10)
  • TVM 10.4.11
    3826 ## பற்று என்று பற்றி ப * ரம பரம்பரனை *
    மல் திண் தோள் மாலை * வழுதி வளநாடன் **
    சொல் தொடை அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
    கற்றார்க்கு ஓர் பற்றாகும் * கண்ணன் கழல் இணையே (11)