PT 6.3.8

நான் பரமபதம் அடைவது எப்பொழுது?

1475 முளிந்தீந்தவெங்கடத்து மூரிப்பெருங்களிற்றால் *
விளிந்தீந்தமாமரம்போல் வீழ்ந்தாரைநினையாதே *
அளிந்தோர்ந்தசிந்தை நின்பால்அடியேற்கு * வானுலகம்
தெளிந்தேஎன்றுஎய்துவது? திருவிண்ணகரானே!
1475 mul̤intīnta vĕm kaṭattu * mūrip pĕruṅ kal̤iṟṟāl *
vil̤intīnta mā marampol * vīzhntārai niṉaiyāte **
al̤intu ornta cintai * niṉpāl aṭiyeṟku * vāṉ-ulakam
tĕl̤inte ĕṉṟu ĕytuvatu? * tiruviṇṇakarāṉe-8

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1475. There are many who fall like trees in terrible burning deserts knocked over by wild elephants. I don’t want to think of myself as one of them and plunge into sorrow. When can I think only of you? When will I reach the world in the sky, O god of Thiruvinnagar?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முளிந்தீந்த உலர்ந்து எரிந்துபோன; வெங் கடத்து கொடிய காட்டில்; மூரிப் பெருங் வலிய பெரிய; களிற்றால் யானையினால்; விளிந்தீந்த தள்ளப்பட்ட; மா மரம் போல் பெரிய மரம் போல்; வீழ்ந்தாரை வீழ்ந்தவரை; நினையாதே நினையாமல்; நின்பால் உன் விஷயத்தில்; தெளிந்தே தெளிந்த; அளிந்து ஓர்ந்த கனிந்த; சிந்தை மனமுடையேனான; அடியேற்க்கு எனக்கு; வான் உலகம் பரமபதத்தை; என்று எய்துவது? எப்போது அருள்வாய்?; திருவிண்ணகரானே! திருவிண்ணகரானே!