Chapter 2

Āzhvār proclaims to serve the Lord at Thiruvananthapuram - (கெடும் இடர்)

திருவனந்தபுரத்தில் தொண்டு செய்யலாம் எனல் (திருவனந்தபுரம்)
Āzhvār imagines Thiruvananthapuram as paramapadam (Sri Vaikuntam) and composes hymns for this segment of Thiruvāymozhi based on this divyadesam.
ஆழ்வார் திருவனந்தபுரத்தைப் பரமபதம்போல எண்ணி, அவ்விடத்தில் ஈடுபட்டுப் பாடுகிறார். இத்திருவாய்மொழி திருவனந்தபுரத்தைப் பற்றியது.

பத்தாம் பத்து -இரண்டாம் திருவாய் மொழி -கெடும் இடர் -பிரவேசம் —

ஒரு நல் சுற்றம் -என்ற -10-1-ஸ்ரீ பெரிய திரு மொழியிலே பல ஸ்ரீ திருப்பதிகளையும் அருளிச் + Read more
Verses: 3794 to 3804
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: will go to the world of the gods
  • TVM 10.2.1
    3794 ## கெடும் இடர் ஆய எல்லாம் * கேசவா என்ன * நாளும்
    கொடுவினை செய்யும் * கூற்றின் தமர்களும் குறுககில்லார் **
    விடம் உடை அரவில் பள்ளி * விரும்பினான் சுரும்பு அலற்றும் *
    தடம் உடை வயல் * அனந்தபுரநகர் புகுதும் இன்றே (1)
  • TVM 10.2.2
    3795 இன்று போய்ப் புகுதிராகில் * எழுமையும் ஏதம் சாரா *
    குன்று நேர் மாடம் மாடே * குருந்து சேர் செருந்தி புன்னை **
    மன்று அலர் பொழில் * அனந்தபுரநகர் மாயன் நாமம் *
    ஒன்றும் ஓர் ஆயிரமாம் * உள்ளுவார்க்கு உம்பர் ஊரே (2)
  • TVM 10.2.3
    3796 ஊரும் புள் கொடியும் அஃதே * உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் *
    சேரும் தண் அனந்தபுர * சிக்கெனப் புகுதிராகில் **
    தீரும் நோய் வினைகள் எல்லாம் * திண்ணம் நாம் அறியச் சொன்னோம் *
    பேரும் ஓர் ஆயிரத்துள் * ஒன்று நீர் பேசுமினே (3)
  • TVM 10.2.4
    3797 பேசுமின் கூசம் இன்றிப் * பெரிய நீர் வேலை சூழ்ந்து *
    வாசமே கமழும் சோலை * வயல் அணி அனந்தபுரம் **
    நேசம் செய்து உறைகின்றானை * நெறிமையால் மலர்கள் தூவி *
    பூசனை செய்கின்றார்கள் * புண்ணியம் செய்தவாறே (4)
  • TVM 10.2.5
    3798 புண்ணியம் செய்து * நல்ல புனலொடு மலர்கள் தூவி *
    எண்ணுமின் எந்தை நாமம் * இப் பிறப்பு அறுக்கும் அப்பால் **
    திண்ணம் நாம் அறியச் சொன்னோம் * செறி பொழில் அனந்தபுரத்து *
    அண்ணலார் கமல பாதம் * அணுகுவார் அமரர் ஆவார் (5)
  • TVM 10.2.6
    3799 அமரராய்த் திரிகின்றார்கட்கு * ஆதி சேர் அனந்தபுரத்து *
    அமரர் கோன் அர்ச்சிக்கின்று * அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் **
    நமர்களோ சொல்லக் கேள்மின் * நாமும் போய் நணுகவேண்டும் *
    குமரனார் தாதை * துன்பம் துடைத்த கோவிந்தனாரே (6)
  • TVM 10.2.7
    3800 துடைத்த கோவிந்தனாரே * உலகு உயிர் தேவும் மற்றும் *
    படைத்த எம் பரம மூர்த்தி * பாம்பு அணைப் பள்ளி கொண்டான் **
    மடைத்தலை வாளை பாயும் * வயல் அணி அனந்தபுரம் *
    கடைத்தலை சீய்க்கப்பெற்றால் * கடுவினை களையலாமே (7)
  • TVM 10.2.8
    3801 கடுவினை களையலாகும் * காமனைப் பயந்த காளை *
    இடவகை கொண்டது என்பர் * எழில் அணி அனந்தபுரம் **
    படம் உடை அரவில் பள்ளி * பயின்றவன் பாதம் காண *
    நடமினோ நமர்கள் உள்ளீர்! * நாம் உமக்கு அறியச் சொன்னோம். (8)
  • TVM 10.2.9
    3802 நாம் உமக்கு அறியச் சொன்ன * நாள்களும் நணிய ஆன *
    சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் * செறி பொழில் அனந்தபுரம் **
    தூமம் நல் விரை மலர்கள் * துவள் அற ஆய்ந்துகொண்டு *
    வாமனன் அடிக்கு என்று ஏத்த * மாய்ந்து அறும் வினைகள் தாமே. (9)
  • TVM 10.2.10
    3803 மாய்ந்து அறும் வினைகள் தாமே * மாதவா என்ன * நாளும்
    ஏய்ந்த பொன் மதிள் * அனந்தபுரநகர் எந்தைக்கு என்று **
    சாந்தொடு விளக்கம் தூபம் * தாமரை மலர்கள் நல்ல *
    ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் * அந்தம் இல் புகழினாரே (10)
  • TVM 10.2.11
    3804 ## அந்தம் இல் புகழ் * அனந்தபுரநகர் ஆதி தன்னை *
    கொந்து அலர் பொழில் * குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள் **
    ஐந்தினோடு ஐந்தும் வல்லார் * அணைவர் போய் அமர் உலகில் *
    பைந்தொடி மடந்தையர் தம் * வேய் மரு தோள் இணையே (11)