Chapter 3

Thiruvinnagar 3 - (துறப்பேன் அல்லேன்)

திருவிண்ணகர் 3
Thiruvinnagar 3 - (துறப்பேன் அல்லேன்)
The āzhvār prays to the Lord of Thiruvinnagar, requesting that He grant him the life of serving in Paramapadam (the eternal abode), where he can engage in divine service.
பரமபதத்திற்கு வந்து, திருத்தொண்டு செய்யும் வாழ்வைத் தமக்கு அளிக்குமாறு திருவிண்ணகர்ப் பெருமாளை ஈண்டு ஆழ்வார் வேண்டுகிறார்.
Verses: 1468 to 1477
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: பழந்தக்கராகம்
Recital benefits: Getting freed from all hurdles
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 6.3.1

1468 துறப்பேனல்லேன் இன்பம், துறவாது * நின்னுருவம்
மறப்பேனல்லேன் என்றும்மறவாது * யான்உலகில்
பிறப்பேனாகஎண்ணேன் பிறவாமைபெற்றது * நின்
திறத்தேனாதன்மையால் திருவிண்ணகரானே! (2)
1468 ## துறப்பேன் அல்லேன் * இன்பம் துறவாது * நின் உருவம்
மறப்பேன் அல்லேன் * என்றும் மறவாது ** யான் உலகில்
பிறப்பேன் ஆக எண்ணேன் * பிறவாமை பெற்றது * நின்
திறத்தேன் ஆதன்மையால் * திருவிண்ணகரானே 1
1468 ## tuṟappeṉ alleṉ * iṉpam tuṟavātu * niṉ uruvam
maṟappeṉ alleṉ * ĕṉṟum maṟavātu ** yāṉ ulakil
piṟappeṉ āka ĕṇṇeṉ * piṟavāmai pĕṟṟatu * niṉ
tiṟatteṉ ātaṉmaiyāl * -tiruviṇṇakarāṉe-1

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1468. I will not lose the divine pleasures that I receive from you. I will not forget your beautiful form ever. I do not want to be born in this world again and because of your grace, I will not be born again, O god of Thiruvinnagar, all I have is because of your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவிண்ணகரானே! திருவிண்ணகரத்திலிருப்பவனே!; அல்லேன் உன்னுடன் அனுபவித்த; இன்பம் இன்பத்தை; துறப்பேன் துறக்கமாட்டேன்; துறவாது அந்த இன்பத்தை விடாமையாவது; நின் உருவம் உன் அழகை; மறப்பேன் அல்லேன் மறக்கமாட்டேன்; என்றும் என்றும்; மறவாது யான் மறவாதவனாகி நான்; உலகில் உலகில்; பிறப்பேன் ஆக பிறப்பேன் என்று; எண்ணேன் நினைக்கவில்லை; பிறவாமை பிறவாமை; நின் திறத்தேன் உன் அருளால் உனக்கு; ஆதன்மையால் அடிமையானதால்; பெற்றது பெற்றது

PT 6.3.2

1469 துறந்தேன் ஆர்வச்செற்றச்சுற்றம் துறந்தமையால் *
சிறந்தேன்நின்னடிக்கே அடிமை திருமாலே! *
அறந்தானாய்த்திரிவாய்! உன்னைஎன்மனத்தகத்தே *
திறம்பாமல்கொண்டேன் திருவிண்ணகரானே!
1469 துறந்தேன் ஆர்வச் செற்றச் * சுற்றம் துறந்தமையால் *
சிறந்தேன் நின் அடிக்கே * அடிமை திருமாலே **
அறம் தான் ஆய்த் திரிவாய் * உன்னை என் மனத்து அகத்தே *
திறம்பாமல் கொண்டேன் * திருவிண்ணகரானே 2
1469 tuṟanteṉ ārvac cĕṟṟac * cuṟṟam tuṟantamaiyāl *
ciṟanteṉ niṉ aṭikke * aṭimai tirumāle **
aṟam-tāṉ āyt tirivāy * uṉṉai ĕṉ maṉattu akatte *
tiṟampāmal kŏṇṭeṉ * -tiruviṇṇakarāṉe-2

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1469. I do not love or hate anyone. I left my family and all other relatives and friends and became a good person. I, your slave, worship your feet, O Thirumāl. You the god of Thiruvinnagar are dharma itself. I received you in my heart and I will not let you leave it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவிண்ணகரானே! திருவிண்ணகரத்திலிருப்பவனே; திருமாலே! திருமாலே!; அறம் உண்மையான தருமமே; தானாய் வடிவாய் இருப்பவனே!; திரிவாய்! அருள் புரிய காலம் பார்த்து திரிபவனே!; சுற்றம் உறவையும்; ஆர்வச் செற்ற அன்பையும் விரோதத்தையும்; துறந்தேன் துறந்தேன் விட்டேன்; துறந்தமையால் விட்டதனால்; நின் அடிக்கே உன் திருவடிகளுக்கே; அடிமை கைங்கர்யம் செய்ய; சிறந்தேன் தகுதி பெற்றேன்; உன்னை உன்னை; என் மனத்து அகத்தே என் மனத்துள்; திறம்பாமல் திறம்பட; கொண்டேன் வைத்துக்கொண்டேன்

PT 6.3.3

1470 மானேய்நோக்குநல்லார் மதிபோல்முகத்துஉலவும் *
ஊனேய்கண்வாளிக்கு உடைந்தோட்டந்துஉன்னடைந்தேன் *
கோனே! குறுங்குடியுள்குழகா! திருநறையூர்த்
தேனே! * வருபுனல்சூழ் திருவிண்ணகரானே!
1470 மான் ஏய் நோக்கு நல்லார் * மதிபோல் முகத்து உலவும் *
ஊன் ஏய் கண் வாளிக்கு * உடைந்து ஓட்டந்து உன் அடைந்தேன் **
கோனே குறுங்குடியுள் குழகா * திருநறையூர்த்
தேனே * வரு புனல் சூழ் * திருவிண்ணகரானே 3
1470 māṉ ey nokku nallār * matipol mukattu ulavum *
ūṉ ey kaṇ vāl̤ikku * uṭaintu oṭṭantu uṉ aṭainteṉ ** -
koṉe kuṟuṅkuṭiyul̤ kuzhakā * tirunaṟaiyūrt
teṉe * varu puṉal cūzh * tiruviṇṇakarāṉe-3

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

1470. I am afraid and tremble when I see beautiful women with soft glances like does, lovely faces like the moon and sharp eyes like arrows that can hurt anyone. I was frightened, ran and came to you, O lord, handsome god of Thirukkurungudi. You are the honey of Thirunaraiyur and you stay in Thiruvinnagar surrounded with abundant water.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குறுங்குடியுள் குறுங்குடியுள்; கோனே! இருக்கும் அரசனே!; குழகா! கலந்து பழக எளியவனே!; திருநறையூர்த் தேனே! திருநறையூர்த் தேனே!; வரு புனல் சூழ் பெருகிவரும் நீர் சூழ்ந்த; திருவிண்ணகரானே! திருவிண்ணகரத்திலிருப்பவனே!; மான் ஏய் நோக்கு மான் பார்வையுள்ள; நல்லார் பெண்களின்; மதி போல் சந்திரன் போன்ற; முகத்து உலவும் முகத்தில் உலாவும்; ஊன் ஏய் உடலிலிருக்கும்; கண்வாளிக்கு கண்களாகிற பாணத்துக்கு; உடைந்து ஓட்டந்து அஞ்சி நடுங்கி ஓடி வந்து; உன் அடைந்தேன் உன்னை அடைந்தேன்

PT 6.3.4

1471 சாந்தேந்துமென்முலையார் தடந்தோள்புணரின்பவெள்ளத்து
ஆழ்ந்தேன் * அருநகரத்தழுந்தும் பயன்படைத்தேன் *
போந்தேன்புண்ணியனே! உனையெய்தியென் தீவினைகள்
தீர்ந்தேன் * நின்னடைந்தேன் திருவிண்ணகரானே!
1471 சாந்து ஏந்து மென் முலையார் * தடந் தோள் புணர் இன்ப வெள்ளத்து
ஆழ்ந்தேன் * அரு நரகத்து அழுந்தும் * பயன் படைத்தேன் **
போந்தேன் புண்ணியனே * உன்னை எய்தி என் தீவினைகள்
தீர்ந்தேன் * நின் அடைந்தேன் * திருவிண்ணகரானே 4
1471 cāntu entu mĕṉ mulaiyār * taṭan tol̤ puṇar iṉpa vĕl̤l̤attu
āzhnteṉ * aru narakattu azhuntum * payaṉ paṭaitteṉ **
ponteṉ puṇṇiyaṉe * uṉṉai ĕyti ĕṉ tīviṉaikal̤
tīrnteṉ * niṉ aṭainteṉ * -tiruviṇṇakarāṉe-4

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1471. I was plunged into a flood of joy, as I embraced the beautiful arms of women with soft breasts smeared with sandal paste. But now I fell into the sorrow of hell for the rest of my life. You are virtuous and compassionate and since I approached you all my bad karmā is gone, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவிண்ணகரானே! திருவிண்ணகரானே!; புண்ணியனே! புண்ணியனே!; சாந்து ஏந்து சாந்து அணிந்த; மென் முலையார் ஸ்தனங்களையுடைய; தடந்தோள் பெண்களை; புணர் அணைவதினால் உண்டாகும்; இன்ப வெள்ளத்து இன்ப வெள்ளத்தில்; ஆழ்ந்தேன் மூழ்கி இருந்தேன்; அரு நரகத்து கொடிய ஸம்ஸாரமாகிய; அழுந்தும் நரகத்திலிருக்கும்; பயன் பயனை; படைத்தேன் பெற்றேன் பின்பு; போந்தேன் வந்து உன்னை; நின் அடைந்தேன் சரண் அடைந்தேன்; உனை எய்தி உன்னை சரண் அடைந்தபின்; என் தீவினைகள் என் கொடிய பாபங்கள்; தீர்ந்தேன் தீரப்பெற்றேன்

PT 6.3.5

1472 மற்றோர்தெய்வம்எண்ணேன் உன்னைஎன்மனத்துவைத்துப்
பெற்றேன் * பெற்றதுவும்பிறவாமை எம்பெருமான்! *
வற்றாநீள்கடல்சூழ்இலங்கையிராவணனைச்
செற்றாய் * கொற்றவனே! திருவிண்ணகரானே!
1472 மற்று ஓர் தெய்வம் எண்ணேன் * உன்னை என் மனத்து வைத்துப்
பெற்றேன் * பெற்றதுவும் பிறவாமை எம் பெருமான் **
வற்றா நீள் கடல் சூழ் * இலங்கை இராவணனைச் *
செற்றாய் கொற்றவனே * திருவிண்ணகரானே 5
1472 maṟṟu or tĕyvam ĕṇṇeṉ * uṉṉai ĕṉ maṉattu vaittup
pĕṟṟeṉ * pĕṟṟatuvum piṟavāmai-ĕm pĕrumāṉ **
vaṟṟā nīl̤ kaṭal cūzh * ilaṅkai irāvaṇaṉaic *
cĕṟṟāy kŏṟṟavaṉe * tiruviṇṇakarāṉe-5

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1472. You are the highest and victorious lord and I do not think of any god but you. I will not be born again because I have the fortune of keeping you in my mind who destroyed Rāvana the king of Lankā surrounded by the ocean that never dries, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வற்றா நீள் வற்றாத; கடல் சூழ் பெரியகடலால் சூழந்த; இலங்கை இலங்கை அரசன்; இராவணனை இராவணனை; செற்றாய்! அழித்தவனே!; கொற்றவனே அரசனே!; திருவிண்ணகரானே! திருவிண்ணகரானே!; மற்று ஓர் தெய்வம் மற்றோர் தெய்வத்தை; எண்ணேன் நினைக்கவும் மாட்டேன்; எம்பெருமான்! எம்பெருமானே!; உன்னை சிறப்பு உடைய உன்னை; என் மனத்து வைத்து என் மனத்தில் வைத்து; பெற்றேன் ஒரு பேறு பெற்றேன் அப்படி நான்; பெற்றதுவும் பெற்ற பேறு; பிறவாமை பிறவாமை என்பது

PT 6.3.6

1473 மையொண்கருங்கடலும் நிலனும்மணிவரையும் *
செய்யசுடரிரண்டும் இவையாயநின்னை * நெஞ்சில்
உய்யும்வகையுணர்ந்தேன் உண்மையால் இனி * யாதுமற்றோர்
தெய்வம்பிறிதறியேன் திருவிண்ணகரானே!
1473 மை ஒண் கருங் கடலும் * நிலனும் மணி வரையும் *
செய்ய சுடர் இரண்டும் * இவை ஆய நின்னை ** நெஞ்சில்
உய்யும் வகை உணர்ந்தேன் * உண்மையால் இனி * யாதும் மற்று ஓர்
தெய்வம் பிறிது அறியேன் * திருவிண்ணகரானே 6
1473 mai ŏṇ karuṅ kaṭalum * nilaṉum maṇi varaiyum *
cĕyya cuṭar iraṇṭum * ivai āya niṉṉai ** nĕñcil
uyyum vakai uṇarnteṉ * uṇmaiyāl iṉi * yātum maṟṟu or
tĕyvam piṟitu aṟiyeṉ * -tiruviṇṇakarāṉe-6

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1473. You are the ocean, dark as kohl, the earth, the beautiful mountains, the bright sun and the moon. I know that you are in my heart and you will save me. Truly I will not think of any other gods from now on, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மை ஒண் மை போன்று அழகிய; கருங் கடலும் கருத்த கடலும்; நிலனும் பூமியும்; மணி வரையும் அழகிய மலைகளும்; செய்ய சுடர் அழகிய ஒளியுள்ள; இரண்டும் இரண்டு சூரிய சந்திரர்களும்; இவை ஆய ஆகிய இப்பொருள்களாய் இருக்கும்; நின்னை நெஞ்சில் உன்னை மனதினால்; உய்யும் வகை உய்யும் வகையை; உண்மையால் உள்ளபடி உண்மையாக; உணர்ந்தேன் உணர்ந்தேன்; இனி யாதும் மற்று ஓர் இனி மேல் மற்று ஓர்; தெய்வம் பிறிது தெய்வத்தை; அறியேன் நினைக்கமாட்டேன்; திருவிண்ணகரானே! திருவிண்ணகரானே!

PT 6.3.7

1474 வேறேகூறுவதுண்டு அடியேன்விரித்துரைக்கு
மாறே * நீபணியாதுஅடை நின்திருமனத்து *
கூறேன்நெஞ்சுதன்னால் குணங்கொண்டு * மற்றோர்தெய்வம்
தேறேன்உன்னையல்லால் திருவிண்ணகரானே!
1474 வேறே கூறுவது உண்டு * அடியேன் விரித்து உரைக்கும்
ஆறே * நீ பணியாது அடை * நின் திருமனத்து **
கூறேன் நெஞ்சு தன்னால் * குணம் கொண்டு * மற்று ஓர் தெய்வம்
தேறேன் உன்னை அல்லால் * திருவிண்ணகரானே 7
1474 veṟe kūṟuvatu uṇṭu * aṭiyeṉ virittu uraikkum
āṟe * nī paṇiyātu aṭai * niṉ tirumaṉattu **
kūṟeṉ nĕñcu-taṉṉāl * kuṇam kŏṇṭu * maṟṟu or tĕyvam
teṟeṉ uṉṉai allāl * -tiruviṇṇakarāṉe-7

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1474. People can say whatever they like, but I, your slave, will tell what I know— please keep this in your mind. I will not think of any other gods but you and I will not praise them, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவிண்ணகரானே! திருவிண்ணகரானே!; வேறே கூறுவது தனிமையில் கூறுவது; உண்டு ஒன்று உண்டு; அடியேன் விரித்து நான் விஸ்தாரமாக; உரைக்கும் சொல்லும்படி; ஆறே நீ பணியாது நீ பண்ணாமல்; நின் திருமனத்து உன் திருவுள்ளத்தில்; அடை என் விண்ணப்பத்தை ஏற்க வேண்டும்; மற்று ஓர் தெய்வம் மற்று ஓர் தெய்வத்தின்; குணங் கொண்டு குணங்களைக் கண்டாலும்; நெஞ்சு தன்னால் வாய்விட்டு; கூறேன் சொல்லமாட்டேன்; உன்னை உன்னைத் தவிர; அல்லால் மற்றவர்களை; தேறேன் நம்பமாட்டேன்

PT 6.3.8

1475 முளிந்தீந்தவெங்கடத்து மூரிப்பெருங்களிற்றால் *
விளிந்தீந்தமாமரம்போல் வீழ்ந்தாரைநினையாதே *
அளிந்தோர்ந்தசிந்தை நின்பால்அடியேற்கு * வானுலகம்
தெளிந்தேஎன்றுஎய்துவது? திருவிண்ணகரானே!
1475 முளிந்தீந்த வெம் கடத்து * மூரிப் பெருங் களிற்றால் *
விளிந்தீந்த மா மரம்போல் * வீழ்ந்தாரை நினையாதே **
அளிந்து ஓர்ந்த சிந்தை * நின்பால் அடியேற்கு * வான் உலகம்
தெளிந்தே என்று எய்துவது? * திருவிண்ணகரானே 8
1475 mul̤intīnta vĕm kaṭattu * mūrip pĕruṅ kal̤iṟṟāl *
vil̤intīnta mā marampol * vīzhntārai niṉaiyāte **
al̤intu ornta cintai * niṉpāl aṭiyeṟku * vāṉ-ulakam
tĕl̤inte ĕṉṟu ĕytuvatu? * tiruviṇṇakarāṉe-8

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1475. There are many who fall like trees in terrible burning deserts knocked over by wild elephants. I don’t want to think of myself as one of them and plunge into sorrow. When can I think only of you? When will I reach the world in the sky, O god of Thiruvinnagar?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முளிந்தீந்த உலர்ந்து எரிந்துபோன; வெங் கடத்து கொடிய காட்டில்; மூரிப் பெருங் வலிய பெரிய; களிற்றால் யானையினால்; விளிந்தீந்த தள்ளப்பட்ட; மா மரம் போல் பெரிய மரம் போல்; வீழ்ந்தாரை வீழ்ந்தவரை; நினையாதே நினையாமல்; நின்பால் உன் விஷயத்தில்; தெளிந்தே தெளிந்த; அளிந்து ஓர்ந்த கனிந்த; சிந்தை மனமுடையேனான; அடியேற்க்கு எனக்கு; வான் உலகம் பரமபதத்தை; என்று எய்துவது? எப்போது அருள்வாய்?; திருவிண்ணகரானே! திருவிண்ணகரானே!

PT 6.3.9

1476 சொல்லாய்திருமார்வா! உனக்காகித்தொண்டுபட்ட
நல்லேனை * வினைகள்நலியாமை நம்புநம்பீ *
மல்லா! குடமாடி! மதுசூதனே! * உலகில்
செல்லாநல்லிசையாய்! திருவிண்ணகரானே!
1476 சொல்லாய் திரு மார்வா * உனக்கு ஆகித் தொண்டு பட்ட
நல்லேனை * வினைகள் நலியாமை நம்பு ** நம்பீ
மல்லா குடம் ஆடீ * மதுசூதனே * உலகில்
செல்லா நல் இசையாய் * திருவிண்ணகரானே 9
1476 cŏllāy tiru mārvā * uṉakku ākit tŏṇṭu paṭṭa
nalleṉai * viṉaikal̤ naliyāmai nampu ** -nampī
mallā kuṭam āṭī * matucūtaṉe * ulakil
cĕllā nal icaiyāy * tiruviṇṇakarāṉe-9

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1476. O lord with Lakshmi on your chest, I am your slave and have done service for you. O Nambi, give me your grace so my bad karmā does not afflict me. Tell me, my lord. You. a wrestler, danced on a pot and killed the Asuran Madhu. Your fame will never disappear from this world, O god of Thiruvinnagar.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்லா! பலசாலியானவனே!; குடம் ஆடீ! குடக்கூத்தாடினவனே!; மதுசூதனே! மதுசூதனனே!; உலகில் செல்லா உலகில் அபூர்வமான; நல் இசையாய்! நல்ல கீர்த்தியை; நம்பீ உடையவனே! குணபூர்ணனே!; திருவிண்ணகரானே! திருவிண்ணகரானே!; திருமார்வா! திருமார்வா!; சொல்லாய் சொல்வாயா; உனக்கு ஆகித் உனக்கு; தொண்டு பட்ட அடிமையான என்னை; வினைகள் பாவங்கள் தொந்தரவு; நல்லேனை செய்யாதபடி; நலியாமை நம்பு ஆதரித்தருள வேண்டும்

PT 6.3.10

1477 தாரார்மலர்க்கமலத் தடம்சூழ்ந்ததண்புறவில் *
சீரார்நெடுமறுகில் திருவிண்ணகரானை *
காரார்புயல்தடக்கைக் கலியனொலிமாலை *
ஆரார்இவைவல்லார் அவர்க்குஅல்லல்நில்லாவே. (2)
1477 ## தார் ஆர் மலர்க் கமலத் * தடம் சூழ்ந்த தண் புறவில் *
சீர் ஆர் நெடு மறுகின் * திருவிண்ணகரானை **
கார் ஆர் புயல் தடக் கைக் * கலியன் ஒலி மாலை *
ஆர் ஆர் இவை வல்லார் * அவர்க்கு அல்லல் நில்லாவே 10
1477 ## tār ār malark kamalat * taṭam cūzhnta taṇ puṟavil *
cīr ār nĕṭu maṟukiṉ * tiruviṇṇakarāṉai **
kār ār puyal taṭak kaik * kaliyaṉ ŏli mālai *
ār ār ivai vallār * avarkku allal nillāve-10

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1477. Kaliyan, the poet, as generous as a rain-giving cloud, composed a garland of ten Tamil pāsurams on the god of Thiruvinnagar surrounded by flourishing groves and ponds blooming with lotuses. If devotees learn and recite these pāsurams no troubles will come to them in their lives.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தார் ஆர் இதழ்மிக்க; மலர் பூக்களையுடைய; கமல தடம் தாமரை; சூழ்ந்த தடாகங்கள் சூழ்ந்த; தண் குளிர்ந்த; புறவில் தோட்டங்களும்; சீர் ஆர் செல்வம் மிக்க; நெடு மறுகின் நீண்ட வீதிகளும் உள்ள; திருவிண்ணகரானை திருவிண்ணகரானைக் குறித்து; கார் ஆர் புயல் காளமேகம் போன்ற நீண்ட ஓளதார்யனுடைய; தடக்கை பரந்த கைகளையுடைய; கலியன் திருமங்கை ஆழ்வார்; ஒலிமாலை அருளிச்செய்த; ஆர் ஆர் இவை இப்பாசுரங்களை; வல்லார் ஓதுபவர்களுக்கு; அவர்க்கு அவர்க்கு; அல்லல் நில்லாவே பாவங்கள் நில்லாது