PT 6.3.1

திருவிண்ணகரானே! நின்னுருவத்தை மறவேன்

1468 துறப்பேனல்லேன் இன்பம், துறவாது * நின்னுருவம்
மறப்பேனல்லேன் என்றும்மறவாது * யான்உலகில்
பிறப்பேனாகஎண்ணேன் பிறவாமைபெற்றது * நின்
திறத்தேனாதன்மையால் திருவிண்ணகரானே! (2)
1468 ## tuṟappeṉ alleṉ * iṉpam tuṟavātu * niṉ uruvam
maṟappeṉ alleṉ * ĕṉṟum maṟavātu ** yāṉ ulakil
piṟappeṉ āka ĕṇṇeṉ * piṟavāmai pĕṟṟatu * niṉ
tiṟatteṉ ātaṉmaiyāl * -tiruviṇṇakarāṉe-1

Ragam

Ānandabhairavi / ஆனந்தபைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1468. I will not lose the divine pleasures that I receive from you. I will not forget your beautiful form ever. I do not want to be born in this world again and because of your grace, I will not be born again, O god of Thiruvinnagar, all I have is because of your grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திருவிண்ணகரானே! திருவிண்ணகரத்திலிருப்பவனே!; அல்லேன் உன்னுடன் அனுபவித்த; இன்பம் இன்பத்தை; துறப்பேன் துறக்கமாட்டேன்; துறவாது அந்த இன்பத்தை விடாமையாவது; நின் உருவம் உன் அழகை; மறப்பேன் அல்லேன் மறக்கமாட்டேன்; என்றும் என்றும்; மறவாது யான் மறவாதவனாகி நான்; உலகில் உலகில்; பிறப்பேன் ஆக பிறப்பேன் என்று; எண்ணேன் நினைக்கவில்லை; பிறவாமை பிறவாமை; நின் திறத்தேன் உன் அருளால் உனக்கு; ஆதன்மையால் அடிமையானதால்; பெற்றது பெற்றது