PTM 11.50

விடையின் மணிக்குரல் கேட்டு நான் ஏங்குகிறேன்

2762 மாலைவாய்த் தன்னுடையநாவொழியாது ஆடுந்தனிமணியின் *
இன்னிசையோசையும் வந்தென்செவிதனக்கே *
கொன்நவிலுமெஃகின் கொடிதாய்நெடிதாகும் *
என்னிதனைக்காக்குமா? சொல்லீர் *
2762 mālaivāyt taṉṉuṭaiya nā ŏzhiyātu āṭum taṉi maṇiyiṉ *
iṉ icai ocaiyum vantu ĕṉ cĕvi taṉakke *
kŏl navilum ĕḵkil kŏṭitu āy nĕṭitu ākum *
ĕṉ itaṉaik kākkumā? cŏllīr 52

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2759

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாலைவாய் மாலை நேரத்தில்; இன் இசை இனிதான இசையின்; ஓசையும் வந்து ஒலியும் வந்து; தன்னுடைய நா தன் நாக்கு; ஒழியாது ஆடும் ஓயாமல் ஆடிக்கொண்டிருக்க; தனி மணியின் சிறந்த மணியினுடைய ஓசை; என் செவி தனக்கே என் காதுகளுக்கு மட்டும்; கொல் நவிலும் கொடூரமான கூரிய; எஃகில் ஈட்டியைக் காட்டிலும்; கொடிது ஆய் கடுமையாக; நெடிது ஆகும் துன்புறுத்துகிறது; இதனை இதிலிருந்து; காக்கும் ஆ என்? தப்பிக்க என்ன வழி?; சொல்லீர் ஏதாவது உபாயம் இருந்தால் கூறுங்கள்
kanniyar kaṇ mil̤ira such that young girls will roll their eyes (on seeing it); van thodarāl kattuṇdu being tied by a strong rope; mālai vāy during evening time; thannudaiya nā ozhiyādhu ādum thani maṇiyin with the gong of the unparalleled bell striking continuously; in isai ŏsaiyum vandhu coming with a sound as sweet as music; en sevi thanakkĕ only for my ears; kol navilum ehkil kodidhy āy nedidhu āgum it is longer than the spear which is capable of killing, and more cruel than that.; idhanai kākkum ā en what is the way to escape from this grave danger?; solleer Please say (if there is a means available)