Chapter 11

She describes Lakshmi - (அன்னம் ஆய்)

பார்வதி லட்சுமியை விவரிக்கிறார்
Verses: 2756 to 2763
Grammar: Kaliveṇpā / கலிவெண்பா
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PTM 11.44

2756 அன்னமாய்மானாய் அணிமயிலாய்ஆங்கிடையே *
மின்னாய்இளவேயிரண்டாய் இணைச்செப்பாய் *
முன்னாயதொண்டையாய்க் கெண்டைகுலமிரண்டாய் *
அன்னதிருவுருவம் நின்றதறியாதே *
என்னுடையநெஞ்சும் அறிவும்இனவளையும் *
பொன்னியலும்மேகலையும் ஆங்கொழியப்போந்தேற்கு *
மன்னுமறிகடலுமார்க்கும் * மதியுகுத்த
இன்னிலாவின்கதிரும் என்தனக்கேவெய்தாகும் *
தன்னுடையதன்மை தவிரத்தானெங்கொலோ? *
2756 அன்னம் ஆய் மான் ஆய் அணி மயில் ஆய் ஆங்கு இடையே *
மின் ஆய் இள வேய் இரண்டு ஆய் இணைச் செப்பு ஆய் *
முன் ஆய தொண்டை ஆய் கெண்டைக் குலம் இரண்டு ஆய் *
அன்ன திரு உருவம் நின்றது அறியாதே *
என்னுடைய நெஞ்சும் அறிவும் இன வளையும் *
பொன் இயலும் மேகலையும் ஆங்கு ஒழியப் போந்தேற்கு *
மன்னு மறிகடலும் ஆர்க்கும் * மதி உகுத்த
இன் நிலாவின் கதிரும் என் தனக்கே வெய்து ஆகும் *
தன்னுடைய தன்மை தவிர தான் என்கொலோ? * 44
2756 aṉṉam āy māṉ āy aṇi mayil āy āṅku iṭaiye *
miṉ āy il̤a vey iraṇṭu āy iṇaic cĕppu āy *
muṉ āya tŏṇṭai āy kĕṇṭaik kulam iraṇṭu āy *
aṉṉa tiru uruvam niṉṟatu aṟiyāte *
ĕṉṉuṭaiya nĕñcum aṟivum iṉa val̤aiyum *
pŏṉ iyalum mekalaiyum āṅku ŏzhiyap ponteṟku *
maṉṉu maṟikaṭalum ārkkum * mati ukutta
iṉ nilāviṉ katirum ĕṉ taṉakke vĕytu ākum *
taṉṉuṭaiya taṉmai tavira tāṉ ĕṉkŏlo? * 44

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2756. Lakshmi his wife, like a beautiful young vanji creeper stays near him. Her walk is like a swan’s, her eyes are innocent like a doe’s, she is lovely as a peacock and shines like lightning. Her arms are like young bamboo, her breasts are like two pots, her mouth is red like a thondai fruit and her eyes are like two kendai fish. Divine, she stood near him but I did not see her as she stood there. She says, “My heart and my mind grew weak, the bracelets on my hands and the golden mekalai on my waist grew loose. The roaring of the ocean is muted only for me and increases the pain of my love. (46)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னம் ஆய் அன்னம் போன்றும்; மான் ஆய் மான் போன்றும்; அணி மயிலாய் அழகிய மயில் போன்றும்; ஆங்கு மின்னல் போன்ற; மின் இடையே ஆய் இடையோடும்; இள வேய் மூங்கிலை ஒத்த; இரண்டாய் இரு தோள்களோடும்; இணை இரண்டு கலசம் போன்ற; செப்பு ஆய் மார்பகங்களோடும்; முன் ஆய் கொவ்வைக் கனியை போன்ற; தொண்டை ஆய் அதரத்தோடும்; கெண்டைகுலம் கெண்டை மீன்களை; இரண்டு ஆய் போன்ற கண்களோடும்; அன்ன திரு உருவம் அப்படிப்பட் உருவமான பிராட்டி; நின்றது அருகிலிருப்பதை; அறியாதே அறியாமல்; என்னுடைய நெஞ்சும் அந்த நெஞ்சும்; அறிவும் மற்றும் அறிவும்; இன வளையும் சிறந்த கை வளையும்; பொன் இயலும் தங்கமயமான; மேகலையும் மேகலையும்; ஆங்கு ஒழிய எல்லாம் விட்டு விட்டு நீங்க; போந்தேற்கு பெற்ற எனக்கு இதற்கு மேலும்; மன்னு மறி கடலும் அலையுடைய கடலும்; ஆர்க்கும் எனக்கு மட்டுமே சப்திக்காமல் நிற்கிறது; மதி உகுத்த சந்திரன் வெளியிடுகிற; இன் நிலாவின் இனிய நிலவின்; கதிரும் என் தனக்கே ஒளியும் எனக்கு மட்டும்; வெய்து ஆகும் வெப்பத்தைக் கொடுப்பதாக உள்ளது; தன்னுடைய த ன்மை நிலவின் ஸ்வபாவமாகிய குளிர்த்தி; தவிர தான் தவிர்ந்து இப்படி வெப்பமாகும்படி; என்கொலோ எம்பெருமான் தான் ஏதாவது செய்துவிட்டானோ
annam āy like a swan, in her gait; mān āy like a deer, in her glance; aṇi mayil āy like a beautiful peacock, in her tresses; idai min āy like lightning, in the beauty of her waist; il̤a iraṇdu vĕy āy like two bamboo shoots (for shoulder); iṇai seppu āy like two domes (for bosoms); mun āya thoṇdai āy like the fruit of the hedges creeper in the front (for lips); kulam keṇdai iraṇdāy like two great keṇdai (fresh-water fish, carp or barbus) (for the eyes); anna such; thiru uruvam the divine form of ṣrīdhĕvi (ṣri mahālakshmi); ninṛadhu aṛiyādhĕ not knowing that (she) is standing (nearby); ennudaiya nenjum my heart; aṛivum my knowledge (which is within that heart); inam val̤aiyum distinguished bangles on the hand; pon iyalum mĕgalaiyum golden waist band; ozhiya pŏndhĕṛku for me who has lost (everyone of the above); mannu maṛi kadalum ārkkum even the immobile ocean will roar

PTM 11.45

2757 தென்னன்பொதியில் செழுஞ்சந்தின்தாதளைந்து *
மன்னிவ்வுலகை மனங்களிப்பவந்தியங்கும் *
இன்னிளம்பூந்தென்றலும் வீசுமெரியெனக்கே *
முன்னியபெண்ணைமேல் முள்முளரிக்கூட்டகத்து *
பின்னுமவ்வன்றில் பேடைவாய்ச்சிறுகுரலும் *
என்னுடையநெஞ்சுக்கு ஓரீர்வாளாம் என்செய்கேன்? *
2757 தென்னன் பொதியில் செழும் சந்தின் தாது அளைந்து *
மன் இவ் உலகை மனம் களிப்ப வந்து இயங்கும் *
இன் இளம் பூந் தென்றலும் வீசும் எரி எனக்கே *
முன்னிய பெண்ணைமேல் முள் முளரிக் கூட்டகத்து *
பின்னும் அவ் அன்றில் பேடை வாய்ச் சிறு குரலும் *
என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாளாம் என் செய்கேன்? 45
2757 tĕṉṉaṉ pŏtiyil cĕzhum cantiṉ tātu al̤aintu *
maṉ iv ulakai maṉam kal̤ippa vantu iyaṅkum *
iṉ il̤am pūn tĕṉṟalum vīcum ĕri ĕṉakke *
muṉṉiya pĕṇṇaimel mul̤ mul̤arik kūṭṭakattu *
piṉṉum av aṉṟil peṭai vāyc ciṟu kuralum *
ĕṉṉuṭaiya nĕñcukku or īr vāl̤ām ĕṉ cĕykeṉ? 45

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2757. and the cool moon sheds its hot rays on me. How is it their nature has changed? The sweet breeze carrying the fragrance of the blossoms on the southern king Pandiyan’s mountain Pothiyam, mingled with the smell of sandal wood and the pollen of flowers blows making all the people of the world happy. But to me that fresh breeze is as if burning air were streaming on me. As the andril bird in a nest made of screw pine flower on a palm tree calls her beloved male bird with her small voice it is like a sword splitting open my chest. What can I do? “ (47)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென்னன் தென் திசையில் பாண்டிய அரசனின்; பொதியில் பொதிய மலையிலுள்ள; செழும் சந்தின் அழகிய சந்தன மரத்தின்; தாது பூந்தாதுக்களை; அளைந்து அளைந்து கொண்டு; மன் நித்யமான; இவ் உலகை இந்த உலகத்திலுள்ளவர்கள்; மனம் களிப்ப மனம் மகிழ; வந்து இயங்கும் வந்து உலாவும்; இன் இளம் இனிய இளம்; பூந் தென்றலும் தென்றல் காற்றும்; எனக்கே எனக்கு மட்டும்; வீசும் எரி வெப்பத்தை வீசுகின்றது; முன்னிய எதிரே காணப்படுகிற; பெண்ணைமேல் பனை மரத்தில்; முள் முளரி முள்ளையுடைய தாமரைத் தண்டினால்; கூட்டகத்து செய்யப்பட்ட கூட்டில்; பின்னும் அவ் வாயலகு கோத்துக் கொண்டிருக்கும்; அன்றில் அன்றில்; பெடை வாய் பேடையின் வாயிலிருந்து எழும்; சிறு குரலும் சிறு குரலும்; என்னுடைய நெஞ்சுக்கு என் நெஞ்சை; ஓர் ஈர் வாளாம் பிளக்கும் ஒரு வாளாக இருக்கிறது; என் செய்கேன்? தப்பிப்பிழைக்க நான் என் செய்வேன்?
madhi uguththa in nilā in kadhirum the sweet light emitted by the rays of the moon; en thanakkĕ only for me; veydhu āgum emitted heat; thannudaiya thanmai thavira thān en kol ḍid anyone do anything to convert the natural quality of coolness of the moon to a hot state like this?; thennan podhiyil in the malaiyamalai (podhigai mountain) of the king of pāṇdyas, who is the chief of the southern region; sezhu sandhin thādhu al̤aindhu mixing the pollen from the beautiful sandalwood trees; man i ulagai manam kal̤ippa vandhu iyangum roaming such that the minds of the people, who are in this permanent world, are happy; in il̤a pū thenṛalum the southerly breeśe which is sweet, youthful [full of vigour] and fragrant; enakkĕ eri vīsum is blowing fire only for me; munniya peṇṇai mĕl on the palm tree seen in front; mul̤ mul̤ari kūdu agaththu in the nest made with lotus stem which has thorns; pinnum avvanṛil siṛuvāych chiṛu pedaiyum feeble voice emanating from the mouth of the female love bird which has locked its beak with that of the male; ennudaiya nenjukku ŏr ir vāl̤ ām it is like a unique sword which cut my heart; en seygĕn what means will ī carry out (to escape from this)?

PTM 11.46

2758 கல்நவில்தோள்காமன் கருப்புச்சிலைவளைய *
கொல்நவிலும்பூங்கணைகள் கோத்துப்பொதவணைந்து *
தன்னுடையதோள்கழியவாங்கி * - தமியேன்மேல்
என்னுடையநெஞ்சே இலக்காகவெய்கின்றான் *
பின்னிதனைக் காப்பீர்தாமில்லையே * -
2758 கல் நவில் தோள் காமன் கருப்புச் சிலை வளைய *
கொல் நவிலும் பூங் கணைகள் கோத்துப் பொத அணைந்து *
தன்னுடைய தோள் கழிய வாங்கி * தமியேன்மேல்
என்னுடைய நெஞ்சே இலக்காக எய்கின்றான் *
பின் இதனைக் காப்பீர் தாம் இல்லையே 48
2758 kal navil tol̤ kāmaṉ karuppuc cilai val̤aiya *
kŏl navilum pūṅ kaṇaikal̤ kottup pŏta aṇaintu *
taṉṉuṭaiya tol̤ kazhiya vāṅki * tamiyeṉmel
ĕṉṉuṭaiya nĕñce ilakkāka ĕykiṉṟāṉ *
piṉ itaṉaik kāppīr tām illaiye 48

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2758. She says, “Kama has a sugarcane bow in his arms that are strong as stone. He bends it, flexing his arms, and shoots flower arrows at me with my chest as his target. There is no one to protect me from him. ” (48)

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல் நவில் மலைபோல் திண்ணிய; தோள் தோள்களையுடைய; காமன் கரும்பு மன்மதன் தன் கரும்பு; சிலை வளைய வில்லை வளைத்து; கொல் நவிலும் கூரிய; பூங் கணைகள் புஷ்ப பாணங்களைத் தொடுத்து; கோத்து பொத அந்த வில்லை அழுந்த; அணைந்து அணைத்துக்கொண்டு; தன்னுடைய தோள் தன் தோள் வரையில்; கழிய வாங்கி நீள இழுத்து; என்னுடைய நெஞ்சே என்னுடைய நெஞ்சையே; இலக்காக இலக்காகக் கொண்டு; தமியேன்மேல் துணையற்ற என்மீது; எய்கின்றான் பிரயோகிக்கிறான்; பின் இப்போது இந்த; இதனை ஆபத்திலிருந்து என்னை; காப்பீர் காப்பாற்ற; தான் இல்லையே ஒருவரும் இல்லையோ?
kal navil thŏl̤ kāman manmadha (cupid) who has (firm) shoulders which are like mountain; karuppuch chilai val̤aiya drawing (his) bow made of sugarcane; kol navilum pūngaṇaigal̤ kŏththu (on that bow) stringing arrows made of flowers which are capable of killing; podhavaṇaindhu standing close (to the target) so that the bows will pierce through well; thannudaiya thŏl̤ kazhiya vāngi pulling (the string of the bow) to reach his shoulder; ennudaiya nenjĕ ilakkāga thamilyĕn mĕl eyginṛān keeping my heart as the target he (cupid) is shooting those arrows on me, who is having none to support.; pin idhanai kāppīrdhān illaiyĕ there is none who could now enable me to escape from this danger

PTM 11.47

2759 பேதையேன்
கல்நவிலும்காட்டகத்து ஓர்வல்லிக்கடிமலரின் *
நல்நறுவாசம் மற்றாரானுமெய்தாமே *
மன்னும்வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோல் *
என்னுடையபெண்மையும் என்நலனும்என்முலையும் *
மன்னுமலர்மங்கைமைந்தன் * கணபுரத்துப்
2759 பேதையேன்
கல் நவிலும் காட்டகத்து ஓர் வல்லிக் கடி மலரின் *
நல் நறு வாசம் மற்று ஆரானும் எய்தாமே *
மன்னும் வறு நிலத்து வாளாங்கு உகுத்தது போல் *
என்னுடைய பெண்மையும் என் நலனும் என் முலையும் *
மன்னும் மலர் மங்கை மைந்தன் * கணபுரத்துப் 49
2759 petaiyeṉ
kal navilum kāṭṭakattu or vallik kaṭi malariṉ *
nal naṟu vācam maṟṟu ārāṉum ĕytāme *
maṉṉum vaṟu nilattu vāl̤āṅku ukuttatu pol *
ĕṉṉuṭaiya pĕṇmaiyum ĕṉ nalaṉum ĕṉ mulaiyum *
maṉṉum malar maṅkai maintaṉ * kaṇapurattup 49

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2759. "She says, “I am innocent. What is the use of my being a woman, my beauty and my breasts if I cannot embrace the golden chest of the lord who shines like a golden hill and is the beloved of Lakshmi?" "If my breasts do not embrace the lord of Thirukannapuram my breasts and my beauty will become like a blooming creeper that withers spreading its fragrance in vain in a stony forest in a dry land" "All these things are burden for me. Is there anyone who knows a remedy to stop this pain of love that keeps increasing?( 49, 50)" "The sound of the bells tied on the necks of the cows in the evening is sweet for most people, (51) but to my ears it is as cruel as the sound of a killing spear. Tell me how I can save myself from this pain, tell me. (52) The cloud-colored lord whose chest is adorned with a fragrant thulasi garland gave me this love sickness. ” (53)"

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கல் நவிலும் கல் மயமான; காட்டகத்து ஓர் காட்டினுள்ளே; வல்லிக் கடி ஒரு பூங்கொடியில்; மலரின் பூத்த மலர்களின்; நல் நறு வாசம் நல்ல நறுமணம்; மற்று ஆரானும் வேறு யாருக்கும்; எய்தாமே உபயோகப் படாமல்; மன்னும் வறு நிலத்து வீணாக நிலத்தில்; வாளாங்கு உகுத்தது போல் உதிர்வது போல்; பேதையேன்! அறிவற்றவளான; என்னுடைய என்னுடைய; பெண்மையும் பெண்மையும்; என் நலனும் என் குணங்களும்; என் முலையும் என் ஸ்தனங்களும்; மன்னும் மலர் பூவில் பிறந்த; மங்கை திருமகளின்; மைந்தன் நாதனான; கணபுரத்து திருக்கண்ணபுரத்தில்
kal navilum kādu agaththu in the forest which is full of stones; ŏr valli (blossomed) in a creeper; kadi malarin in a flower full of honey; nal naṛu vāsam great fragrance; maṝu ārānum eydhāmĕ not being useful for anyone; mannum vaṛu nilaththu āngu vāl̤ā uguththadhu pŏl being wasted on the hard ground; pĕdhaiyĕn ennudaiya peṇmai my femininity, ī being ignorant; en nalanum my qualities; en mulaiyum my bosom; malar mangai mannum mandhan being the supreme being who is firmly attained by periya pirātti (ṣrī mahālakshmi) who resides on a flower

PTM 11.48

2760 பொன்மலைபோல்நின்றவன்தன்பொன்னகலம் தோயாவேல் *
என்னிவைதான்? வாளாஎனக்கேபொறையாகி *
முன்னிருந்துமூக்கின்று மூவாமைக்காப்பதோர் *
மன்னுமருந்தறிவீரில்லையே? -
2760 பொன்மலை போல் நின்றவன் தன் பொன் அகலம் தோயாவேல் *
என் இவைதான்? வாளா எனக்கே பொறை ஆகி *
முன் இருந்து மூக்கின்று மூவாமைக் காப்பது ஓர் *
மன்னு மருந்து அறிவீர் இல்லையே? 50
2760 pŏṉmalai pol niṉṟavaṉ taṉ pŏṉ akalam toyāvel *
ĕṉ ivaitāṉ? vāl̤ā ĕṉakke pŏṟai āki *
muṉ iruntu mūkkiṉṟu mūvāmaik kāppatu or *
maṉṉu maruntu aṟivīr illaiye? 50

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2759

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொன் மலை போல் பொன் மலைபோல்; நின்றவன் நிற்பவனாயுமுள்ள; தன் எம்பெருமானுடைய; பொன் அகலம் அழகிய திருமார்பில்; தோயாவேல் சேர்வதற்குப் பயன் படாமல்; என் இவை வியர்த்தமாக; தான் வாளா? இவை எதற்கோ?; எனக்கே என் ஒருத்திக்கே; பொறை ஆகி வீண்பாரமாகி; முன் இருந்து கண்ணெதிரே இருந்து கொண்டு; மூக்கின்று பருக்கும் போது; மூவாமைக் அப்படி வீங்காமல்; காப்பது ஓர் தடுக்க வல்ல; மன்னு மருந்து ஒரு மருந்தும்; அறிவீர் கண்டறிவாராரும்; இல்லையே இல்லையே
kaṇapuraththup ponmalai pŏl ninṛavan than emperumān who stands as a golden mountain in thirukkaṇṇapuram, his; pon agalam thŏyāvĕl we have not attained his beautiful, divine chest; vāl̤ā ivai thān en what is the use of these wasted things?; ivai these bosoms; enakkĕ poṛaiyāgi they have become an unwanted burden even for me; mun irundhu being present right in front of my eyes; mūkkinṛu ageing more and more; mūvāmai kāppadhu ŏr to prevent it from aging like that; mannu marundhu aṛivīr illaiyĕ no one is there who has seen a great medicine

PTM 11.49

2761 மால்விடையின்
துன்னுபிடரெருத்துத் தூக்குண்டு * வன்தொடரால்
கன்னியர்கண்மிளிரக் கட்டுண்டு *
2761 மால் விடையின்
துன்னு பிடர் எருத்துத் தூக்குண்டு
வன் தொடரால் * கன்னியர் கண் மிளிரக் கட்டுண்டு * 51
2761 māl viṭaiyiṉ
tuṉṉu piṭar ĕruttut tūkkuṇṭu
vaṉ tŏṭarāl * kaṉṉiyar kaṇ mil̤irak kaṭṭuṇṭu * 51

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2759

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மால் பசுவை அடைய; விடையின் விரும்பும் காளையின்; துன்னு பிடர் பெருத்த பிடரியிலுள்ள முசுப்பில்; எருத்துத் தூக்குண்டு தூக்கப்பட்டு; கன்னியர் சிறு பெண்களின்; கண் மிளிர கண் களிக்கும்படி; வன் தொடரால் வலிதான கயிற்றால்; கட்டுண்டு கட்டப்பட்டு
māl vidaiyin among the bulls which are infatuated (with cows); thunnu pidar eruththu in the hump of the large nape; thūkkuṇdu being hung

PTM 11.50

2762 மாலைவாய்த் தன்னுடையநாவொழியாது ஆடுந்தனிமணியின் *
இன்னிசையோசையும் வந்தென்செவிதனக்கே *
கொன்நவிலுமெஃகின் கொடிதாய்நெடிதாகும் *
என்னிதனைக்காக்குமா? சொல்லீர் *
2762 மாலைவாய்த் தன்னுடைய நா ஒழியாது ஆடும் தனி மணியின் *
இன் இசை ஓசையும் வந்து என் செவி தனக்கே *
கொல் நவிலும் எஃகில் கொடிது ஆய் நெடிது ஆகும் *
என் இதனைக் காக்குமா? சொல்லீர் 52
2762 mālaivāyt taṉṉuṭaiya nā ŏzhiyātu āṭum taṉi maṇiyiṉ *
iṉ icai ocaiyum vantu ĕṉ cĕvi taṉakke *
kŏl navilum ĕḵkil kŏṭitu āy nĕṭitu ākum *
ĕṉ itaṉaik kākkumā? cŏllīr 52

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2759

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலைவாய் மாலை நேரத்தில்; இன் இசை இனிதான இசையின்; ஓசையும் வந்து ஒலியும் வந்து; தன்னுடைய நா தன் நாக்கு; ஒழியாது ஆடும் ஓயாமல் ஆடிக்கொண்டிருக்க; தனி மணியின் சிறந்த மணியினுடைய ஓசை; என் செவி தனக்கே என் காதுகளுக்கு மட்டும்; கொல் நவிலும் கொடூரமான கூரிய; எஃகில் ஈட்டியைக் காட்டிலும்; கொடிது ஆய் கடுமையாக; நெடிது ஆகும் துன்புறுத்துகிறது; இதனை இதிலிருந்து; காக்கும் ஆ என்? தப்பிக்க என்ன வழி?; சொல்லீர் ஏதாவது உபாயம் இருந்தால் கூறுங்கள்
kanniyar kaṇ mil̤ira such that young girls will roll their eyes (on seeing it); van thodarāl kattuṇdu being tied by a strong rope; mālai vāy during evening time; thannudaiya nā ozhiyādhu ādum thani maṇiyin with the gong of the unparalleled bell striking continuously; in isai ŏsaiyum vandhu coming with a sound as sweet as music; en sevi thanakkĕ only for my ears; kol navilum ehkil kodidhy āy nedidhu āgum it is longer than the spear which is capable of killing, and more cruel than that.; idhanai kākkum ā en what is the way to escape from this grave danger?; solleer Please say (if there is a means available)

PTM 11.51

2763 இதுவிளைத்த
மன்னன்நறுந்துழாய்வாழ்மார்பன் * மாமதிகோள்
முன்னம்விடுத்த முகில்வண்ணன் * -
2763 இது விளைத்த
மன்னன் நறும் துழாய் வாழ் மார்பன் * மா மதிகோள்
முன்னம் விடுத்த முகில் வண்ணன் * 53
2763 itu vil̤aitta
maṉṉaṉ naṟum tuzhāy vāzh mārpaṉ * mā matikol̤
muṉṉam viṭutta mukil vaṇṇaṉ * 53

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2759

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இது இப்படிப்பட்ட நிலைமையை; விளைத்த உண்டு பண்ணின; மன்னன் மஹாநுபாவன்; நறும் யாரெனில் மணம் மிக்க; துழாய் துளசிமாலை; வாழ் அணிந்த; மார்வன் மார்பையுடையவன்; முன்னம் மா மதி முன்பு சந்திரனுடைய; கோள் விடுத்த துன்பத்தைப் போக்கின; முகில் வண்ணன் காளமேக வண்ணன்
idhu vil̤aiththa having created such a situation (by southerly breeśe etc [which have been mentioned earlier]); mannan being great; naṛu thuzhāy vāzh mārban having his chest decorated with the fragrant thul̤asi; munnam mā madhi kŏl̤ viduththa mugil vaṇṇan having the complexion of rain bearing clouds, who, in earlier times, had removed chandhra (moon)’s distress.